தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறார் 57-0407M 1. [சகோதரன் நெவில், “சகோதரன் பிரான்ஹாம், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்கிறார்.] எனக்காக ஜெபியுங்கள். [“ஆமென்”—ஆசி.] 2 காலை வணக்கம் நண்பர்களே. கர்த்தருடைய ஆராதனையில் இந்தக் காலை இங்கு இருப்பதும், இந்த அற்புதமான வரவேற்பையும், ஐக்கியத்தையும் உணருவது ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. அந்த வரவேற்கும் ஆவியை உணர்வது ஒரு பிரயாணியின் இருதயத்திற்கு அப்படியே என்னவோ காரியமாய் கருதப்படுகிறது. உங்களுக்குத் தெரியும், அது வெறுமனே உங்களிடத்திற்கு வருகிறது. அங்கே ஏதோ காரியம் இருக்கிறது, அது இதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளுகிறதில்லை. மீண்டும் கூடாரத்திற்கு திரும்பி வருவதும், நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தரின் ஆராதனையிலும் கூட இருப்பதற்கும் ஏற்றதாய் உள்ளது. 3 இப்பொழுது நமக்கு குழந்தைகளுக்காக சில பிரதிஷ்டை ஆராதனைகள் உள்ளன. ஆனால் ஒருவேளை நாம் அதை ஒரு சில நிமிடங்களில் முடித்து விடலாம் என்று நான் நினைக்கிறேன். 4 நாம் ஈஸ்டரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அது ஏறக்குறைய இருபத்தியோன்றிலே வருகிறதென்று நான் நினைக்கிறேன். மூப்பர்களையும், சகோதரன் நெவிலையும் பார்ப்பதற்காக, சிறிது சீக்கிரமாய் இங்கே வருவதற்கு நான் வாஞ்சித்துக் கொண்டிருந்தேன். மேலும் கிட்டத்தட்ட…நான்…ஈஸ்டர் ஆராதனைக்கு முன்னர் நமக்கு இங்கே ஒரு கூட்டம் இருந்தால் அது ஒரு நல்ல காரியமாய் ஒருக்கால் இருக்கலாம். உதாரணமாக ஒரு வேளை புதன்கிழமை துவங்கி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் சென்று, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டரிலே ஞானஸ்நான ஆராதனையோடு முடிக்கலாம். எல்லோரும் ஒன்று கூடுகிற ஒரு சிறு…ஒரு கூட்டமாய் இருக்கும். இது நான் தாலாட்டப்பட்ட சிறிய ஜெபக்கூடாரமாய் இருக்கிறது. இது என்னுடைய முதல் சபையாயும் மற்றும் ஒரே சபையாயும் இருக்கிறது. இந்த பரிசுத்த நாட்களுக்காகவும், உங்களெல்லாரோடும் சேர்ந்து கர்த்தரை ஆராதிக்க திரும்பி வரும்படியாகவும் நான் விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அதற்கு சாதகமாயிருப்பீர்களென்றும், அது கர்த்தருடைய சித்தமாய் இருக்குமா என்றும் நான் நினைக்கிறேன். [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] ஆம். நல்லது, கர்த்தருக்கு சித்தமானால் ஞாயிற்று கிழமை ஈஸ்டருக்கு முன்னதாகவே புதன்கிழமை நாம் துவங்குவோம். 5 ஒருக்கால் நாம் நம்முடைய பொருளாளரையும், அல்லது தர்மகர்த்தாக்களையும், மற்றவர்களையும், அவர்கள் பத்திரிக்கையில் இங்கே எங்கேயாவது ஒரு சிறிய விளம்பரத்தைப் போட கேட்கலாமா என்று கூற நான் விரும்புகிறேன். பிள்ளைகளிடத்தில் நாம் இங்கே ஆராதிக்க வருகிறோம் என்றும், அவர்களெல்லாரோடும் சேர்ந்து ஒரு சிறு ஆராதனையை வைக்க நாம் விரும்புகிறோம் என்றும் கூறுங்கள். ஒருவிதமாக வீட்டிற்கு வந்து ஆயத்தப்படுத்துவது போன்று… 6 ஒருக்கால் வருகின்ற இந்த ஈஸ்டரில், அவருடைய ஆவியின் ஒரு—ஒரு—ஒரு மகத்தான பகுதியான ஒரு உயிர்த்தெழுதலை கர்த்தர் நமக்கு கொடுக்கலாம். அது…அது இலையுதிர் காலத்தைப் போன்றும், வசந்த காலத்தைப் போன்றுமுள்ளது. வசந்த காலம் அவ்வளவு ஒரு அழகான காலம் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு காரியங்களும் புதிய உருவத்தை, புதிய ஜீவனை எடுக்கத் துவங்கும்போது நமக்கு உயிர்த்தெழுதலை ஞாபகப்படுத்துகிறது. ஈஸ்டரானது அத்தகைய ஒரு சரியான நேரத்தில், வசந்த காலத்தில் வருகிறது. நாம் கவனித்துப் பார்த்தால், தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் சரியாக அவருடைய இயற்கை முதலானவைகளோடு இசைந்தே ஓடுகிறது. ஆகையால் நாம்… 7 கர்த்தருக்கு சித்தமாயிருந்தால், இப்பொழுது, நாம் இதை துவங்குவோம். அவர்கள் பத்திரிக்கையில் ஒரு சிறு விளம்பரத்தை கொடுத்தால் நல்லது என்று நான் கூறினேன். அதை வசீகரமாக்க வேண்டாம். நாம் ஒன்று சேர்ந்து கர்த்தரை ஆராதிக்க விரும்புகிறோம் என்று வெறுமெனே ஜனங்களுக்கு கூறுங்கள். எத்தனை பேர் வரவிரும்பினாலும், நாம் அதை விரும்புவோம். ஒரு சிறுபொழுது எங்களோடு ஐக்கியங்கொள்ளுங்கள். எல்லா சபைகளையுமே, அவர்கள் வருவதை ஏற்றுக் கொள்ள நாங்கள் சந்தோஷப்படுவோம். 8 நீங்கள் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, உங்களுடைய அயலவர்களுக்கு அதைக் குறித்து சொல்லுங்கள். நாங்கள் கர்த்தரைக் குறித்துப் பேசப் போகிறோம், எல்லாரும் அவரை ஒன்று சேர்ந்து ஆராதிப்போம் என்று அவர்களிடம் கூறுங்கள். 9 நான் ஒருவிதமான அசைவை உண்டாக்க, அது ஜனங்களுக்கு பிரியமுள்ளதாயும், தேவனுடைய பார்வையில் நன்மையாயும், மூவரின் அமைப்போடு முழுவதும் சரியாயுமிருக்குமானால் அந்த தருணத்திலே நெவிலினுடைய மூவர் அமைப்பு நமக்கு உதவி செய்யும்படியாக நான் விரும்புவேன். நீங்கள் அனைவரும் விரும்ப மாட்டீர்களா? [சபையார், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] அது சரி. ஆகையால் அவைகள் இந்த விதத்தில் அக்கறை எடுக்கப்படுகின்றதையும், நமக்காக அதைச் செய்வதற்கு பொருத்தமாக, அந்த விதமாக கர்த்தர் அதைக் காண்பிக்கிறாரா என்று நாம் பார்ப்போம். எனவே நாங்கள் தொடர்ந்து நடத்துகையில் எங்களுக்கு உதவி செய்யவும், உள்ளே வரவும், வித்தியாசமான சபைகளிலிருந்து மற்ற பாடகர்களை நாங்கள் அழைக்கிறோம். உங்களுடைய சபையிலிருந்து வரும் பாடகர்களை, அவர்களை ஏற்றுக் கொள்ள நாங்கள் சந்தோஷப்படுவோம். பாருங்கள், சகோதரன் நெவில் ஒருவேளை முந்தின இரவே அவர்களை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டு எங்களுக்காக பாட வைக்க முயற்சிப்பார். 10 நன்றாக பாடுவதை நாங்கள் நேசிக்கிறோம். நாம் எங்கே ஒன்று கூடி வருகிறோமோ அங்கே ஒரு நல்ல, பழைய மாதிரியான வீட்டிற்கு வருகின்ற நேரம் நமக்கு இருக்க நான் விரும்புகிறேன். ஆஞ்சியை (Angie) தேடிப்பிடியுங்கள். அங்கே…சகோதரி ஆஞ்சி இந்த காலையில் இங்கே இருக்கிறார்களா? வெளியிலிருக்கும் அவளை அழைத்து வாருங்கள். எனவே அவளும், சகோதரி கெர்ட்டியும் நமக்காக வீட்டிற்கு திரும்பும் நேரம், தொடர்ந்து பற்றிக் கொண்டு இருங்கள் என்ற பாடலை ஒருமுறை பாடக்கூடும். சகோதரி கெர்ட்டி, அது மீண்டும் ஒரு எழுப்புதலின் ஆரம்பத்தைப் போன்ற ஒரு காரியமாய் தோன்றலாம். நாம் அதை இங்கே வழக்கமாக பாடத் துவங்கினது முதற்கொண்டே, தண்ணீரைப் போன்ற ஏராளமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 11 நேற்றைய தினம் என்னுடைய பிறந்தநாளாய் இருந்தது. நான்—நான் இனி ஒன்றும் பையன் அல்ல என்பது எனக்குத் தெரியும். நான், “இப்பொழுது நான் இருபத்திநான்கை கடந்து விட்டேன். ஆகையால்…” என்றன். ஆகையால் அதுவே சரியாக என்னுடைய வருடங்களாய் இருக்கிறது. சரியாக எனக்கிருந்த ஒன்றான சரீரப்பிரகாரமான, ஜென்ம சுபாவமான பிறப்பை, நான் எண்ணுகிறதில்லை. நான் என்னுடைய ஆவிக்குரிய வருடங்களையே சரியாக எண்ணுகிறேன். நீங்கள் பாருங்கள். சுமார் இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்னர், நான் மறுபடியுமாய் பிறந்தேன். அது, அதுவே நித்தியமானதாய் இருக்கிறது. அதுவே…அது ஒன்றே மகத்தான ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்த நாளாய் இருக்கிறது. அது ஒருபோதும் ஒழிந்து போகாது. அந்த ஒரு காரியமே நிச்சயமாயிருக்கிறது. 12 இப்பொழுது, சகோதரி கெர்ட்டி, அவள் விரும்பினால்…நாம் சிறுவர்களை ஒரு குழந்தை பிரதிஷ்டைக்காக மேலே கொண்டு வருவதற்கு முன்பு, வரும்படி நான் விரும்புகிறேன். இப்பொழுது அநேக சமயங்களில்… 13 குழந்தைகளைப் பற்றின ஒழுங்கு முறைகளை வேத வார்த்தைகளில் எனக்குத் தெரிந்த மட்டில், ஒரே ஒரு இடத்தில்தான் நாம் வேதாகமத்தில் கண்டறிகிறோம். இப்பொழுது அநேக ஜனங்கள் அவர்களுக்குத் தெளிக்கின்றார்கள். உங்களுக்குத் தெரியும், அதை ஞானஸ்நானம் என்றே அழைக்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால் நான் எப்பொழுதுமே சரியாக முயற்சித்து, வேதாகமம் அதை கூறுகிற விதத்திலேயே அப்படியே தரித்திருக்க விரும்புகிறேன், உங்களுக்குத் தெரியும். வேதாகமத்தில் அவர்கள் ஒருபோதும் சிறு பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததில்லை. அவர்கள் அவர்களுக்கு தெளித்ததுமில்லை. அவர்கள் அவர்களை நம்முடைய கர்த்தரிடத்தில் கொண்டு வந்தார்கள். அவர் அவர்களை தம்முடைய கரங்களில் எடுத்து அவர்களை ஆசீர்வதித்து, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்றார். 14 இப்பொழுது விநோதமான காரியமாய் இருந்ததென்னவென்றால், நான் அப்படியே வேதாகமத்தில் திருப்பினேன். அது சரியாக மாற்கு 10-ல் இருக்கிறது. சரியாக இங்கே அது எனக்கு முன்பாக இருக்கிறது. 15 எனவே, கர்த்தர் சிறுபிள்ளைகளைக் கொண்டு வந்ததை…அவர்கள் சிறுபிள்ளைகளை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அவர் அவர்களை ஆசீர்வதித்து, “சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்றார். 16 இப்பொழுது, நம்முடைய கர்த்தர் மகிமைக்கு சென்றிருக்கிறார் என்று நாம் அறிவோம். அவர் மீண்டும் வரும்வரை செய்தியைக் கொண்டு செல்ல, அவருடைய ஆவி சபைக்குள்ளாக மீண்டும் திரும்பி வந்தது. நாம் அதற்காக எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். 17 நாம் அதை இங்கே செய்கிறது விநோதமானது, சிறுபிள்ளைகளை அப்படியே மேலே கொண்டு வந்து, நாம் சபையின் மூப்பர்களை மேலே அழைத்து, நான் அந்த சிறு பிள்ளைகளை எடுத்து அவர்களை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்வதாக இருக்கிறது. இது சிறுபிள்ளைகளை காண்பதற்கென அத்தகைய ஒரு இனிமையான சிறிய ஆராதனையாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அது நாம் எவ்வளவு வாலிபமாய் இருந்தாலும், நாம் எவ்வளவு வயதானவர்களாயிருந்தாலும் கவலையில்லை. அந்த சிறியர்கள் நம்முடைய இருதயத்தில் ஒரு இடத்தை சரியாகப் பெற்றுள்ளனர். அது சரியில்லையா? [சபையார், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 18 இப்பொழுது, நாம் தேவனிடத்தில் வரும்பொழுது, அந்த விதமாகத்தான் நாம் தேவனுடைய இருதயத்தில் இருக்கிறோம். நாம் அந்த பருவத்தை விட்டு போவதே இல்லை. நாம் எப்பொழுதுமே சிறு பிள்ளைகளாகவே இருக்கிறோம். 19 ஆபிரகாம், தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தபோது, அவன் தேவனுக்கு ஒரு சிறு குழந்தையாகவே இருந்தான். தேவன் அவனிடத்தில் கூறினார், “ஆபிரகாமே, நீ பாலுண்ணும் மார்பு நான்தான். பார், நீ என் மேல் சாய்ந்து பாலுண், எல்லாக் காரியங்களும் சரியாய் இருக்கும்” என்றார். அவர் தம்முடைய வார்த்தையை பற்றிக் கொள்வதன் மூலம் ஆபிரகாமை மீண்டுமாய் ஒரு வாலிப மனிதனாக திரும்பவும் மாற்றினார். 20 அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் என்ற ஒரு சிறிய பாடலை நாம் பாடினோம் என்று நான் நினைக்கிறேன். அவர்களை பிரதிஷ்டை செய்ய விரும்புகிற நீங்கள், உங்களுடைய சிறுவர்களை இப்பொழுது நீங்கள் இங்கே மேலே கொண்டு வாருங்கள். நாம் மூப்பர்களையும் கூட, அவர்கள் முன்னோக்கி வருவார்களா என்று கேட்டுக் கொள்வேன். சரி. …அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவக் களத்திலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்; அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அலைந்து கொண்டிருப்போரை இயேசுவண்டை கொண்டு வாருங்கள் 21 ஓ, இந்த சிறு நபர்களைப் பார்க்க நான் எவ்வளவாய் விரும்புகிறேன். இப்பொழுது உன்னுடைய—உன்னுடைய பெயர் என்ன? [தகப்பனார், “ரிடில்” என்கிறார்.—ஆசி.] அவளுடைய பெயர் என்ன? [“சாரோன் லூயிஸ்”.] சிறுமி சாரோன் லூயிஸ் ரிடில். நாமெல்லாரும் சகோதரன் மற்றும் சகோதரி ரிடில் அவர்களை நேசிக்கிறோம் என்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். இங்கேயுள்ள சகோதரன் ரிடிலை நாம் அறிவோம். இங்கே பட்டணத்திலுள்ள சிறுவர் காலணி கடையை அவர்தான் நடத்துகிறார். அவர்கள் இங்கே மிக சமர்த்தான குழந்தையை, குட்டி சாரோனை, சாரோன் லூயிஸை, சாரோன் லூயிஸ் ரிடிலை உடையவர்களாயிருக்கிறார்கள். சகோதரன், சகோதரி ரிடில் அவர்களே, அவர்களுக்கு எத்தனை வயது? [சகோதரன் ரிடில், “நான்கு மாதங்கள்” என்கிறார்.] நான்கு மாதங்கள், என்னே! இருதயத்திற்கு அது ஒரு சிறிய உருவமாய் இருக்கிறது. அப்படித்தானே? 22 இப்பொழுது கர்த்தர் உங்களுக்கு இந்த அழகான சிறுமியைக் கொடுத்திருக்கிறார். இப்பொழுது நீங்கள் அதை அவருக்கு பிரதிஷ்டை செய்து அவருடைய கரங்களுக்குள் அதைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு அதை கொடுத்திருக்கிற தேவனுக்கு, நீங்கள் மீண்டுமாய் அவருக்கே திருப்பிக் கொடுக்கிறீர்கள். அதனுடைய சிறு ஜீவனை அவர் ஆசீர்வதிக்கும்படியாகவும், அதை ஒரு சேவையின் ஜீவியமாகும்படியாகவும் அதை அவருக்கு கொடுக்கிறீர்கள். அது ஒரு…நீங்கள் வயதானவர்களாய் இருக்கும்பொழுது, உங்களுடைய இருதயத்தை ஆசீர்வதிக்கிற ஒரு சிறுமியாயும், இயேசுவானவர் வர தாமதிக்குமேயானால், தேவனுக்காக ஒரு மகத்தான பணி செய்கிறவளாக இருக்கும்படியாகவும் தேவன் அவளை ஆயத்தப்படுத்துவார் என்று ஜெபிக்கிறோம். இந்த சிறிய பெண்ணைக் குறித்து நீங்கள் பெருமைப்படுவீர்கள். அவளை ஆசீர்வதிக்கும்படி நாங்கள் அவளை எடுக்கையிலே, தேவன் அதை இப்பொழுதே அருளுவாராக. 23 நான் எல்லா ஸ்திரீகளும், உண்மையாகவே ஆண்களும் கூட இந்த அருமையான சிறிய குழந்தையை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது இனிமையாயில்லையா? குட்டி சாரோன். இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 24 எங்களுடைய ஆசீர்வதிக்கப்பட்ட பரலோக பிதாவே, நீர் உம்முடைய கரங்களை அவர்கள் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதிக்கும்படி, அவர்கள் சிறு பிள்ளைகளை உம்மிடத்தில் கொண்டு வந்தார்கள் என்று நாங்கள் விலையேறப்பெற்ற வார்த்தையில் வாசிக்கிறோம். இப்பொழுது இந்த ஜோடி, இந்த காலையில் இந்த பரிசுத்த விவாக இணைப்பில், அவர்களுடைய பொறுப்பில் நீர் இந்த அழகான குழந்தையை, குட்டி சாரோன் ரிடிலை கொடுத்திருக்கிறீர். அருமையான பரலோகப் பிதாவே, அந்த குழந்தையை, அதைக் கொடுத்த ஒருவருக்கு திரும்ப கொண்டு வந்து, பிரதிஷ்டை அளிக்க இந்தக் காலையில் அவர்கள் வந்து கொண்டிருக்கையில், நீர் இந்தக் குழந்தையை ஆசீர்வதிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே, அவர்களை ஆசீர்வதிக்கும்படியாகவும், அவர்களுடைய ஜீவியங்களை ஆசீர்வதிக்கும்படியாகவும், நான் உம்மிடத்தில் கேட்கிறேன். இந்த சிறுபிள்ளை ஜீவித்து, வளர்ந்து, பரிபூரண ஆரோக்கியத்தை உடையவளாயும், உம்முடைய ஊழியக்காரியாயும் இருப்பாளாக. தேவனுடைய இருதயத்திற்கு இசைந்த மற்றும் பெற்றோர்களுடைய இருதயத்திற்கு இசைந்த ஒரு பெண்ணாக அவள் இருப்பாளாக. இதை அளியும் கர்த்தாவே. 25 இப்பொழுது நாங்கள் இந்தக் குழந்தையை உம்மிடத்திற்கு உயர்த்துகிறோம். உம்முடைய மூப்பன் என்ற முறையில் அவர்கள் இதை என்னுடைய கரத்தில் வைத்திருக்கிறதினால் நான் இதை உம்மண்டைக்கு உயர்த்துகிறேன். கிறிஸ்துவினுடைய நாமத்திலே நீர் இந்த குழந்தையை ஆசீர்வதிப்பீராக. இவள் ஜீவித்து வளர்ந்து, பெலமாயும், திடகாத்திரமாயும் ஒரு தேவனுடைய ஊழியக்காரியாகவும் இருப்பாளாக. நாங்கள் இதை உம்மிடத்தில் சமர்ப்பிக்கின்றபடியால், நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். சிறிய தேனே, உம்மை ஆசீர்வதிப்பாராக. நீ ஒரு மகத்தான இனிமையான சிறு குழந்தை. 26 தேவன் உன்னையும், உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக. இந்த சிறு பெண்ணை வளர்ப்பதில் உங்களுக்கு அதிகமான சந்தோஷம் உண்டாயிருப்பதாக. நாம் வந்து களிகூருவோம், கதிர் கட்டுகளை உள்ளே கொண்டு வருவோம், கதிர் கட்டுகளை உள்ளே கொண்டு வருவோம், கதிர் கட்டுகளை உள்ளே கொண்டு வருவோம், நாம் வந்து களிகூருவோம், கதிர் கட்டுகளை உள்ளே கொண்டு வருவோம். கதிர் கட்டுகளை உள்ளே கொண்டு வருவோம், கதிர் கட்டுகளை உள்ளே கொண்டு வருவோம், நாம் வந்து களிகூருவோம், கதிர் கட்டுகளை உள்ளே கொண்டு வருவோம். அப்படியானால் அது அற்புதமாயில்லையா? இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை ஜெபத்திற்காக அப்படியே ஒரு வினாடி தாழ்த்து வோமாக. 27 ஓ, தேவனே, வானங்களையும், பூமியையும் உருவாக்கினவரே, அப்படியே அவருடைய சுவாசம் அவருடைய வார்த்தையோடு சென்று, ஒவ்வொரு காரியங்களும் அதனுடைய சரியான ஸ்தானத்தை எடுத்துக் கொண்டது. வெறுமெனே தேவன் அவருடைய வார்த்தையின் மேல் ஊதினபோது, பூமியும், சந்திரனும், நட்சத்திரங்களும் எல்லாமே அதனுடைய ஸ்தானத்திற்குள்ளாக சுழன்றது. 28 ஓ, தேவனே, இன்றைக்கு நாங்கள் அதை ஜனங்களுக்கு கொண்டு வருகையில், நீர் உம்முடைய சுவாசத்தை, உம்முடைய வார்த்தையின் மேல் ஊதும் என்று நாங்கள் வேண்டுகிறோம். அதாவது ஒவ்வொரு நபரும் உம்முடைய ஆசீர்வாதங்களை இங்கே பெறும்படியாக, ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும், இந்த காலையில் அதனுடைய ஸ்தானமானது வேரூன்றப்படவும், நிலை நிற்கப்படவும், அதனுடைய ஸ்தானத்தை அது எடுத்துக் கொள்வதாக. 29 கர்த்தாவே, பாதையிலிருந்து விலகியிருக்கிறவர்களுக்கும், அவர்களுடைய ஆவியில் முடமாயும், ஊனமாயும் உள்ளவர்களுக்கும் உதவி செய்யும். நாங்கள் சிலாக்கியமடைந்திருக்கின்றது போல உம்மை ஒரு அன்பார்ந்த இரட்சகராக அவர்கள் அறியாதிருக்கிறார்கள். இன்றைக்கு நீர் அவர்களை அபரிமிதமாக ஆசீர்வதியும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் இந்த கட்டிடத்தை விட்டுப் போகையில், சந்தோஷமாயும், களிகூர்ந்து கொண்டும், இந்த கூட்டத்தோடு அவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, மேலும் புதியதாக கண்டறிந்த கிறிஸ்துவோடும் அவர்கள் செல்வார்களாக. 30 இந்த உலகத்தின் கவலைகளில் வழுக்கிக்கொண்டு போகிறவர்களாய் யாராவது இருப்பார்களாயின், ஓ, தேவனே அவர்களை திருப்பிக் கொண்டு வாரும். வியாதியாயும், தேவையுள்ளவர்களாய் இருக்கின்றவர்களையும், பிதாவே, இன்றைக்கு இங்கே வியாதியாயுள்ள ஒவ்வொரு நபரையும் நீர் சுகப்படுத்தும் என்று அவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். விடாய்த்துப் போயிருக்கிறவர்களை உற்சாகப்படுத்தும். விசுவாசத்தோடு பற்றிக் கொண்டிருக்கிறவர்களை ஆசீர்வதியும். கர்த்தாவே இதை அருளும். உம்முடைய ஆவி எல்லார் மேலும் தங்கி இருப்பதாக. 31 வார்த்தையானது, அது புறப்பட்டு போகையிலே, அதை பேசப் போகும் பேச்சாளரையும், அதைக் கேட்க இருப்பவர்களையும் ஆசீர்வதியும். எல்லாருமாக சேர்ந்து இந்தக் காலையில் இந்த கூட்டத்திற்கான மகிமையைப் பெற்றுக் கொள்ளும்படியாக கிறிஸ்துவினுடைய நாமத்தில் நாங்கள் இதை கேட்கிறோம். ஆமென். 32 இப்பொழுது, நீண்ட கூட்டத்திலிருந்து நான் இன்னும் சரியாக இளைப்பாறவில்லை, அது இப்பொழுது சுமார் நான்கு மாதங்களாகவே இருந்து கொண்டிருக்கிறது. இந்த கடைசி ஐந்து வாரக் கூட்டங்கள் மிகவும் திணறடிக்கச் செய்திருக்கின்றன. ஏனென்றால் இந்த தேசத்தினூடாக எல்லா இடங்களிலும் நாங்கள் அற்புதமான கூட்டங்களை உடையவர்களாயிருந்தோம், இப்பொழுது, நியூயார்க் துவங்கி சான்பிரான்சிஸ்கோ வரையிலும் முழு தேசமும் குறுக்கும் நெடுக்குமாக, முன்னும் பின்னுமாக நாங்கள் கடந்து வந்திருக்கிறோம். கர்த்தர் அநேகமனேக, ஆயிரக்கணக்கான ஜனங்களை இரட்சித்திருக்கிறார். 33 கடந்த ஞாயிறு, ஒரு வாரத்திற்கு முன் தனியாக நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட பரலோக பிதா ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறுக்கு மத்தியில் பாவிகள் ஒரே நேரத்தில் மனந்திரும்பினதை கலிபோர்னியா (California) ஓக்லேன்டில் (Oakland) உள்ள ஒரு பெரிய அரங்கத்தில் பீடத்தண்டை கண்டேன். அது அப்படியே நிரம்பி வழிந்தது. அரங்கத்தின் பக்கங்களுக்கு பதிலாக மத்தியில் கீழே நாங்கள் உட்கார வைக்க வேண்டியதாயிருந்தது. கர்த்தர் முற்றிலுமாய் ஆசீர்வதித்தார். 34 நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடியே அங்கே உள்ளே எங்களுக்கு பெரிய பூமியதிர்ச்சி உண்டானது. அதற்குள்ளாக இருந்த என்னுடைய மனைவிக்கு அதுதான் முதன் முறையாய் இருந்தது. பின்னர் அவள் அப்படியே சிறிது நடுக்கமுற்றாள். அது மிகவும் பலமாக இருந்தது, கட்டிடம் அசைந்தது, தூசி பறந்தது, புட்டிகள் ஆடின. நாங்கள் மருந்துக் கடையில் நின்றுக்கொண்டு அஞ்சல் அட்டைகளை வீட்டுக்கு அனுப்பும்படி வாங்கிக்கொண்டிருந்தோம். புட்டிகள் குலுங்கின, புகைபோக்கி கீழே விழுந்தது. பெரிய கட்டிடங்கள் சேர்ந்து ஆடின. வீதிகள் பிளவுபட்டு திறந்து கொண்டன. அதில் ஒரு பகுதி பூமிக்கு கீழாகப் போய்விட்டது. அது சுவற்றின் மேல் எழுதப்பட்ட கையெழுத்து என்பது சரியாய் நமக்கு நினைவுபடுத்துகிறது. “பல இடங்களில் பூமியதிர்ச்சி உண்டாகும்.” 35 அந்த ஒரு நாளில், பூமியதிர்ச்சிகள் அதே பட்டணத்தை தாக்கின. பின்னர் சுமார் பத்து மணிக்கு, அந்த இரவு நாங்கள் அப்பொழுதுதான் உள்ளே, இல்லை, படுக்கைக்கு பத்து முப்பது மணிக்குச் சென்றோம். தரையின் நடுவே உட்கார்ந்திருக்கையில், இன்னொரு பெரிய, பலமான பூமியதிர்ச்சியிலிருந்து குலுங்கினது போலிருந்தது. இது நமக்கு எட்டாயிரம் மைல்களுக்கு அடியில் எரிந்து கொண்டிருக்கும் சிவப்பான எரிமலைக்குழம்பு இருக்கின்றதை தவிர வேறொன்றுமில்லை என்பதையே காண்பிக்கிறது. 36 அது சரியாக அந்த நேரத்தில் சமுத்திரத்தினூடாக இருந்த எங்களுடைய படையெடுப்பாளர்களை, அவைகள் ஜனங்களை ஸ்காண்டிநேவியாவிற்குச் செல்ல தடை செய்ததையும், அவர்கள் அணு ஆயுதங்களோடு அவைகள் நிர்மூலமாக்குவதாகவும் கூறிக்கொண்டிருந்ததையும் கேட்டோம். அவர்கள் அந்த அணுகுண்டுகளை போடத் துவங்கி, அந்த இடங்களை பூமிக்குள்ளாக வெடிக்கச் செய்தால் என்ன சம்பவிக்கும் என்றும் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். அப்பொழுது, “அது என்ன செய்யும் என்று தேவன் கூறினாரோ, அதை சரியாக அப்படியே செய்யும்.” “இனிமேல் தண்ணீரினால் அல்ல, ஆனால் இந்த முறை அக்கினியால்.” 37 ஆகையால் இந்த அற்பமான பழைய சரீரங்கள் மாற்றப்பட்டு, அவருடைய சொந்த மகிமையான சரீரமாய் ஆக்கப்படும்போது, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வேளயானது கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிற, காத்திருக்கும் இதயத்திற்கு அது சந்தோஷத்தை கொண்டு வருகிறது. நாம் அவரைக் காண்போம். இனி போராட்டம் இல்லை, இனி துக்கமில்லை, இனி வயது சென்றவர்கள் இல்லை, இனி குறைவுள்ள நாட்கள் இல்லை, இனி பசி இல்லை, இனி கவலை இல்லை, இனி வியாதியில்லை, இனி மரணமேயில்லை. 38 ஓ, நம்மால் சரியாக அளக்கமுடியாதே! நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நண்பனே! அது மிகவும் கடினம். ஏனென்றால் நாம் மானிடர், மரணமானது, நாம் எல்லாருமே அதை சந்திக்க வெறுக்கின்ற ஒரு காரியமாய் இருக்கிறது. ஆனால் என்றோ ஒருநாள் அவர் வருவார் என்பதை அறிவது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட உதவியாயும், ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட காரியமாயுமாயிருக்கிறது. இந்தக் காரியங்கள் மாற்றப்படும். 39 இப்பொழுது நினைவிருக்கட்டும். விசேஷமாக உங்களுடைய…பாவியான நண்பர்களை கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள். ஏனென்றால் இந்த எழுப்புதல் வந்து கொண்டிருக்கிறது. 40 இப்பொழுது கொஞ்சமாக பேசுகின்ற விதத்திலும், என்னுடைய தொண்டையானது நான் கூறினது போன்று, இன்னும் சரியாகவில்லை. இருந்தாலும் சரியாகக் கூறினால், நான் இன்னும் சற்று களைப்பாகவே இருக்கிறேன். ஆனால் நான் ஓய்வெடுத்தேன், இந்த வாரம், தொலைபேசி மற்றும் ஒவ்வொரு காரியங்களிலிருந்து கூட விலகித்தான் இருந்தேன். அதனால் எனக்கு ஓய்வான ஒரு சில நாட்கள் இருக்க முடிந்தது. 41 பின்னர், இந்த வருகின்ற வாரம் என்னால் கூடுமானால் நான் சிறிது இளைப்பாற விரும்புகிறேன். அதன் பிறகு சிறிய எழுப்புதலுக்காக ஆயத்தமாகப் போகிறேன். அதன் பிறகு நான் கனடாவுக்குப் போகிறேன். கனடாவிலிருந்து திரும்பி இன்டியானாபோலீஸுக்கு போகிறேன். இன்டியானாபோலீஸ்ஸிலிருந்து பின்னர் சிக்காகோவிற்குப் போகிறேன். சிக்காகோவிலிருந்து…அது கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் அகில உலக சிறப்புக்கூட்டம். அவர்கள் என்னை முன்னரே ஏற்பாடு செய்து விட்டனர். இப்பொழுது, விசேஷமாக இந்த எழுப்புதலின்போது தேவன் என்னை நடத்தும்படியாக நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். ஒரு முழு உலக சுற்றுப்பயணம், ஜூன் மாதத்தில் துவங்கி நவம்பரில் திரும்பி வருவது, இன்னும் சரியாகக் கூறினால், இல்லை ஜூலை மாதம் அது ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் எல்லா தீவுகளிலும் மற்றும் சமுத்திரங்களினூடாக வந்து மேற்கு கரை வழியாக போகிறதாக இருக்கிறது. கிழக்கை விட்டு நேராக உலகத்தைச் சுற்றிப்போய் மேற்கு கரைக்கு திரும்பி வருதல். அத்தகைய ஒரு தேவையான நேரம். 42 இப்பொழுது ஏதோ விதமான காரியம் என்னை சிறிது எச்சரிக்கிறது. அது ஏதோ வீதியிலிருக்கிறதோ அல்லது என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். தேவன் நிச்சயமாக அதை சரியாக கிரியை செய்வார். 43 இப்பொழுது வேத வார்த்தையில் நான் இரண்டு இடங்களை தேடிப் பெற்றேன். அதை இன்று காலையில் வாசிக்கும்படியாக தெரிந்து கொண்டுள்ளேன். இதன் காரணமாக ஜனங்கள் வருகிறார்கள். அவர்கள் ஜெபித்துக் கொள்ளும்படியாக வருகிறார்கள். வியாதியஸ்தருக்கும், தேவையுள்ளவர்களுக்கும் ஜெபிப்பதற்கான சரியான ஒரு சிறிய நேரமாய் இது இருக்கிறது. நான் வார்த்தையின் பேரில் சற்று போதிக்க விரும்புகிறேன். 44 பின்னர் ஒருக்கால், கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு போதிப்பது மட்டுமல்லாமல் வார்த்தையிலிருந்தும் சிறிது பிரசங்கிப்பேன். 45 இப்பொழுது, நான் இரண்டு இடங்களிலிருந்து வாசிக்க விரும்புகிறேன். அவைகள் இரண்டுமே பழைய ஏற்பாட்டில் இருக்கின்றன. ஒன்று எண்ணாகமம் 13-ம் அதிகாரம் 30-ம் வசனம். இன்னொன்று யோசுவாவில் முதலாம் அதிகாரம் 9-ம் வசனத்தில் இருக்கிறது. அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி; நாம் உடனே போய் அதை சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். 46 பின்னர் யோசுவாவில் முதலாம் அதிகாரம் 9-ம் வசனம். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். 47 கர்த்தர் நம்முடைய வார்த்தைக்கு அவருடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. நான் வார்த்தையை நேசிக்கிறேன். இந்தக் காலையில் நான் ஒரு ஆதாரப் பொருளாய் கூறுவதானால், தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார் என்றழைக்கின்ற ஒரு மூல பாடத்தை, இங்கே இந்த சூழ்நிலைக்கு பொருத்தமாய் கண்டறியும்படி எடுக்க நான் விரும்புகிறேன். இப்பொழுது அதன் பேரிலேயே…நாம் வாரங்களாக அப்படியே தரித்திருக்கக்கூடும். தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்கிறார் என்கிற பொருளில் ஒரு வருடத்தினுடைய எழுப்புதலை நடத்தவும், இன்னமும் அப்படியே அது ஆரம்பத்தில் இருந்தது போன்றே முடிவிலேயும் புத்தம் புதியதாய் இருக்கும்படி தரித்திருக்கக்கூடும். 48 தேவனால் செய்ய முடியாத காரியம் ஒன்று தான் உண்டு. அதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது யோசித்தது உண்டா? தேவனால் செய்யமுடியாத காரியம் ஒன்றுதான் உண்டு. அது தவறிப் போவது. தவறிப்போவதை தவிர அவரால் எல்லாவற்றையும் செய்யமுடியும். ஆனால் அவரால் தவறிப்போக முடியாது. எனவே இந்தக் காலையில், நம்முடைய மிக பரிசுத்த நம்பிக்கையானது, அந்த அற்புதமான ஒருவர் மேல், செய்யப்பட வேண்டிய எந்தக் காரியத்தையும் தவறிப் போகாமல் செய்கிற அவர் மேல் கட்டப்பட்டிருக்குமானால், அவருடைய நித்தியமான வார்த்தையில் நாம் எவ்வளவு நம்பிக்கையாய் இருக்க வேண்டும். 49 தேசங்களினூடாக நான் நோக்கிப் பார்த்த பின்னர் காரியங்கள் குவிக்கப்பட்டதையும், அவைகள் இருக்கின்ற விதத்தையும், சிறிய தனிக்கொள்கைகள் எழும்புகிறதையுங் கண்டு, கடந்த வருடத்தில் என்னுடைய இருதயம் கிளர்ச்சியடைந்தது. அந்த காலையன்று நாம் பிரதிஷ்டை செய்தபோது…இல்லை மூலைக்கல்லை நாட்டினபோது அங்கே அந்த மூலைக்கல்லில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அது நன்றாக என்னுடைய ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. அந்த நாட்களில் தரிசனங்கள் என்றால் என்னவென்று அறியாதிருந்தபோது கர்த்தர் என்னை எழுப்பினார். 50 இருபத்திமூன்று வருடங்களுக்கு முன்னர் 1933-ல் தரிசனம் எனக்கு உண்டானபோது, நான் உட்கார்ந்துகொண்டு இருந்த இடத்திலிருந்து ஐந்து அடி அல்லது அதிகமான உயரத்தில் இருந்த வீட்டின் உச்சியில் இருந்த புகைப்போக்கியையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு இருக்கும் என நான் நினைக்கிறேன். சரியாக இப்பொழுது நான் அந்த புகைப்போக்கியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். 51 எனக்கு திருமணம் ஆவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பாகவே அது இருந்தது. நான் வீட்டில் தனிமையாயிருந்தேன். நாங்கள் சரியாக இந்த சபையை கட்டிக்கொண்டிருந்தோம். கர்த்தர் எனக்கு அந்த தரிசனத்தை கொடுத்தபோது, அந்த காலையில் நாங்கள் மூலைக்கல்லை நாட்டிக் கொண்டிருந்தோம். நான் விழித்தெழுந்து ஜன்னலின் வழியாக வெளியே நோக்கிப் பார்த்தேன். அது ஜூன் மாதமாய் இருந்தது. அழகிய மஞ்சள் நிற மலர்களையுடைய தழுவும் கொடிகளாய் இல்லை, மொட்டுகள் மலர்ந்து கொண்டிருந்ததாய் இருந்தது. அங்கே நான் நடந்து கொண்டு இருப்பது போன்று இல்லை அல்லது ஏதோ காரியம் போன்று காணப்பட்டது. நான் கர்த்தராகிய இயேசுவைக் கண்டேன். என்னுடைய ஜெப கூடாரத்தைக் கண்டேன். அவர் என்னிடத்தில் இது என்னுடைய ஜெப கூடாரம் அல்ல என்று அறிவித்துக் கூறினார், என்னை ஆகாயத்திற்கு அடியில் கொண்டு சென்றார். உங்களில் அனேகருக்கு அந்த தரிசனம் தெரியும், ஏனென்றால் அது எழுதப்பட்டு, பிரசுரிக்கப்பட்டுள்ளது. நான்காவது அல்லது ஐந்தாவது பதிப்பு என்று நான் நினைக்கிறேன். சுமார் ஒர் இலட்சம் புத்தகங்கள் பதினேழு வித்தியாசமான மொழிகளில் அனுப்பப்பட்டிருக்கின்றன. வார்த்தைக்கு வார்த்தை அது எப்படியாய் நிறைவேறினது என்பதை கவனியுங்கள். சரியாக ஒருபொழுதும் தவறிப்போகவில்லையே! எப்படியாய் நாம் ஒரு அழகான சிறு கூட்ட ஜனங்களாய் ஒன்று கூடி வந்தோம். கர்த்தர் எப்படியாய் நம்மை ஆசீர்வதித்தார், பின்னர் இடத்திலிருந்து இடத்திற்கும், ஆனால் முடிவிலே சுவிசேஷக செயல்களத்தில், இப்பொழுது உலகம் முழுவதுமாக எப்படியாய் அது சென்றிருக்கிறது. 52 எப்படியாய் அந்த நேரம் வந்திருக்கிறது. அவைகளே சம்பவித்திருக்கின்ற இந்த காரியங்களாயிருந்தன. எப்படியாய் உலகம் போதகர்களையும் செவித்தினவுள்ளவர்களையும் தங்களுக்கு குவித்துக் கொண்டு சத்தியத்தை புறக்கணித்துத் தள்ளி கட்டு கதைகளுக்கு சாய்ந்து போவார்கள். பின்னர், எப்படியாய் அவர், “வார்த்தையை பிரசங்கியுங்கள், வார்த்தையின் மேல் தரித்திருங்கள்” என்று கூறினார். நான் ஏதாவது காரியத்தை செய்ய முயற்சித்திருந்தால், தேவனுடைய நித்தியமான வார்த்தையின் மேல் தரித்திருப்பதாகவே இருக்கிறது. 53 இந்த உலகத்தினுடைய யுகத்தின் முடிவான நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். காணக்கூடிய எவரும், தினசரி பத்திரிக்கையை எடுத்துப் பார்க்கிற எவரும் எப்படி மனந்திரும்பாதிருக்கிறார்கள் என்று என்னால்—என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. சம்பவிக்க காத்துக் கொண்டிருக்கின்ற ஏதோ மகத்தான காரியத்தின் சாயங்கால வேளையில் நாம் எப்படியாய் இருக்கிறோம். இயற்கையும் கூட அதை காட்டுகிறது. உலகமானது அஞ்சி நடுங்கிக் கொண்டு வருகிறது. அதனுடைய அக்கினி குழம்புகளை அது வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறது. அது பயங்கரமான பலவீனத்தை உடையதாய் இருக்கிறது. பெரிய பூமியதிர்ச்சிகள் அசைத்துக் கொண்டும், வீதிகளைப் பிளந்து கொண்டும் இருக்கின்றன. பயங்கரமான காட்சிகளான பறக்கும் தட்டுகளும், பூமியினூடாக அவர்கள் ஏவக்கூடிய ஏவுகணைகள் அழிக்கவும், ஐந்தே நிமிடங்களில் ஒரு தேசத்தை நிர்மூலமாக்குவதாகவும் இருக்கின்றன. நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். ஏதோ காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கின்றது…அதை தடுத்து நிறுத்த ஏதும் வழி கிடையாது. ஒரு வழியும் இல்லை. அதிலிருந்து வெளியே வர ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது மேலே உள்ளது. ஒளிந்து கொள்ள முயற்சிப்பதற்கு ஏதும் வழியேயில்லை. ஒன்றைத் தவிர மறைவிடமே கிடையாது. 54 சிறுபெண்கள் வழக்கமாக இங்கே பாடுவது போன்றே, நான் சரியாக ஒரு பிரசங்கிக்கின்ற பையனாய் இருந்தபொழுது அவர்கள் இவ்விதமாய் பாடுவார்கள். இங்கே கீழே மறைவிடம் ஏதும் இல்லை; என் முகத்தை மறைத்துக் கொள்ள நான் பாறைகளண்டை சென்றேன், ஆனால் அந்த பாறைகளே சத்தமிட்டன… இங்கே கீழே மறைவிடம் ஏதுமில்லை. 55 ஆனால் ஒரு மறைவிடம் உண்டு. “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.” கடைசி நேரத்தில் இந்த மறைவிடம் இருப்பதற்காக நாம் எவ்வளவு சந்தோஷமாய் இருக்க வேண்டும். 56 நாம் சுற்றிலுமாய் பார்த்து, இந்த மகத்தான அடையாளங்களின் ஒரு அசைவையும், வந்து கொண்டிருக்கிற இந்த எழுப்புதலையும் காண்கையில், கர்த்தருக்கு சித்தமானால், எல்லாவிதத்திலும் ஆதியாகமத்திற்குள்ளாகச் சென்று, நாம் முடிவிலே இருக்கிறோம் என்றும், நாம் இங்கே இருக்கிறோம் என்ற அந்த முனைப்பான செய்திக்கூறுகளை வெளிக்கொண்டுவர நான் விரும்புகிறேன். வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த தலைமுறையானது சரியாக இப்பொழுது பூமியின் மேல் இருக்கிறது. அது கர்த்தராகிய இயேசுவின் வருகையை காணும். எனக்கு நாற்பத்தியெட்டு வயதாகிறது. நான் அதைக் காணாமலிருக்கலாம். எனக்கு தெரியாது. அது ஒருக்கால் நாளைக்கு வரலாம். ஆனால் இங்கே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் காலத்தின் முடிவையும், அந்த நீதியான ஒருவரின் வருகையையும் காண்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஜனங்களுக்கு எப்போதும் சம்பவித்துள்ளதிலேயே மிகப் பயங்கரமான காரியங்களில் ஒன்று, இங்கே இந்த தேசத்திலேயே சம்பவிக்கப் போகின்றதை நாம் காணும் வரை நம்மில் பெருவாரியானவர்கள், விசேஷமாக இந்தக் காலையில் இந்த சபையில் இங்கிருக்கின்றவர்கள் ஒருபோதும் வயதானவர்களாய் மரிக்கமாட்டார்கள். அது உண்மை. 57 சகோதரனே, இரக்கத்தின் எல்லைகளை நாம் கடினப்பட்டு கடந்து, அங்கே நியாயத்தீர்ப்பே அல்லாமல் வேறொன்றும் விடப்பட்டிராத நிலை மட்டும் வந்து விட்டோம். ஆனால் நீதிமான், அநியாயக்காரனோடு தண்டிக்கப்படவே மாட்டான். தேவன் வருவார். இயேசுவானவர் தம்முடைய சபையை மீட்டுக்கொள்வார். நாம் அவரை சந்திக்கும்படியாக ஆகாயத்தில் உயரே செல்வோம். அது எந்த குண்டுகளுக்கும் அல்லது எந்த தொல்லைகளுக்கும் எட்டாத தொலைவிடத்தில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் பாதுகாக்கப்படுவோம். 58 எனவே பிள்ளைகளே உடனடியாக தேவனண்டைக்கு திரும்பி வாருங்கள். எந்தக் காரியத்திற்காகவும் உலகத்தோடு சிக்கிக் கொள்ள வேண்டாம். இந்த நவீன உலகத்திற்கு வெளியே தரித்திருங்கள். இந்த நவீன வேத சாஸ்திரங்களிலிருந்து புறம்பே விலகியிருங்கள். வெறுமனே தேவ ஆட்டுக்குட்டியையே நோக்கிப் பாருங்கள். எல்லா நேரத்திலும் உங்களுடைய வேதத்தை வாசியுங்கள். ஜெபம் செய்யுங்கள். சோர்ந்து போகாதிருங்கள். களிகூர்ந்துகொண்டு சந்தோஷமாய் இருங்கள். ஏனென்றால் சபையின் மீட்பானது மிகவும் சமீபமாய் இருக்கிறது. அப்பொழுது நமக்காக மரித்த அவரை நாம் காணலாம். 59 நம்முடைய மூலபாடம் இன்றைய காலத்தோடு ஒத்துப் போகிற விதமாக அமைந்திருக்கின்றது. துவக்கமான முதல் வேத வாக்கியத்தை நான் எண்ணாகமத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன். அருகாமையில் இருக்கின்ற ஒரு மகத்தான வல்லமையுள்ள தேசத்திலிருந்து அழைக்கப்பட்ட ஜனங்களைக் குறித்தும், பெற்றிருந்ததான அவர்களுடைய நியாயத்தீர்ப்பையும் அது கூறிக்கொண்டிருந்தது. 60 அது ஒரு தேசத்திலிருந்தாலும் அல்லது ஒரு சபையிலிருந்தாலும் அல்லது ஒரு வீட்டிலிருந்தாலும் அல்லது தனிப்பட்ட நபராயிருந்தாலும் என்னவாயிருந்தாலும் பாவம் தண்டிக்காமல் விடப்படாது என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாவமானது நியாயத்தீர்ப்பின் அடிப்படையிலே இடைபட வேண்டும். வேறு ஏதும் வழியே இல்லை. அது பரிகரிக்கப்பட முடியாது. உதாரணமாக, “நான் தவறு செய்தேன், இப்பொழுது நான் நல்லது செய்வேன்.” அது கிரியை செய்யாது. நீங்களே உங்களுக்கான ஒப்புரவாகுதலை செய்ய முடியாது. ஏனென்றால் ஒப்புரவாகுதல் ஏற்கனவே செய்யப்பட்டாயிற்று. 61 நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள் என்பதற்கு அது ஒரு அறிக்கையாயிருக்கிறது, ஆகையால் வந்து சரிப்படுத்திக் கொள்ளுங்கள். 62 எனவே பாவம் கண்டிக்கப்பட வேண்டும். தேவன் எப்பொழுதும் பாவத்தோடு நியாயத்தீர்ப்பைக் கொண்டே இடைபடுகிறார். அதன் காரணமாகத்தான் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின்படியாய் நம்முடைய கர்த்தர் கல்வாரியின் மேல் மரித்தார். அதாவது பாவமானது அவ்வளவு ஒரு பயங்கரமான காரியமாக இருந்த காரணத்தினால்தான், அதாவது அதை வாஞ்சிக்கிறவர்கள், அவர் மேல் விசுவாசம் கொள்வதன் மூலமாயும், அவரை அவர்களுடைய பாவ தடையாக ஏற்றுக் கொள்வதன் மூலம் விடுதலையாகிப் போகும்படியாக அந்த பாவத்தின் நியாயத்தீர்ப்பானது அவர் மேல் பொருத்தப்பட்டது. நாம் எவ்வளவு நல்லவர்களாய் இருக்கக்கூடும் என்பதல்ல. ஆனால் நாம் அவரை எப்படி விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறோம் என்பதையே பொறுத்தது. நாம் அவரை ஏற்றுக் கொள்ளும்போது அவர் நம்முடைய இருதயத்திற்குள் வருகிறார். அங்கேதான் அந்த நல்ல பகுதி இருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும் என்பதன் பேரில் அல்ல; அது அவர் என்ன செய்திருக்கிறார், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதின் பேரில்தான் இருக்கிறது. அங்கேதான், “நம்முடைய மீறுதல்களினித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” 63 இப்பொழுது இந்த ஜனங்கள் எகிப்திலே சுமார் நானூறு வருடங்களாய் இருந்து வந்தனர். இஸ்ரவேல் ஜனங்களின் மகத்தான பயணத்தைக் குறித்தும், எப்படியாய் அவர்களை அங்கே தேவன் எகிப்தியரிடத்தில் ஒப்புக்கொடுத்தார் என்பதையும் நாம் மிகவும் நன்றாக அறிந்திருக்கிறோம். அவர்கள் இவர்களை தவறாக நடத்தினார்கள், ஏனென்றால் தேவனுடைய வார்த்தை அவர்கள் அதைச் செய்வார்கள் என்று கூறியிருந்தது. 64 இப்பொழுது ஒரு அந்நிய தேசத்திலே அவருடைய ஜனங்கள் நானூறு வருடங்களாக சஞ்சரிப்பார்கள் என்று தேவன் ஆபிரகாமுக்கு வாக்களித்தார். வாக்குத்தத்தத்தின் நேரமானது நெருங்கியபொழுது சந்திக்கும்படியான எல்லாக் காரியங்களையும் தேவன் ஆயத்தமாக வைத்திருந்தார். 65 ஓ, நான் அதைக் குறித்து யோசிக்கும்போது, நான் அதை நேசிக்கிறேன். சரியான கடுஞ்சோதனை நேரம், அவர் ஒரு நிமிடத்தையும் தாமதப்படுத்துகிறதில்லை. அவர் எப்பொழுதுமே சரியான நேரத்தில் இருக்கிறார். நாம் மட்டும் அதைப்போன்று இருப்போமானால் நலமாயிருக்குமே! ஓ, நாம் காரியத்தை தள்ளிவிட முயற்சிக்கிறோம். நாம் அதை நம்முடைய நேரமாக்க முயற்சிக்கிறோம். ஆனால் நம்மால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. தேவன் அதை அவருடைய நேரத்தில் ஒருபோதும் செய்ய முடியாது. தேவன் அதை அவருடைய நேரத்தில் செய்கிறார். நாம் அதில் எந்த வித்தியாசத்தையும் செய்ய முடியாது. 66 நேற்றைய தினம், பக்கத்து வீட்டில் வசிக்கும் என்னுடைய சகோதரி உட்ஸ் (woods) அவர்களுடைய பின்முற்றத்தில் நின்று கொண்டு ஒரு மரத்தின்மேல் உருவாக்கிக் கொண்டிருந்த சிறிய புழுக்கூட்டை நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம். காற்றானது அதின் முன்னும் பின்னுமாக அடித்துக் கொண்டிருந்தது. அவள் புழுக்கூட்டைப் பற்றின ஒரு கட்டுரையை பாலைவனங்களின் ஓடைகளில் வாசித்துக் கொண்டிருந்தாள் என்று நான் நினைக்கிறேன். அவள் அதை சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு சிறிய புழு அங்கே உள்ளே போய், குளிரில் தன்னை பாதுகாத்துக்கொள்ளும்படியாய் ஒரு சிறிய ஓடு ஒன்றை அதனைச் சுற்றி உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் அதன் நேரம் வரும்பொழுது… 67 இந்த சிறு நபரோடு இடைபட்டுக் கொண்டிருக்கிற இந்த நபர் இந்த புழு அசைந்து கொண்டும், நெளிந்து கொண்டும் இருப்பதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். அந்த சிறு நபருக்காக அவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்களாம். எனவே அவர்கள் அதன் முனையை அறுத்துவிட்டு, அந்த சிறிய பூச்சியை வெளியே வரவிடலாம் என்று நினைத்தார்கள், ஏனென்றால் அங்கிருந்து அது வெளியே வந்தவுடன் அதற்கு இறக்கைகள் இருக்கப் போகிறது, அது உள்ளே போகும்போது ஒரு பூச்சியைப் போன்று அல்லது ஒரு சிறிய புழுவைப் போன்று சென்று மேலும் ஒரு மகிமையடைந்த நிலையைப் போன்று அது இறக்கைகளோடு வெளியே வருகிறது. அது நெளிந்து கொண்டும், இழுத்துக் கொண்டும் இடித்துக் கொண்டும், அடித்துக்கொண்டும், கடித்துக் கொண்டும் அந்த பூழுக் கூட்டிலிருந்து வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அதற்காக வருத்தப்பட்டார்கள். ஆகவே அதற்கு சரியாக ஒரு குறுக்கு வழி கொடுக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்களாம். எனவே அவர்கள் போய் ஒரு கத்தரிக்கோலைக் கொண்டு வந்து அந்த முனையை வெட்டிவிட்டார்களாம். அவர்கள் அந்த முனையை வெட்டின போது அந்த சிறிய பூச்சி வெளியே வந்தது. ஆனால் அது சரியாய் இல்லை, ஏனென்றால் அதன் சரீரத்தில் அதற்கு எவ்விதமான பெலனுமில்லையாம். அதனுடைய இறக்கைகளை அதனால் உபயோகிக்க முடியவில்லையாம். 68 நாமும் கூட அந்த விதமாக அதைச் செய்ய முயற்சிக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். “பீடத்தண்டை வாருங்கள்” என்று கூறுகிறோம். இதைச் சொல்லுங்கள், அதை அல்லது மற்றதை. ஜனங்களை திரும்ப தேவனிடத்திற்கு அல்லது சபைக்குள்ளாக அல்லது கிறிஸ்துவினிடத்திற்கு வரும்படியாக கொண்டுவர முயற்சிக்கிறோம். அவர்கள் அதை பூ—வூ (boo—hoo) என்று வெளிக்கொண்டுவர அனுமதிக்கிறோம். அவ்வளவு தான். அதனின்று வெளிவர உங்களுடைய வழியை உண்டாக்கிக் கொள்ளுகிறீர்கள். அவ்வளவுதான். நீங்கள் அவர்களுக்கு ஒரு குறுக்கு வழியைக் கொடுக்க முயற்சித்தால், அவர்களால் ஒருபோதும் நிற்கவே முடியாது. தேவன் அவர்களுக்கு இயற்கையான வழியிலே ஒரு உண்மையான பிறப்பை கொடுக்கும் மட்டும், சரியாக அவர்களுக்கு அந்த உண்மையான பிறப்பைக் கொடுக்கும் மட்டும், அவர்கள் போராடி, அதிலே கிரியை செய்வதைக் காணும்படியாகவே நான் விரும்புகிறேன். ஜனங்கள், “நல்லது, தேனே, நீ போதுமான அளவு ஜெபித்திருக்கிறாய் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறுகிறார்கள். 69 நீங்கள் பறப்பதற்கு ஆயத்தமாகும் வரைக்கும் நீங்கள் அங்கேயே அப்படியே தரித்திருங்கள். அதுதான் ஒரே காரியம். அதைச் செய்வதற்கு தேவன் ஒரு வழியை உடையவராயிருக்கிறார். 70 “ஓ, நல்லது, நீங்கள் நல்லவர்களாய் இருக்க விரும்பினால் சபையை சேர்ந்து கொள்ளும்படியாய் செல்லுங்கள். அம்மா அதே சபைக்குத்தான் சென்றார்.” 71 அது அருமையாய் இருக்கலாம். ஆனால், உங்களுக்குத் தெரியும், ஒரு ஜீவனைக் கொண்டுவர அது ஒரு மரணத்தை எடுக்கிறது. நாம் மரித்தாக வேண்டும், அது மட்டுமாக, அங்கே ஒரு புதிய ஜீவன் உள்ளே வரும்படியாக, நாம் அவ்வளவாய் மரிக்கிறோம். அப்பொழுது நம்முடைய இறக்க்கைகள் பயனுள்ளதாயிருக்கும்; நமக்கு இருக்கின்ற நம்முடைய அனுபவம் மற்றவர்களுக்கும் நமக்கும் பயனுள்ளதாயிருக்கும். 72 இஸ்ரவேலர் ஆயத்தமாயிருக்கவில்லை. ஆனால் தேவன் ஆயத்தமாயிருந்தார். அவருக்கு மோசே என்ற பெயரில் பிறந்த ஒரு சிறு குழந்தை இருந்தது. பிள்ளைகளை வெளியே கொண்டு செல்ல நாற்பது வயதில் அவன் சரியாக அங்கே இருந்தான். ஆனால் இஸ்ரவேலரோ ஆயத்தமாயில்லை. அவர்கள் ஆயத்தமாயில்லாத காரணத்தினால் அப்பொழுது அவர்கள் இருபது வருடங்கள் அதிகமாக இல்லை நாற்பது வருடங்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டியதாய் இருந்தது. நாற்பது வருடங்கள் அதிகமாக அவர்கள் எகிப்திலே கஷ்டப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் மட்டும் ஆயத்தமாயிருந்திருந்தால், நாற்பது வருடங்களுக்கு முன்பாகவே அவர்களால் வெளிவந்திருக்க முடியும். 73 தேவன் ஆயத்தமாயிருந்தார், ஏனென்றால் வாக்குத்தத்தின் நேரமானது நெருங்கி வந்தது. தேவன் ஜனங்களை ஆயத்தப்படுத்த அவருடைய வார்த்தையை நிறைவேற்ற அவருடைய வார்த்தையை எப்பொழுதும் தேவன் காத்துக்கொள்ளும்படியாக பூமிக்கு ஒரு தூதனை அனுப்பினார். அவர் மோசேயினிடத்தில், “என் ஜனங்ளுடைய உபத்திரவங்களை நான் கண்டு, ஆளோட்டிகளினிமித்தம் அவர்களுடைய பெருமூச்சுகளையும், கூக்குரல்களையும் கேட்டேன். நான் நினைவு கூர்ந்தேன். நான் என்னுடைய வார்த்தையை, என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்தேன்” என்றார். நானூறு வருடங்கள் கடந்தன, ஆனால் தேவன் அப்படியிருந்தும் அவருடைய வார்த்தையை நினைவு கூர்ந்தார். 74 ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால் தேவன் இன்னமும் அவருடைய வார்த்தையை நினைவு கூருகிறார். “நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” வாக்குத்தத்தத்தின் நேரமானது நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். 75 கவனியுங்கள், அவர் பேசிக்கொண்டும், ஆயத்தமாக்கிக் கொண்டும் இருக்கையில் நானூறு வருடங்கள் கடந்து போயின. தேவனோ அவருடைய வார்த்தையோடு சரியான நேரத்தில் இருந்தார். பின்னர் நாற்பது வருடங்கள் அதிகமான பின்னரே…என்பதையே நான் கண்டறிந்தோம். 76 இந்த வார்த்தைகளைக் கூறும்படியாக சரியாக நான் இங்கே ஒருக்கால் நிறுத்தலாம். இப்பொழுது நீங்கள் இதை நான் சொன்னதாக கூறலாம். ஏனென்றால் அங்கே பின்னாக அது ஒலிப்பதிவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். கர்த்தராகிய இயேசுவினுடைய வருகை முன்னமே நடந்திருக்க வேண்டியதாய் இருக்கிறது என்றே…நாம், நான் விசுவாசிக்கிறேன். நீண்ட காலத்திற்கு முன்பே இது நடந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு காரணம் என்னவென்றால், அவரை சந்திக்க சபையானது ஆயத்தமாயில்லை. 77 இப்பொழுது, நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்களேயானால், அவர், “நோவாவின் நாட்களில் நடந்தது போல இருக்கும்” என்றார். ஜலப்பிரளயத்திற்கு முன்பாக, நோவாவின் நாட்களில் அது எப்படி இருந்திருக்கும். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்றே தேவன் விரும்பினார். ஆகையினால் அவர் நீடிய பொறுமையாயிருந்தார். வெள்ளத்தின் நாட்கள் அதன் காலத்தையே கடந்து போயிருந்தது. எகிப்திலும் அது கடந்ததாகவே இருந்தது. உங்களுக்கு அது புரிகின்றதா? இப்பொழுது இந்த ஜலப்பிரளயத்தின் அழிவானது, நியாயத்தீர்ப்பில் உண்டான அழிவானது காலங்கடந்ததாயிருந்தது. எகிப்திலிருந்து வெளியே வந்ததும், காலம் கடந்ததாயிருந்தது, நாற்பது வருடங்கள் அதிகமான காலமாயிருந்தது. 78 ஆனால் தேவனோ தீர்மானமுடையவராய் இருந்தார். அவருடைய வார்த்தை அவரிடத்திற்கு திரும்பாது என்று தேவன் தீர்மானமுடையவராய் இருந்தார். அவருடைய வார்த்தையை அவர் காத்துக் கொள்ளப் போவதாக இருந்தார். அவருடைய வார்த்தை அவர் காத்துக் கொள்ள வேண்டும். அவர் தேவனாய் இருப்பதால் அவர் அதைச் செய்ய வேண்டும். ஒவ்வ்வொரு காரியத்தின் மாற்றத்தையும் அவர் செய்ய வேண்டியதாயிருந்தாலும், கிருபையினால் அதை அவர் செய்வார். 79 அந்தக் காரணத்தினால்தான் நான் சொல்லுகிறேன்…சபையானது தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளவில்லையென்றால், ஆயத்தப்படுத்துவது உங்களுடைய கடமையாயிருக்கிறது. “மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.” வஸ்திரத்திற்கான கிரயம் செலுத்தப்பட்டாயிற்று. அவைகள் ஆயத்தமாய் இருக்கின்றன. ஆனால் வஸ்திரங்களை அணிந்து கொள்ள நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும் “சபை தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.” 80 இப்பொழுது சகோதரரே செவி கொடுங்கள். சபையானது ஆயத்தப்படவில்லையென்றால், தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். இந்த பரிசுத்த ஜனங்கள் தங்களை நேராக்கிக் கொள்ளவில்லையென்றால், மீண்டுமாக காப்புக் கவசத்திற்குள்ளாக சென்று சுவிசேஷத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். தேவனால் எழுப்ப…அவர் கத்தோலிக்கர்களை, பிரஸ்பிடேரியன்களை அல்லது அவர் விரும்புகிற என்னத்திலிருந்தாவது கொண்டு வரமுடியும். அவர் அதைச் செய்வார். 81 ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஓஹையோவிலுள்ள (Ohio) லைமாவில் (Lima) அநேகர், உங்களில் சிலர், இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்கள் அங்கே இருந்தீர்கள். பிரஸ்பிடேரியன்கள், பாப்டிஸ்ட் மற்றும் மெத்தோடிஸ்டுகள் மத்தியில் அவர்கள் நேராக பீடத்தண்டை ஓடிவந்தார்கள். அநேக முறைகளில் பரிசுத்த ஜனங்கள் செய்கிறதைக் காட்டிலும் மிகச் சிறப்பாக அவர்கள் சுவிசேஷத்திற்கு ஆதரவளித்து ஏற்றுக் கொண்டனர். நாம் இதை இப்பொழுதுதான் சரியாக நம்முடைய சிந்தையிலே பெற்றிருக்கிறோம். அதாவது நாம் அவருடைய பரிசுத்த நாமத்தால் அழைக்கப்பட்டு, அதை அந்தவிதமாக போக அனுமதித்தோம். அவருடைய நாமத்தினாலே அழைக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகிறது. உனக்காக மரித்தவருக்காக ஜீவிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகிறது. அது ஒரு ஜீவியமாய் இருக்கிறது. தேவனுக்கென்று அர்பணிக்கப்பட்ட ஒரு ஜீவியமாய் இருக்கிறது. ஓ, நாம் வேதத்திற்கு திரும்பிப் போவது அவ்வளவு அவசியமாய் இருக்கிறதே! 82 இங்கே சில இரவுகளுக்கு முன்னர், அங்கே…உயரே நடந்த கூட்டங்களில் நான் லூதரன்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது அவர்கள் சரியாக, “இந்த லூதரன்களைப் போன்று எங்களுக்கு இன்னும் ஐந்து கல்லூரிகளை கொடுங்கள், அவர்களில் எழுபத்தியொருபேர் அந்த நாளன்று கல்லூரியில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள்” என்று கூறியிருக்கிறார்கள். அப்பொழுது நான் அங்கே இருந்தேன். “எங்களுக்கு அதைப் போன்ற இன்னும் ஐந்து பள்ளிகளைக் கொடுங்கள். கர்த்தர் பத்து வருடங்கள் தாமதித்தால் நாங்கள் முழு லூதரன் சபைகளையும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாக வைத்திருப்போம்” என்றனர். ஓ, என்னே! நிச்சயமாக. 83 தேவன் இந்தக் கல்லுகளினாலே உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். அவர் கறை, திரை, குறையற்றதாய் நிலைநிற்கும் ஒரு சபையை உடையவராய் இருக்கப்போகிறார். அவருடைய கிருபை எல்லாவற்றிற்கும் போதுமானதாய் இருக்கிறது. அவரால் அதிகமாயும் அபரிமிதமாயும் செய்ய முடியும். 84 இங்கே அண்மையில் லூதரன்கள் உலகத்திற்கு தீவட்டி வெளிச்சத்தை உடையவர்களாய் இருந்தார்கள் என்று நான் கூறினேன். என்ன சம்பவித்தது? ஒரு சமயத்திலே முதலாவது சீர்திருத்தத்திலே, லூத்தரன் ஜனங்களாகிய நீங்கள், நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருந்திருந்தால் உங்களுடைய வெளிச்சத்திற்கு என்ன சம்பவித்தது? என்ன, அது போய்விட்டதா? அது போய் விட்டதற்கு இதுதான் காரணம், ஏனென்றால் நீங்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விட்டீர்கள். நீங்கள், “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்பதை விசுவாசித்தீர்கள். அது முற்றிலும் சத்தியமாயிருக்கிறது. ஆனால் “விசுவாசத்தினாலே நிதிமான் பிழைப்பான்” என்பதைக் காட்டிலும் அங்கே அதிகம் இருக்கிறது. 85 பின்னர் அதைத் தொடர்ந்து வந்தது மெத்தோடிஸ்ட். அவர்கள், மெதோடிஸ்ட் ஜனங்களாகிய உங்களைத்தான், நீங்கள் தீவட்டி வெளிச்சமாகிய பரிசுத்தமாகுதலை எடுத்துக் கொண்டீர்கள். ஒரு மகத்தான எழுப்புதலுக்கான தீவட்டி வெளிச்சத்தை நீங்கள்தான் பிடித்திருந்தீர்கள். அதெல்லாம் உண்மைதான். ஆனால் என்ன சம்பவித்தது? காரணம் வெளிச்சத்தைப் போகவிட்டீர்கள். அதுதான் சம்பவித்தது. கிருபையின் இரண்டாவது நிச்சயமான கிரியையாகிய பரிசுத்தமாகுதலை நீங்கள் பிரசங்கித்தீர்கள். அது நிச்சயமானது. வேதத்தின் மூலமாக சத்தியமாக இருக்கிறது. ஆனால் அதோடு அதை நீங்கள் போகும்படி விட்டீர்கள். 86 பின்னர் தொடர்ந்து வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலோடு பெந்தெகோஸ்துகள் வந்தனர். நீங்கள் பாஷைகளில் பேசினீர்கள். பின்னர் நீங்கள் அதிலிருந்து ஒரு உபதேசத்தை உண்டாக்கினீர்கள். பின்னர் என்ன சம்பவித்தது? உங்களுடைய வெளிச்சம் போய்விட்டது. என்ன காரியம்? நீங்கள் வார்த்தையோடு தரித்திருக்க தவறியதே காரணமாய் இருக்கிறது. 87 தேவனுடைய வார்த்தையை நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்துகிற விதமாகவே, நாம் வெளிப்படுத்த வேண்டும். 88 நேரமானது வெளிப்படுத்துகிறதுபோல, விஞ்ஞானம் வெளிப்படுத்துகிறது. இயற்கையான உலகத்தில்…இந்த மனிதன், தேவன் அவனை உண்டாக்கினபோது, ஆறாயிரம் வருடங்களாக அவன் இருந்து வருகிற அதே மனிதனாகவே இருக்கிறான். அவன் அதே புத்தி சாதுரியமான அதே மனிதனாகவே இருக்கிறான். அவன் அதே புத்தி நுட்பமானவனாய் இருக்கிறான். அவன் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு இருந்த அதே ஐம்புலன்களோடு உள்ள அதே மனிதனாகவே அவன் இருக்கிறான். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களில் அவன் என்ன முன்னேற்றங்களைச் செய்திருக்கிறான் என்று பாருங்கள். அந்த விழுந்துபோன தேவனுடைய குமாரன் என்ன செய்திருக்கிறான் என்று பாருங்கள். அந்த விழுந்துபோன தேவனுடைய குமாரன் என்ன செய்திருக்கிறான் என்று பாருங்கள். அவன் மோட்டார் வாகனங்களையும் வானொலியையும், மின்சார விளக்குகளையும், அணுகுண்டுகளையும் மற்றும் பீற்றுவளி விசையால் இயங்கும் விமானங்களையும் அவன் கண்டுபிடித்திருக்கிறான். எவ்வளவு வேகம் என்பதை பாருங்கள். விஞ்ஞானத்தில் பக்கங்கள் வேகமாக திரும்பிக் கொண்டு இருக்கின்றன. 89 ஆனால் தேவன் நமக்கு வார்த்தையை வெளிப்படுத்த விரும்புகிறபோது, நாமோ ஏதோ பழைய சபை கோட்பாட்டின் பின்னேயே தயங்கி நிற்க, அங்கேயே நிற்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். தேவனுடைய மகத்தான அழகான சபையானது தன்னுடைய காலால் நின்றுகொண்டு, பள்ளத்தாக்கின் லீலியைப் போன்று பிரகாசித்துக் கொண்டு இருக்க வேண்டிய நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 90 ஆனால் நாமோ பின்னாக இருக்கிறோம். சிலர், “நான் பிரஸ்பிடேரியனை, மெதோடிஸ்டை, பெந்தெகோஸ்தை சேர்ந்தவன், நான் இது அல்லது அது” என்கிறார்கள். ஓ, என்ன ஒரு அவமானம்! 91 நாம் வெளிப்படுத்த வேண்டும். தேவனுடைய ஆவியானது வெளியே ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு சிறிய பீச்சலல்ல, ஒரு சிறு ஞானஸ்நானமல்ல. ஆனால் அபிஷேகத்திற்குப் பின்னர் அபிஷேகம்! “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்று ஒரு வெளிப்பாடல்ல அல்லது “பரிசுத்தமாகுதல்” அல்லது “ஆவியின் வரங்கள்” என்றல்ல, ஆனால் வெளிப்பாட்டிற்குப் பின்னர் வெளிப்பாடு, வல்லமைக்குப் பிறகு வல்லமை, மகிமைக்குப் பின்னர் மகிமை! ஏன்? நாம் மேல் நோக்கி போகின்ற பாதையிலே இருக்க வேண்டும். மறுரூபமாகுதலுக்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். நாம் ஏதோ பழைய காரியங்களில் பின்னாக தயங்கி நின்று கொண்டு, “நன்றாயிருக்கிறதா?” என்கிறோம். நாம் தொடர்ந்து பின்னாக போய்க்கொண்டே இருக்கிறோம். நாம் முன்னோக்கிச் செல்லுவோமாக! 92 அந்த எபிரெயர்கள், “இப்பொழுது இங்கே நாம் கடினமாய் வேலை செய்திருந்தாலும், நாம் நன்றாக போஷிக்கப்படுகிறோம். இப்பொழுது நம்மிடத்தில் இருக்கிற காரியங்கள் இருக்கிறது. நமக்கு பூண்டு, பானைகள் முதலானவைகள் இருக்கிறது. எனவே நாம் திருப்தியடைந்தவர்களாய் இருப்போமாக” என்றனர். 93 ஆனால் மோசே ஒரு வெளிப்பாட்டை உடையவனாய் இருந்தான். அவன் தேவனுடைய சமூகத்தில் இருந்துகொண்டிருந்தான். அவன் வேறு எதையோ உடையவனாய் இருந்தான். அவன் திரும்பிப் போய் அநேக நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு முன்னர் இருந்த அதே தேவன்தான் இப்பொழுது இருக்கிறார் என்பதை அவர்களுக்கு காண்பித்தான். அவர் அதே மாறாத தேவனாய் இருந்தார் என்று நிரூபிக்கும்படியாக அவர்களுக்கு முன்பாக அவன் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தான். 94 ஓ, அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” யுகங்கள் மாறுகின்றன. காலங்கள் மாறுகின்றன. ஜனங்கள் மாறுகின்றார்கள். ஆனால் தேவனோ நிலை மாறாதிருக்கிறார். அவர் எல்லா நேரத்திலும் மாறாதவராய் இருக்க வேண்டும். அவருடைய வார்த்தை நித்தியமான சத்தியமாயிருக்கிறது. அவர் அதிலிருந்து வித்தியாசப்பட இடப்புறமிருந்து அல்லது வலப்புறத்திற்கு மாறமுடியாது. அவர் மாறாதவராகவே நிலைத்திருக்க வேண்டும். 95 பின்னர் என்ன சம்பவிக்கிறது என்று நாம் கண்டறிவோம். இங்கே மோசே அடையாளங்களோடு கீழே வருகிறான். நான் தேவனுடைய சமூகத்திலிருந்திருக்கிறேன், நான் தேவனை கண்டிருக்கிறேன், தேவன் மகத்தான காரியங்களை செய்திருக்கிறார். அவர் ஒரு தெய்வீக சுகமளிக்கும் கிரியை நடப்பித்தார். அவர் இன்னொரு கிரியையை அற்புதமாக நடப்பித்தார். பரலோகத்தின் தேவன்தாமே அவனுக்கு தோன்றியிருந்தார் என்று அவர்களுக்கு அவன் காட்டினான். இயற்கைக்கு மேற்பட்டவரை சந்தித்த நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு, தேவன் இன்னமும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவன் காண்பித்தான். 96 தேவன் அவனை அனுப்பி, “‘இருக்கிறேன்’ என்பவர் உங்களிடத்திற்கே அனுப்பியிருக்கிறார் என்று போய் அவர்களுக்குச் சொல்” என்றார். “இருந்தவர்” என்பவர் அல்ல, “இருக்கப் போகிறவர்” என்பவர் அல்ல, “இருக்கிறேன்” என்பவர், ஒரு நிகழ்காலம்! அவர் “இருந்தவர்” என்பவர் அல்ல. 97 ஜனங்கள் தேவனை உரிமைகோரிக் கொண்டு, அற்புதங்களின் நாட்கள் கடந்து போயிற்று, தெய்வீக சுகமளித்தலும், எல்லா ஆசீர்வாதங்களும் போய்விட்டன என்று எப்படி கூற முடியும்? இன்னமும், “அவர் ஜீவிக்கிற தேவனாயும், இருக்கிறேன் என்பவராயும் இருக்கிறாரா என்று கூறினால்”, அவர் “இருக்கிறேன் என்பவராய் இருப்பாரேயானால்” அவர் பற்றியெரிகின்ற புதரில் இருந்த வண்ணமாகவே அவர் அப்படியே அவ்வளவு தத்ரூபமாயிருக்கிறார். 98 அங்கே அவர் தோன்றினபோது, அந்த மகத்தான நாமத்தை, எந்த நிபுணராலும் இன்னும் அதை வியாக்கியானம் செய்ய முடியவில்லை, யே—கோ—வா. ஒருவராலும்…அவர்கள் அதை “யேகோவா” என்று அழைக்கிறார்கள். ஆனால் அதுவல்ல, அதை ஒருவராலும் வியாக்கியானம் செய்ய முடியாது. 99 ஏன்? அது நித்தியமான ஒன்றாய் உள்ளது. ஆமென் [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒருமுறை தட்டுகிறார்.—ஆசி.] அவர் ஒளியில் வாசம் பண்ணுகிறார். அவர் நித்தியத்தில் வாசம் பண்ணுகிறார். அவர் அழிவில்லாமையில் வாசம் பண்ணுகிறார்; நித்தியமாய், “இருக்கிறவர்.” அல்லேலூயா! 100 என்னுடைய விசுவாசம் அந்த திடமான பாறையின் மேல் தங்கியிருக்கிறது, அந்த இடத்தில் நீங்கள் நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கும் போது, எதுவுமே எப்போதுமே தீங்கு செய்யமுடியாது. புயல்கள் ஒருக்கால் குலுக்கலாம், அதன்மேல் அடிக்கலாம், ஆனால் என்னுடைய நங்கூரமோ திரைக்குள்ளாக பற்றிக் கொண்டு இருக்கிறது. ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ நங்கூரமிடப்பட்டு, அதை ஏற்றுக் கொண்டிருக்கும்போது, அதனின்று உன்னை ஒன்றினாலும் என்றென்றைக்குமாய் அசைக்க முடியாது. 101 அவர்களுடைய விடுதலைக்கான அவர்களுடைய நேரமாய் இருக்கையில், அவர்கள் அதைக் காண தவறிப்போனார்கள். எனவே இது சபைக்கான பவனியின் கட்டளைகளாயும், விடுதலைக்கான நேரமுமாய் இருக்கிறது. அது சமீபமாய் இருக்கிறது. 102 என் நண்பனே கவனி. அவர்களுக்கு என்ன இருந்தது? முதலாவது வார்த்தை. இரண்டாவது ஒரு தீர்க்கதரிசி. மூன்றாவது அவர்களை நடத்த, அவர்களுக்கு வழிகாட்ட ஒரு தூதன். ஒவ்வொருவரும் மற்றவரோடு ஒருமனப்பட்டிருந்தார்கள். அவர்களில் மூவருமே. வார்த்தை தீர்க்கதரிசியோடு ஒத்திருந்தது; தீர்க்கதரிசி வார்த்தையோடு இசைந்திருந்தான்; தூதன் அவர்களில் மூவரான எல்லாரோடும், அவர்கள் எல்லாரோடும் ஒத்திருந்தான். வார்த்தை, தீர்க்கதரிசி, ஒரு தூதன்! அவர்கள் பவனிக்காக ஆயத்தமாயிருந்தார்கள். 103 ஓ, தேவனாகிய கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒன்று சேர்த்து தட்டுகிறார்.—ஆசி.] நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். வார்த்தை, தீர்க்கதரிசி, தூதன், அவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து ஒரு மகத்தான சாட்சியாயிருந்தனர். “சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளையுடைய வாக்கினால் நிலைவரப்படும்” என்று தேவன் எப்பொழுதும் கூறியுள்ளார். ஒரு உண்மையான தீர்க்கதரிசி எப்பொழுதும் வார்த்தையோடு இசைந்திருப்பான். எந்த தூதனும் சத்தியத்திற்கு சாட்சி பகருவான். ஆமென். நாம் பவனியின் கட்டளைகளுக்காக ஆயத்தமாயிருக்கிறோம். நிச்சயமாக. 104 அவன் ஜனங்களை வெளியே கொண்டு வந்தான். அவர்களுடைய பாதையிலே அவர்கள் தீர்க்கதரிசிக்கு விரோதமாகவும், வார்த்தைக்கு விரோதமாகவும் கலகம் பண்ண துவங்கினார்கள். அவர்கள் தொல்லைக்குள்ளாகி விட்டனர். வேதம், “அவர்களோடு கூடப் பல ஜாதியான ஜனங்களும் போனார்கள்.” என்று கூறியுள்ளது. பல ஜாதியான ஒரு ஜனக்கூட்டம் வெளியே வந்தது. 105 அது என்னவாக இருந்தது? இயற்கைக்கு மேம்பட்டதானது செய்யப்பட்டதாயிருந்தது. அங்கே அற்புதங்களும், அதிசயங்களும் இருந்தன. எந்த நபரும், ஒரு மானிடனும் அவன் எங்கிருந்து வந்தான் என்ற திரைக்குப்பின்னேயும், அவன் என்றோ ஒருநாள் எங்கோ போகப் போகிறான் என்பதையும் காண வாஞ்சிக்கிறான். திரைக்குப் பினால் காண அவன் வாஞ்சிக்கிறான். ஆனால், அநேக நேரம் இயற்கைக்கு மேம்பட்டதான கிரியைகள் நடைபெறும்போது, அப்பொழுது அங்கே பலஜாதியான ஜனங்கள் போகிறார்கள். 106 அதுதான் லூதரின் நாட்களில் சம்பவித்தது. கலப்படமானபோது…அந்த நாள் முதற்கொண்டு தேவன் அவர்கள் வெளியே கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். லூதரின் நாட்களில் “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்றிருந்தது. அவர்கள் அதை பரிசோதித்து, அதை சோதித்துப் பார்த்தனர், அது அவ்விதமாய் இருக்கக் கண்டார்கள். பல ஜாதியான ஒரு ஜனக்கூட்டம் சென்றது. லூதர் சென்ற மாத்திரத்தில் என்ன சம்பவித்தது? அவர்கள் சபையை ஸ்தாபித்துக் கொண்டு ஒரு மகத்தான பெரிய குருமார் அமைப்பு முறையை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் அதைச் செய்தபொழுது சபையானது பின்னே சென்று ஒதுக்கி வைக்கப்பட்டது. 107 தொடர்ந்து ஜான் வெஸ்லி (John Wesley) வந்தார். மகத்தான, வல்லமையுள்ள மத்திய காலத்தில் உண்டான போர்வீரர்களில் ஒருவர். அவர் சரியாக அடியெடுத்து வைத்து ஆங்கிலிகன் சபையை எதிர்த்தார், கத்தோலிக்க சபையை எதிர்த்தார். மற்றும் உலகத்தையே எதிர்த்தார். அதாவது “பரிசுத்த தேவன், ஜனங்களை பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும் என்று கூறினார்” என்றார். அவர் அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல், தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் உறுதியாய் நின்று ஒரு அற்புதத்தைக் கொண்டு வந்தார். என்ன சம்பவித்தது? பல ஜாதியான ஜனக்கூட்டம் அவரோடு புறப்பட்டது. வெஸ்லி சென்றபோது கலப்படமான திரள் கூட்டம் உள்ளே வந்தது. அவர்கள் என்ன செய்தார்கள்? ஞானப்பாட்டு புத்தகங்களின் பாடல்களில் “இரத்தம்” என்கிற வார்த்தையும் கூட இருக்கக்கூடாது என்ற அளவிற்கு சபையை களங்கப்படுத்திவிட்டனர். நிச்சயமாக. 108 நல்லது, அதற்குப் பிறகு அதைத் தொடர்ந்து பெந்தெகோஸ்துக்கள் வந்து, பெந்தெகோஸ்துக்கள் வரங்களைக் கண்டறியத் துவங்கினர். அவர்கள் வரங்களைப் பெற்ற மாத்திரத்தில் முதல் காரியம்…அந்த முழுக்கூட்டத்திலுமே, “பாஷைகளில் பேசுதல்” என்ற மிகச் சிறிய வரமே உள்ளது. அதுதான் கடைசியும், சிறியதுமாயிருக்கிறது. தேவன் இந்த சிறிய காரியங்களைக் கொண்டு அவர்களிடம் துவங்கினார். அதையும் கூட அவர்களால் பற்றிக்கொள்ளக்கூட முடியவில்லை. 109 இங்கே பாருங்கள். முதலாவது வரம். வரங்களின் வரிசையில் ஞானம் இருக்கிறது. இரண்டாவது அறிவாய் இருக்கிறது. உங்களிடத்தில் ஞானமே இல்லாதிருந்தால் அறிவைக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? முதலாவது மேலான காரியங்களைத் தேடுங்கள், ஞானம். உங்களிடத்தில் ஞானம் இல்லையென்றால் அறிவோடு கூட அல்லது பாஷைகளில் பேசுதலோடு அல்லது இந்த மற்ற காரியங்களோடு உங்களால் என்ன செய்ய முடியும்? அது ஞானத்தையே எடுத்துக் கொள்கிறது. அது தேவனுடைய ஞானத்தை எடுத்துக் கொள்கிறது. சாலமோன், “அதை உங்களுடைய தாய்” என்று அழையுங்கள் என்றான். சரி. 110 ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? பெந்தெகோஸ்துக்கள் பாஷைகளில் பேசுவதை பெற்றுக்கொண்டு, அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தையே அவர்கள் உண்டாக்கினார்கள். அவர்கள் போய், “இதுதான் அது” என்று கூறினார்கள். நிச்சயமாக, அவர்கள் அதைச் செய்தார்கள். கலப்படமான ஒரு திரள் கூட்டம் அவர்களோடு சென்றது. 111 இன்றைக்கு பெந்தெகோஸ்துக்களோடு என்ன சம்பவித்திருக்கிறது? அவர்களில் இரண்டு கூட்டத்தார் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அப்படியே குளிர்ந்தும், சம்பிரதாயமாயும், அவர்களால் இயன்றமட்டும் விரைப்பாய், மொறமொறப்பாயும் இருக்கிறார்கள். இன்னொருவர் ஒரு பெரிய கூட்ட கொள்கைகளுக்கு பின்னாக இருக்கிறார்கள். எண்ணெய் வடிவது, கரங்களில் இருந்து இரத்தம் வருவது முதலிய எல்லாக் காரியங்களும் தேசத்தினூடாக இருக்க, அதை பரிசுத்த ஆவியின் அடையாளங்கள் என்று கூறுகிறார்கள். தவளைகள், பல்லிகள் மற்றும் மற்றக் காரியங்கள், ஜனங்களிலிருந்து வெளியே குதித்தல், அதன் பிறகு அதனை மதுபானங்களுக்குள்ளாகவும் மற்றும் இவ்வாறானவைகளை சேர்த்துக் கொள்ளுதல். பிசாசிற்கு மாம்சமும், எலும்பினாலுமான ஒரு சரீரம் கிடையாது என்று எவரொருவரும் அறிவர். 112 இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தமானது ஒரு மனிதன் மேல் சொட்டியிருந்தால், அது ஒரு எலும்பும் மாம்சமுமான சரீரமாகவே இருந்திருக்கும், அதாவது கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டார்; எனவே அது தவறானதாகும். 113 இயேசுவானவர் வரும்பொழுது, “முழங்கால்கள் யாவும் முடங்கும் என்றும், நாவுகள் அறிக்கை பண்ணும்” என்றும் வேதம் கூறியுள்ளது. அவர்…“மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல அவருடைய வருகையும் இருக்கும். மனுஷ குமாரனுடைய வருகையும் அப்படியே இருக்கும். முழங்கால்கள் யாவும் முடங்கும். நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்”. அது உண்மை என்று நாம் அறிந்திருக்கிறோம். 114 ஆகையால் அந்தக் காரியங்கள் சம்பவிக்கிறதை நாம் காணும் பொழுது, இந்தக் காரியங்களெல்லாம் நிறைவேறுதலுக்கு வருவதை நாம் காணும்பொழுது, அப்பொழுது கலப்படமான ஒரு திரள்கூட்டம் அந்த ஜனங்களோடு சென்றது என்பதை நாம் அறிவோம். கொஞ்சம் கழித்து, ஒரு வகுப்பினர், ஒரு பக்கத்தின் வழியில் தாண்டிப் போகின்றதானது, இன்னொன்று மற்றொரு பக்கத்தை தாண்டிப் போகிறதானது, அங்கே தான் உங்களுடைய கலப்படமான திரள் கூட்டம் இருக்கிறது. அங்கதான் உங்கள் எதிர்விளைவு இருக்கிறது. அங்கேதான் நீங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள். 115 அதைப் போன்று செய்தபோது, அவர்கள் காதேஸ்பர்னியாவுக்கு வந்தார்கள். அவர்கள் காதேஸ்பர்னியாவுக்கு வந்தபோது, அது நியாயத்தீர்ப்பின் ஆசனமாய் இருந்தது. அங்கேதான் வாதங்கள் தீர்க்கப்பட வேண்டியிருந்தது. 116 ஓ, சிறிய சபையே உங்களால் மட்டும் அதை புரிந்து கொள்ள முடிந்தால் நலமாயிருக்கும்! இப்பொழுது இங்கேதான் நாம் ஒரு நிமிடம் அப்படியே திணித்து உட்செலுத்த விரும்புகிறோம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். காதேஸ்பர்னியா சோதனையின் நேரமாயிருந்தது. தேவனிடத்திற்கு வருகின்ற ஒவ்வொரு பிள்ளையும் தேவனால் சோதிக்கப்பட்டாக வேண்டும். அங்கே ஏதும் விதிவிலக்கே கிடையாது. அவரிடத்திற்கு வருகின்ற ஒவ்வொரு பிள்ளையையும் தேவன் சோதித்து பரீட்சிக்கிறார். அது சரிதானே? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவர்களையே என்று வேதம் கூறியுள்ளது. இப்பொழுது அந்த சோதனைகளும் பரீட்சைகளும் வருகிறபோது நாம் கவனிக்கிறோம். 117 தேசங்களுக்காக வருகிற சோதனை நேரங்கள் இருக்கின்றன. இப்பொழுது, நான் இதைச் சொல்லுகிறேன். நான் ஒரு அரசியல்வாதியல்ல. தேவன் அவருடைய சொந்த தேசத்தை நடத்துகிறார். அவர் இந்த தேசங்களை நடத்துகிறதில்லை. இவைகளை பிசாசு நடத்துகிறான். அவைகள் ஒவ்வொன்றையும் அவைகள் நடத்துகிறதை வேதம் கூறியுள்ளது. பிசாசு ஒவ்வொரு தேசத்தையும் நடத்துகிறான். தேசங்களுக்கான சோதனை நேரங்கள் வரும்பொழுது கவனியுங்கள். 118 இஸ்ரவேலுக்கான சோதனை நேரம் வந்தபொழுது, அவள் தவறிப் போய்விட்டாள். அவள் அப்படி செய்தபோது, தேவன் அவளை பாபிலோனிடத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஒரு தேசமென்ற முறையில் அவள் தவறிப்போனாள். ரோமாபுரிக்கான சோதனை நேரம் வந்தபோது, அவள் தவறிப் போனாள். கீரிஸுக்கான சோதனை நேரம் வந்தபோது, அவள் தவறிப் போனாள். பிரான்சுக்கான சோதனை நேரம் வந்தபோது, அவள் தவறிப் போனாள். ருஷ்யாவுக்கான சோதனை நேரம் வந்தபோது, அவள் தவறிப் போனாள். 119 கவனியுங்கள். தேவனிடத்தில் பயபக்தியான இருதயத்தோடு நான் இதை கூறுகிறேன். அமெரிக்காவுக்கான சோதனை நேரம் வந்திருக்கிறது, அவளோ தவறிப் போயிருக்கிறாள். கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை சுவிசேஷமானது பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு சிறிய இடத்தையும், வெடிப்பையும், மூலையையும் அலசிவிட்டார்கள். பில்லிகிரஹாமினுடையதும், ஜேக் ஷுலருடையதும், ஓரல் ராபர்ட்ஸ்ஸினுடைய மகத்தான எழுப்புதல்களும் நடந்தேறியிருக்கின்றன. அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள், ஓ, ஒவ்வொரு சிறிய வெடிப்பையும் மூலையையும் அலசியிருக்கின்றவர்கள், அவர்களுக்கு பிசாசு ஒரு தொலைக்காட்சியை அக்கரையிலே தூக்கிப் போட்டான். பின்னர் தேவன் மனிதரை ஒரு தொலைக்காட்சியின் மேல் எரிந்து அதன் மூலமாய் கிரியை செய்தார். மது அருந்தும் அறையில் உள்ள ஒவ்வொரு குடிகாரனும் அல்லது அவன் எங்கே இருந்தாலும், ஒரு சாக்குப்போக்கும் இன்றி நிற்பான். ஆம ஐயா. சோதனை நேரமானது வந்திருக்கிறது. பிரசங்கபீடத்திலிருந்து நான் உங்களுக்கு என்ன கூறினேன்? கடந்த வருடம் அமெரிக்கா அவருடைய மோசமான தவறைச் செய்தாள். “மோசமான தவறை” என்று நான் கூறினேன். அவள் நிச்சயமாக செய்தாள். 120 இப்பொழுது அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பாருங்கள். நீங்கள் அதை அரசியல் காரியங்களில் காணலாம். அவர்கள் நேராக போய் அரபியர்களோடு தொடர்பு வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியாதா? தேவனுடைய வார்த்தை, “இஸ்ரவேலை சபிக்கிறவன் சபிக்கப்படுவான்” என்று கூறியுள்ளது. நிச்சயமாக. 121 நான் இஸ்ரவேலோடு நிற்கிறேன், “நம்முடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.” அவர்கள் அதை எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக. 122 அவர்கள் தவறான காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, அவர்கள் செய்கிறார்கள். சகோதரனே யூதர்களுக்கு விரோதமாக திரும்பின ஒவ்வொரு தேசத்தையும் நோக்கிப் பாருங்கள். அவர்கள் மூழ்கிப் போனார்கள். ஜெர்மனியை நோக்கிப் பாருங்கள். யூதருக்கு விரோதமாக அவள் திரும்பினபோது, அவர்கள் சரீரங்களைச் சுட்டு எரித்து சாம்பலாக்கினார்கள். இன்றைக்கு அது என்னவாய் இருக்கிறது என்று பாருங்கள். இத்தாலியை நோக்கிப் பாருங்கள். அது யூதர்களுக்கு எதிராக திரும்பினது. அப்பொழுது முசோலோனி அவர்களை இத்தாலியிலிருந்து வெளியேறினான். இன்றைக்கு அவளை நோக்கிப் பாருங்கள். நாம் அவர்களை போஷிக்காதிருந்தால், அவர்கள் பட்டியினியினால் மரித்திருப்பார்கள். 123 இங்கே சுவிசேஷம் வந்து, வருடங்களாக தேசங்கள் முழுவதுமாக ஒரு இரக்கத்தின் அழைப்பைக் கொடுக்கிறது. நாம் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டோம். இப்பொழுதோ, பிசாசு தன்னுடைய இருக்கையை எடுத்துக்கொண்டு கிரியை செய்து கொண்டு, இந்த அரசியல் மனிதர்களின் இருதயங்களை இஸ்ரவேலுக்கு விரோதமாக திருப்பிக் கொண்டிருக்கிறான். அவர்கள் அங்கே அரபியர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். சகோதரனே நாம் செயலளவில் கிட்டத்தட்ட விலகிப்போய் விட்டோம். அது உண்மை. உலகம் எவ்வளவு நிச்சயமாக இருக்கிறதோ, அவ்வளவு நிச்சயமாய் நாம் முழுகிப் போவோம். 124 நான் என்னுடைய தேசத்தை நேசிக்கிறேன். அது என்னத்திற்காக நிற்கிறதோ அதற்காக நான் அதை நேசிக்கிறேன். ஆனால் சகோதரனே, எல்லாவற்றிற்கும் மேலாக நான் என் கர்த்தரை நேசிக்கிறேன். என்னுடைய தேசமானது அதனுடைய முழங்காலில் இருப்பதைக் காண நான் விரும்புகிறேன். ஆனால் நாம் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம் என்றே நான் பயப்படுகிறேன். நாம் முடிவு நேரத்தில் இருக்கிறோம். என்ன சம்பவித்தது? கலப்படமான ஒரு திரள் கூட்டம் உள்ளே நுழைந்தது. 125 ஒரு சில வருஷங்களுக்கு முன்னர், அவர்களுக்கு பழைய மாதிரியான பரிசுத்த சபைகள் இருந்தபோது, அவர்கள் தேவனுக்கென்றும், நீதிக்கென்றும் நின்றபோது, ஸ்திரீகள் உடுத்திக் கொள்ளுதலும் சீமாட்டிகளைப் போன்றும் இருந்தபோது, புருஷர்கள் புருஷர்களைப் போன்று உடுத்தவும் நடந்து கொண்டுமிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை காலையில் ஜனங்கள் சபைகளுக்கு சென்றபோது, அவர்களுக்கு முழு இரவு ஜெபக்கூட்டங்கள் இருந்தபோது இருந்த நம்முடைய சபைகளை கவனியுங்கள். அவர்களுக்கு ஒரு உண்மையான எழுப்புதல் உண்டாயிருந்தது. தேவன் ஆசீர்வதித்தார். அவர்களுக்கு முன்பாக ஒவ்வொரு சத்துருவையும் அவர் அழித்துப்போட்டார். அவர்கள் தொடர்ந்து பிரயாணத்தில் இருந்தார்கள். ஆனால் ஆகானின் பொன்பாளம் பாளையத்திற்குள் வந்தது, அங்கே அழிவைத் தவிர வேறொன்றும் விடப்படவில்லை. நாம் நம்முடைய பாதையில்…நம்முடைய வார்த்தையின் பேரில் இருக்கிறோம். தேவன் வார்த்தையை காத்துக் கொள்கிறார். 126 சோதனை நேரம் வந்தது. லூதரன் சபைக்கான சோதனை நேரம் வந்தது. மெதோடிஸ்ட் சபைக்கான சோதனை நேரம் வந்தது. பெந்தேகோஸ்தே சபைக்கான சோதனை நேரம் வந்தது. அது ஒவ்வொரு சபைக்கும் வருகிறது அது ஒவ்வொரு நபருக்கும் வருகிறது. சோதனை நேரம். 127 நீங்கள் சரியாய் இருக்கிறீர்கள் என்று நீங்கள் எப்பொழுதும் அறிந்து கொள்ள ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு. தேவனுடைய நித்தியமான வரைபடத்தோடு தரித்திருங்கள். வார்த்தையோடு தரித்திருங்கள். தேவன் என்ன சொல்லுகிறாரோ, “அது சரியானது” என்று கூறுங்கள். ஒன்றையும் குறைவாகவும் அல்லது ஒன்றையும் அதிகமாகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள். தேவனுடைய வார்த்தையானது வாக்குத்தத்தங்களால் நிறைந்திருக்கும்பொழுது இதற்காகவும் அதற்காகவும், மற்றவைக்காகவும் நாம் ஏன் மாற்றீடுகளை உடையவர்களாய் இருக்க வேண்டும்? ஆம் ஐயா, நாம் எந்த மாற்றீடுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் சத்தியமாய் இருக்கிறது. தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார். அது எவ்வளவு நேர்மையற்றதாய் காணப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தேவன் தம்முடைய வார்த்தையை எப்படியாயினும் காத்துக் கொள்கிறார். அவர் நிச்சயமாய் காத்துக்கொண்டார். 128 ஒரு நேரம் வரும். அப்பொழுது வண்டிகள் வீதிகளினூடாக குதிரைகள் இல்லாமல் ஓடும் என்று உங்கள் பூட்டனார் உங்களுடைய பாட்டனாரிடம் கூறியிருந்தால் உங்களுடைய பாட்டனார் என்ன கூறியிருப்பார்? ஒருக்கால் அவரைப் பார்த்து அவர் சிரித்திருப்பார். ஆனால் அவைகள் இங்கு இருக்கின்றன. உண்மை. 129 இந்த எல்லா தீர்க்கதரிசனங்களும் உண்டுபண்ணப்பட்டிருக்கும் போது சம்பவிக்கப்போவதாக இருந்த இந்த மற்ற காரியங்களைக் குறித்து என்ன? ஆனால் நாம் இங்கே இருக்கிறோம். 130 அந்த மகிமையான மாட்சிமை பொருந்திய தேவ குமாரனாகிய இயேசு என்றோ ஒருநாள் வருவார். அவர் அதைச் செய்வதாக அவர் வாக்களித்தார். அவர் பாவத்தை நியாயந்தீர்ப்பதாக அவர் வாக்களித்தார். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை சேர்த்து இருமுறை தட்டுகிறார்.—ஆசி.] சகோதரனே பாவத்திற்காக தேவனால் அளிக்கப்பட்ட பலியை இன்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் நீங்கள் நியாயத்தீர்ப்பில் தனிமையாய் நிற்பீர்கள். தேசமானாலும், சபையானாலும் அல்லது தனிப்பட்ட நபரானாலும் நியாயத்தீர்ப்பில் தனியாய் நிற்பீர்கள். சோதனை நேரமாயிற்றே! 131 கவனியுங்கள். அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதை கண்டறிவதற்கு, அவர்கள் யாரோ ஒருவரை, அவர்களில் பன்னிருவரை அனுப்பினார். அவர்களில் பத்து பேர் திரும்பி வந்து, “ஓ, நம்மால் அதைச் செய்யவே முடியாது! அது கூடாத காரியமாயிருக்கிறது. நம்மால் அதைச் செய்யவே முடியாது” என்று கூறினார்கள். 132 ஆனால் பண்டைய காலேபும், யோசுவாவும் ஒரு அடிக்கட்டையின் மேல் ஏறி நின்று, அவர்கள், “நம்மால் அதைச் செய்ய முடியும், நாம் அதைச் செய்வதற்கு வல்லமையுள்ளவர்களாயிருக்கிறோம்” என்றார்கள். 133 ஏன்? அது நீங்கள் என்னத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை பொருத்ததாயிருக்கிறது. நீங்கள் வெளிப்பக்கமாய் பார்த்துக்கொண்டு இருந்திருந்தால், “இந்த விதமாக அது காணப்படுகிறது, அது அந்த விதமாகவே காணப்படுகிறது?” என்பீர்கள். அந்த ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள் அல்லது மற்ற ஏதோ காரியம் என்ன சொல்லுகிறது என்பதை நோக்கிப் பார்க்க வேண்டாம். தேவனுடைய வார்த்தைக்கு அது முரணாயிருந்தால், வார்த்தையோடு தரித்து நில்லுங்கள். 134 அந்த தேசத்தை தேவன் அவர்களுக்கு வாக்களித்தார். அதனால் தான் காலேபும் மற்றவர்களும் அதன்பேரில் தான் அவர்களுடைய நம்பிக்கையை வைத்திருந்தார்கள். 135 உபாகமம் புத்தகத்தை வாசித்து, எப்படி மோசே அவர்களை திருத்தினான் என்று பாருங்கள். “நான் இதைச் செய்தேன், நான் அதைச் செய்தேன், தேவன் இதைச் செய்தார், இதைச் சொன்னார். ஆனால் நீங்களோ செய்ய மறுக்கிறீர்கள்” என்றான். தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தோடு தரித்திருக்கிறார். 136 ஓ, சில சமயங்களில் அது மிகவும் கடினமானது போன்று தோன்றுகிறது. இப்பொழுது நீங்கள் இதற்கு செவி கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது கடினமான ஒன்று…இது ஒரு யுத்தம். 137 எகிப்திலிருக்கையில், தேவன், “நான் அந்த தேசத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன்” என்றார். இப்பொழுது அவர், “நான் உங்களை பிரித்தெடுத்து, உங்களை அங்கே கொண்டுபோய், உங்களை உட்கார வைக்கப் போகிறேன்” என்று ஒருபோதும் கூறவேயில்லை. அவர்களுக்கு இருந்த ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் அவர்கள் போரிட வேண்டியதாயிருந்தது. 138 தேவன், அங்கே அவர் யோசுவாவிற்கு கட்டளையிட்டபோது, அவர், “திடமனதாயிரு, திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார்” என்றார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை இரண்டு முறை தட்டுகிறார்.—ஆசி.] 139 “நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.” அது என்னவாயிருந்தாலும், அது எவ்வளவு கடினமாயிருந்தாலும் கவலையில்லை. எவ்வளவு பெரிய தடங்கலாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அது மரண இருளின் பள்ளத்தாக்குகளாய் இருந்தாலும், “நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.” 140 ஓ, எப்படியாய் யோசுவா இஸ்ரவேலரை ஒன்று சேர்த்து அழைத்து, “இங்கேயே நின்று தேவனுடைய மகிமையைக் கவனியுங்கள்” என்றான். தேவன் தம்முடைய வார்த்தையோடு இருக்கிறார். தேவன் அந்த வாக்குத்தத்தத்தை செய்தார். தேவன் யோசுவாவினிடத்தில், “உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடமும் உங்களுடையது. நான் அதை உங்களுக்கு கொடுப்பேன்” என்றார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார்.—ஆசி.] ஆமென். 141 அது இரட்சிப்பிற்காக இருந்தால், அது ஒரு தெய்வீக சுகத்திற்காக இருந்தால், அது அதிகமான ஆசீர்வாதத்திற்காகவே, அது எதற்காக இருந்தாலும்…?…அது தேவன் வக்களித்த எந்த காரியத்திற்கானதாய் இருந்தாலும், காலடியை வையுங்கள்! ஆமென். “உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் நான் உங்களுக்கு சுதந்திரமாய் கொடுத்திருக்கிறேன்.” தேவன் அதை வாக்களித்தார். தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளுகிறார். தேவனுடைய வார்த்தை சதாகாலங்களிலும் சத்தியமாய் இருக்கிறது. நான் அதை விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். சகோதரர்களே, இது நாம் காலடிகளை ஏற்படுத்துவதற்கான நேரமாய் இருக்கிறது. நாம் சரியாக இங்கேயே இந்த கூடாரத்திலேயே தரித்திருக்க முடியாது. அக்கினியானது அசைந்து போய் கொண்டிருக்கிறது. நாமும் மகிமையிலிருந்து மகிமைக்கு, வேதாகம அனுபவத்திலிருந்து வேதாகம அனுபவத்திற்கு அசைந்து செல்வோமாக. நம்முடைய இருதயங்களை வெளிப்படுத்தி திறந்து, நம்முடைய கரங்களை தேவனுக்கு உயர்த்துவோமாக. தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள்; வேதத்தில் தரித்திருங்கள். அதை விட்டு வெளியே போகாதீர்கள். அங்கேயே தரித்து இருங்கள். 142 பின் தொடருங்கள்! நாம் தேவனுடைய தீர்க்கதரிசியை உடையவர்களாயிருக்கிறோம்; நாம் தேவனுடைய வார்த்தையை உடையவர்களாயிருக்கிறோம்; நாம் தேவனுடைய தூதர்களை உடையவர்களாயிருக்கிறோம். அந்த நாட்களில் அவர் வழிநடத்தினது போல அவர் இந்த சபையை சரியாக அதேவிதமாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அது முற்றிலும் சரியே. தேவனுடைய வார்த்தை நமக்கு முன்பாக இருக்கிறது; தேவனுடைய தீர்க்கதரிசி பரிசுத்த ஆவியானவராய் இருக்கிறார்; தேவனுடைய தூதன் சபையை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். நாம் அக்கினி ஸ்தம்பத்திற்குள்ளும், தேவனுடைய மகிமைக்குள்ளும் அசைந்து கொண்டு, “கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.” “இப்பொழுது நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்.” வார்த்தையின் மகத்தான வெளிப்பாடு, பரிசுத்த ஆவியானவர் அதை நம்முடைய இருதயங்களுக்குள் இரட்சிப்பின் மரங்களை வெளிக் கொண்டு வந்தும், நீதியாக ஜீவித்துக் கொண்டு, அன்பு, சந்தோஷம், சமாதான, நீடிய பொறுமை, நற்குணம், தயவு, பொறுமையை மூழ்கடித்துக் கொண்டுமிருக்கிறார். நிச்சயமாக செய்கிறார். 143 பிரான்ஹாம் ஜெபக்கூடாரத்திற்கும் அல்லது இன்னொரு கூடாரத்திற்கு மட்டும் அது அப்படியே சம்பவியாது. அது தனிப்பட்ட நபர்களுக்கும் சம்பவிக்கிறது. முழு பிரான்ஹாம் கூடாரமும் ஏகமனதாய் ஒன்று சேருமேயானால், அந்த முழு காரியமும் தேவனுக்கு ஒரு பெரிய தனிப்பட்ட தொகுதியாக அசைந்து கொண்டே செல்லும். ஆனால் பிரான்ஹாம் கூடாரத்தில் ஒருவர் மட்டும் அதைப்போன்று அசைந்து சென்றால், தேவன் அந்த ஒருவரோடே அசைந்து செல்வார். 144 அதைச் செய்வதற்கு ஒரே ஒரு வழி, அதென்னவென்றால், அதனோடு ஒழுங்கு முறையில் ஈடுபட்டு பவனியில் செல்வதேயாகும். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒன்று சேர்ந்து ஒருமுறை தட்டுகிறார்.—ஆசி.] தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். 145 ஏன்? அந்த நபர்கள், “எங்களால் அதைச் செய்ய முடியாது. நாங்கள் ஒரு எழுப்புதலையும் அங்கே வைக்க முடியாது. எல்லாக் காரியமும் எங்களுக்கு எதிராக இருக்கிறது. ஓ, என்னே! அங்கே எமோரியர்களும், ஏத்தியர்களும் மற்றெல்லாரும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் அரணான மதிலுக்குள் இருக்கிறார்கள். நாங்களோ வெட்டுக்கிளிகளைப்போல காணப்படுகிறோம்” என்றார்கள். 146 ஆனால் சிறிய பண்டைய யோசுவா சுமார் நாற்பது வயதுடையவன், தன்னுடைய மார்பிலே அடித்துக் கொண்டான். காலேப் சொல்லிக் கொண்டிருந்தான். காலேப் அங்கே நின்று கொண்டு கூறிக் கொண்டிருந்தான். காலேப், “என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நாம் அதை மிகவும் சுலபமாய் செய்யலாமே!” என்றான். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை இரண்டு முறை தட்டுகிறார்.—ஆசி.] ஓ, சகோதரனே சிறிய, மிகச் சிறிய கொக்கி மூக்கு யூதன் அங்கே நின்று கொண்டு, “நம்மால் மிக சுலபமாக மேற்கொள்ள முடியுமே! நம்மால் முடியும் என்பது மாத்திரமல்ல, ஆனால் மிக சுலபமாக செய்ய முடியுமே!” என்று கூறிக்கொண்டிருந்தான். ஏன்? தேவன் அவ்வண்ணமாய் கூறினார். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை சேர்த்து இருமுறை தட்டுகிறார்.] அது அதைத் தீர்க்கிறது. 147 சகோதரனே, நாம் சுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நாம் அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளலாம். நாம் எழுப்புதலைப் பெற்றுக் கொள்ளலாம். நாம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஏன்? தேவன் அவ்வண்ணமாய் கூறினாரே! நாம் ஒரு உண்மையான பெந்தெகோஸ்தை உடையவர்களாய் இருக்கலாம். நாம் ஒரு உண்மையான எழுப்புதலை உடையவர்களாய் இருக்கலாம். தேவன் அவ்வண்ணமாய் கூறினாரே! தேவன் அவருடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்கிறார். 148 தேவன் அவருடைய வாக்குத்தத்தத்தை அவருடைய ஆசீர்வாதங்களோடு காத்துக் கொள்ளுகிறது போல, தேவன் அவருடைய வாக்குத்தத்தத்தை அவருடைய நியாயத்தீர்ப்போடு காத்துக் கொள்ளுகிறார். நாம் நியாயத்தீர்ப்பை அல்லது ஆசீர்வாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் முன்னோக்கி அல்லது பின்னோக்கி நடக்கத் தான் வேண்டும். நாம் அவரோடு சென்றாகத்தான் வேண்டும் அல்லது தனித்துப் போக வேண்டும். அதனோடு அங்கே ஒருவராலும் போகமுடியாது. அவருடைய வார்த்தையின் மேல் தரித்திருங்கள். 149 மகிமைக்கு சென்றுவிட்ட என்னுடைய மிக நல்ல நண்பனைக் குறித்து என்னால் நினைக்க முடிகின்றது. பால் ரேடார் (Paul Rader) என்ற பெயருடையவர். ஓ, ஆசீர்வதிக்கப்பட்ட வயதான சகோதரன். ஒரு பரிசுத்தமான மனிதன். பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர். ஒரு சமயம், வெளியே தூரத்திலே மேற்கு கரையிலே, அவர் மரிப்பதற்கு சற்று முன்பு அவருடைய சாட்சிதான் உங்களுக்குத் தெரியுமே. அவர் எழுதின அவருடைய நம்பிடுவாய் நம்பிடுவாய் என்ற பாடல், அது என்னை பிரசங்க பீடத்திற்கு அழைத்தது. மகிமையில் இருக்கின்ற பால் (Paul) இந்த பழைய பாடல் ஆயிரமாயிரமானவர்களால், வித்தியாசமான பாஷைகளில் பாடப்படுகின்றதைக் கேட்கின்றாரோ என்று நான் வியக்கிறேன். ஏழ்மையான சிறிய பையனாய் கிழிந்து போன காலணிகளோடும், ஒரு கழுத்துக் கச்சை கூட இல்லாதவனாய், தலை முடியை வெட்டிக்கொள்ள வேண்டிய அவசியமுடையவனாய், அங்கே அவருக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருந்த என்னை தேவன் அந்தப் பாடலை உலகத்தைச் சுற்றிலுமாய் எடுத்துக் கொண்டு போக அனுமதித்தார் என்பதை அவர் எப்படி அறிந்து கொண்டார்? தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். 150 அவர், “கர்த்தராகிய நான் அதை நட்டேன்; யாவரும் அதை என்னுடைய கரத்திலிருந்து பறித்துக் கொள்ளாதபடி, நான் அதற்கு இரவும் பகலும் நீர் பாய்ச்சுவேன்,” என்றார். 151 அது மூழ்கிக் கொண்டிருக்கிறது போன்று காணப்படலாம். ஆனால் அது ஒருபோதும் மூழ்காது. ஓ, அந்த சிறிய பழைய கப்பல் அந்த இரவில், எல்லா நம்பிக்கைகளும் போய்விட்டபோது, அவள் இங்குமங்குமாய் அலைக்கழிக்கப்பட்டு, அங்கே கடைசி மணி நேரமாய் இருந்தது போன்று காணப்பட்டது. ஆனால் சடிதியாக, யாரோ ஒருவர் அப்படியே அமைதியாக தண்ணீரின் மேல் நடந்து கொண்டு வந்தார். அவர் எப்பொழுதுமே அங்கே இருக்கிறார். அவர் ஒருபோதும் தாமதமாவதில்லை. இன்னும் ஒரே மோதல். படகானது மூழ்கிப்போய் இருக்கும். ஆனால் அவர் எப்பொழுதுமே அங்கே இருக்கிறார். நிச்சயமாக. 152 அந்த நாளில் அங்கே பாபிலோனில் எபிரெய பிள்ளைகள் அந்த எரிகின்ற அக்கினி சூளைக்குள்ளாக நடந்து சென்றபோது, முடிவே வந்து விட்டது போன்று காணப்பட்டது. ஆனால் அவர்கள் அதற்குள்ளாக காலடி எடுத்து வைக்கையில், “தேவ புத்திரனுக்கு ஒப்பாயிருந்த ஒருவர்,” அவர்கள் பக்கத்தில் நின்றார். அவர் எப்பொழுதுமே அங்கே இருக்கிறார். அவர் ஒருபோதும் தாமதமாவதில்லை. அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ளுகிறார். “நான் உங்களுடனேகூட இருப்பேன்.” 153 தாவீது, “ஆம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்” என்றான். அவர் எப்பொழுதுமே அங்கே இருக்கிறார். 154 அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்ளுகிறார். அவர் நித்தியமுள்ளவராகவும், சத்தியமானவராயும் இருக்கிறார். அவர் தவறிப்போக முடியாது. அவருடைய வார்த்தை ஒருபோதும் ஒழிந்து போக முடியாது. “வானங்களும், பூமியும் ஒழிந்துபோம், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது.” 155 பால் ஒருசமயம் அவர் ஒரு—ஒரு போராட்டத்தில் இருந்ததாக கூறினார். அவர் வெளியிலே தீவுகளில் இருந்தார், அவருக்கு காய்ச்சல் இருந்தது. அவர் ஏறக்குறைய வைத்தியரிடமிருந்து நூறு மைல் தூரத்தில் இருந்தார். வெளியே சதுப்பு நிலங்களில், சதுப்பு நிலத்தில் வாந்தியோடும் இரத்தம் கலந்த சிறுநீரோடும் கூடிய காய்ச்சல் (Black water fever) அவரை பற்றிக் கொண்டது; அது உடனடியான மரணமாயிருந்தது. அப்போது இருண்டு போயிருந்தது. அவர் தன்னுடைய உண்மையுள்ள மனைவியினிடத்தில், “நீ என் பக்கத்திலேயே இருந்து ஜெபித்துக் கொண்டிரு, தேனே ஜெபி, அறையிலே மிகவும் இருட்டாகிக் கொண்டேயிருக்கிறது. ஆனால்,” என்று கூறி, “நான் தேவனை நம்பிக் கொண்டிருக்கிறேன். என்ன சம்பவிக்கிறது என்று நான் கவலைப்படவில்லை. நான் தேவனை விசுவாசிக்கிறேன். நான் அதனோடு தரித்து இருப்பேன்” என்றார். “நீ இங்கேயே தரித்திருந்து, தேனே ஜெபித்துக் கொண்டிரு” என்றார். அவள் ஜெபித்தாள். அது இன்னும் இருளானது. “அன்பே, அறைக்குள்ளே இருட்டாகிக் கொண்டே போகிறது. ஆனால், ஓ, நானோ சமாதானத்தை உணருகிறேன்” என்றார். 156 கொஞ்ச நேரம் கழித்து அதிக இருட்டாயிற்று. அவர் வெளியே சென்றார். அவர் ஒரு சொப்பனத்திற்குள்ளானார். அவர் சொப்பனங்கண்டு கொண்டிருப்பதாக அவர் நினைத்தார். அவர் ஆரிகானுக்கு (Oregon) திரும்பி வந்து, அங்கிருந்து தான் அவர் வந்தவர், சில மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார். அவருடைய எஜமான், “பால் அங்கே இருக்கிற மலையின் உச்சிக்குப் போய் இத்தனை அங்குல அகலத்தில் இந்த அடி நீளத்தில் எனக்கு ஒரு மரத்தை வெட்டி, அதை கீழே என்னிடத்தில் கொண்டு வா” என்றார். சரி, எஜமானே, “நான் அதைச் செய்வேன்” என்றாராம். 157 அங்கே உயரே சென்று அவருடைய சிறிய மரத்தை வெட்டி சாய்ந்து, கோடாரியை அதில் சிக்க வைத்து, அதைப் பற்றி பிடிக்கும்படி கீழே குனிந்தார். அவரால் அதை தூக்க முடியவில்லை. அவர் அப்படியே…அவர், “நான் என்னுடைய பெலத்தை இழந்து விட்டேன், இதற்கு மேல் என்னால் மேற்கொண்டு போக முடியாது. நான் என்னுடைய பெலத்தை இழந்து விட்டேன். ஏன்?” என்றார். அவர், “இங்கே நான் ஒரு பெரிய மனிதனாக இருக்கிறேன். நான் இருநூறு பவுண்டுகளுக்கும் மேலான எடையுள்ளவனாய் இருக்கிறேன். எனக்கு முதுகில் பெரிய தசை உள்ளது. ஏன்?” என்றார். அவர், “நான் வழக்கமாக என்னுடைய முட்டிகளை ஒன்றொடொன்று இணைத்து, உதைத்து எந்த அளவு மரமாயிருந்தாலும் அதைப் பற்றிக் கொண்டு அதை தூக்குவதற்காக அதற்கு கீழே சங்கிலியை போடுவேன்” என்றார். அவர், “இங்கே, அதாவது நான்…சிறு கிளை. அதைக் காட்டிலும் பெரிதானதல்ல. அதை என்னால் தூக்கக்கூட முடியவில்லையே” என்றார். “என்னுடைய எல்லா பெலனும் போகும் வரைக்கும் நான் போராடி முயற்சித்தேன், ஓ”, என்றார். அவர், “அப்பொழுது ‘என்னால் என்ன செய்ய முடியும்?’ என்று அவர் எண்ணினார்” என்றே கூறினார். மேலும் “நான் கீழே உட்கார்ந்து ஒரு மரத்தின் மேல் சாய்ந்து கொண்டேன்” என்றார். அவர், “ஓ, நான் மிகவும் மோசமாயிருக்கிறேன். அங்கே என் எஜமானனுக்கு இந்த சிறிய மரம் கீழே தேவைப்படுகிறது. நான் அதை கீழே கொண்டு போவதற்கு கூட போதுமான மனிதனாயில்லை” என்றாராம். 158 ஓ, என்ன நம்முடைய எஜமான தேவையாயிருக்கிறதே! கறை, திரையற்ற ஒரு சபையே அவருக்கு தேவையாயுள்ளது. இரத்தத்தால் கழுவப்பட்ட ஒரு கூட்ட ஜனங்கள் அவருக்கு தேவையாயிருக்கிறது. விசுவாசத்தோடு அவருடைய வார்த்தையின் மேல் நின்று, “அது தேவனுடைய நித்தியமான சத்தியமாயிருக்கிறது. அது எனக்காகவே குறித்து காட்டப்பட்டது. நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிற ஒரு ஜனமே அவருக்கு தேவையாயிருக்கிறது. 159 அவர் அங்கே உட்காருகையிலே அவர் ஒரு மரத்தின் மேல் சாய்ந்து, அவர் அழுதுகொண்டிருந்ததாக கூறினார். அவருடைய எஜமான் பேசினதை அவர் கேட்டதாகவும், “பால்” என்றார் என்றும் கூறினார். 160 அவர், “ஆம், எஜமானனே, இதோ நான் இருக்கிறேன். ஆனால் நான் என்னுடைய பெலன் முழுவதையும் இழந்து விட்டேன். என்னால் இனிமேல் மேற்கொண்டு போக முடியாது. நான் உமக்கு கீழ்ப்படிந்து நீர் என்ன செய்ய சொன்னீரோ அதைச் செய்ய முயற்சித்தேன். ஆனால் என்னால் இதை தரையின் மேலிருந்து வெறுமனே தூக்கக்கூட முடியவில்லை” என்றார். அவர், “நான் போராடினேன், நான் முயற்சித்தேன், நான் எல்லாக் காரியங்களையும் செய்து விட்டேன்” என்றார். 161 தேவனுடைய வாக்குத்தத்தங்கள் வெளிப்படுவதைக் காணவும், கறை திரையற்ற சபை உருவாக்கப்படுவதை காண வாஞ்சிக்கிற அநேக நல்ல உண்மையான இருதயமுடைய பிரசங்கிமார்கள் இன்றைக்கு அந்த மனப்பான்மையை உடையவர்களாய் இருக்கமாட்டார்களா என்று நான் வியக்கிறேன். நாம் போராடினோம், முயற்சித்தோம், அலறினோம், சத்தமிட்டோம், நாம் தொண்டை கரகரப்பாகும் வரைக்கும் பிரசங்கித்தோம். நம்முடைய தலையணைகளின் மேல் படுத்து அழுதோம். “ஓ, தேவனே அது ஏன் அப்படி இருக்கிறது? சரியாக நாம் எல்லாவற்றையும் சரிப்படுத்துகின்றபோது, அங்கே பிசாசு உள்ளே வந்து, வெடித்து, கிழித்து அப்படியே நாம் பெற்றிருந்த எல்லாக் காரியங்களையும் கீழே தள்ளி விடுகிறான். நம்முடைய அருமையான ஜனங்களை நாம் காணுபொழுது நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் எப்படி சிதறடிக்கப்பட்டு அந்தவிதமாக போயிருக்க முடியும்?” 162 பின்னர், அவனுடைய எஜமானனின் சத்தத்தை அவர் கேட்டபொழுது, “அது விநோதமாய் கேட்கப்படுகிறதே, என்னுடைய சத்தம் பேசுகிறதை நான் கேட்டதேயில்லையே…அந்த எஜமான் என்னிடத்தில் அவ்வளவு சாந்தமாக பேசுவாரே” என்று அவர் நினைத்ததாக கூறினார். 163 “நான் சுற்றி திரும்பியபோது அது என்னுடைய உண்மையான எஜமானனாய் இருந்தது. அது என்னுடைய எஜமான், என் இரட்சகர்” என்றார். 164 அவர், “பால், நீயே மரணத்திற்கு போராடிக் கொண்டிருக்கிறாய், அது உனக்கு எந்த நன்மையையும் செய்யாது” என்றார். “பால், அங்கே அந்த சிறிய ஓடையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறதை நீ பார்க்கவில்லையா?” என்றார். அதற்கு அவர், “ஆம்” என்றார். 165 அவர், “அந்தப் பொருளை அங்கே அதற்குள் தள்ளிவிடு. அதன் மேல் ஏறிக்கொள். அதன் மேலேயே கீழே கூடாரத்திற்கு ஏறிச்செல். அது கூடாரத்திற்கு போகிறது” என்றார். 166 அவர், “நான் குதித்து எழுந்து, அந்த மரக்கட்டையை உருட்டி தள்ளி, அந்த மரத்துண்டின் மேல் குதித்து விட்டேன். அந்த சிற்றலையின் மேல் அப்படியே என்னுடைய உரத்த குரலில், சத்தமிட்டுக் கொண்டு, ‘நான் அதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்! நான் அதன்மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்! நான் அதன்மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்’ என்ற சத்தமிட்டுக் கொண்டே சென்றேன்” என்றார். 167 அவர் தன் சுய நினைவிற்கு வந்தபோது, அவர் தரையின் மத்தியில் இருந்தார். அவருடைய மனைவி தன்னுடைய உரத்த குரலில் அலறினாள். அவர் வெளியே தரையின் மத்தியில் இருந்து, “நான் அதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேனே! நான் சவாரி செய்து கொண்டிருக்கிறேனே! நான் சவாரி செய்து கொண்டிருக்கிறேனே!” என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். 168 சகோதரேன், சகோதரியே! சோதனைகள் கடினமாயிருக்கிறது என்பதை நான் அறிவேன். எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. நான் பிரசங்கித்தேன். எனக்கு செய்யத் தெரிந்த எல்லாக் காரியங்களையும் நான் செய்து விட்டேன். இதற்கு மேல் என்னால் செய்ய முடியாது என்று நான் காண்கிற ஒரு நிலைக்கு நான் போய்விட்டேன். நான் முழு காரியத்தையும் கர்த்தராகிய இயேசுவின் மடியின் மேல் அப்படியே வைத்துவிட்டு, நான் அதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன். “கர்த்தராகிய நான் அதை நாட்டியிருக்கிறேன், யாரும் அதை என்னுடைய கரத்திலிருந்து பிடுங்கிக் கொள்ளாதபடிக்கு நான் அதற்கு இரவும், பகலும் நீர் பாய்ச்சுகிறேன்” என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் நான் சவாரி செய்து கொண்டிருக்கிறேன். தேவனுடைய சபை என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கும். 169 தேவனுடைய வார்த்தை உறுதியாக சரியாக என்றென்றைக்குமாய் நிற்கும். இராஜ்யங்கள் வந்தாலும் அல்லது அணுகுண்டு விழுந்தாலும் அல்லது அமெரிக்கா பின்வாங்கிப் போனாலும், என்ன சம்பவித்தாலும் பொருட்படுத்த வேண்டாம். இது அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. அவர் அதை காத்துக் கொள்கிறார். நான் அதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேன். என் முழு இருதயத்தோடும் நான் அதை விசுவாசிக்கிறேன். நாம் ஜெபம் செய்வோமாக. 170 ஆசீர்வதிக்கப்பட்ட இயேசுவே, ஓ, என்ன ஒரு சவாரி! சந்தோஷத்தின் சிற்றலைகளின் கீழாக, அல்லேலூயா ஓட்டத்தினூடாக, ஓ, அப்படியே அதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறேனே! நீரே வாக்களித்தீர். உம்முடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் உண்மையாயிருக்கின்றன. அவைகள் உண்மையானவைகள் என்று அவைகள் ஒவ்வொன்றும் சாட்சி பகருகின்றன என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். காலங்களினூடாக ஆசீர்வதிக்கப்பட்ட பழைய வேதாகமம் எங்களுக்கு வெளிப்படுத்துகிறதை நாங்கள் கண்டிருக்கிறோம். இப்பொழுது மகத்தான வேளையானது, நள்ளிரவு வேளையானது நெருங்கி கொண்டு இருக்கிறது. 171 கர்த்தாவே, மகத்தான, சுவிசேஷத்தின் பரிசுத்த ஊழியர்கள் தேசத்தினூடாக சென்று, பிரசங்கித்துக் கொண்டும், அழுது கொண்டும், ஆற்றுத் தண்ணீரை குடித்துக் கொண்டும், துன்பப்படுத்தப்பட்டு, இங்குமங்குமாய் ஓடி, பட்டணங்களுக்கு வெளியே ஓடி, அடைக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, பரிகாசம் பண்ணப்பட்டு, சிரிக்கப்பட்டு, பட்டினியாய் கிடந்தார்கள். 172 ஆனால் சபையானது தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது, ஏனென்றால், “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்று உம்முடைய வார்த்தை கூறியுள்ளது. இன்றைக்கு நாங்கள் அதன்மேல், அந்தக் கல்லின்மேல் தேவனுடைய நித்தியமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறோம். அந்த அசையாத கல்லின்மேல் தான் இன்றைக்கு சபையானது நிற்கிறது. நாத்திகர், பொதுவுடைமைக் கொள்கை, இந்த பூமியின் மூலப்பொருட்கள் எழும்பியிருக்கின்றன. ஆனால் அவளோ அந்த அசையாத கல்லின் மேல் கட்டப்பட்டிருக்கிறாள். 173 பிசாசு குற்றம் கண்டுபிடிப்பவர்களை உள்ளே அனுப்பி இருக்கிறான். அது பரிகாசம் பண்ணப்படுகிறது. அது துன்பப்படுத்தப்படுகிறது. அது இந்த உலகத்தின் எல்லாக் காரியங்களாலும் அழைக்கப்படுகிறது. ஓ, எல்லாக் காரியங்களிலும் நாங்கள் இங்குமங்குமாய் தள்ளப்படுகிறோம், சோதிக்கப்படுகிறோம், பரீட்சிக்கப்படுகிறோம். ஆனால், ஓ, தேவனே பண்டைய யோசுவாவும், காலேபும் போன்று நாங்கள் நித்தியமான தேவனுடைய வார்த்தையின் மேல் நின்று கொண்டிருக்கிறோம் என்று இன்னமும் நாங்கள் கூறுகிறோம். அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்ளுகிறார். அவர் அதைச் செய்வதாக அவர் கூறியுள்ளார். நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். 174 இந்தக் காலையில் இங்கே இருக்கின்ற ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், இப்பொழுது அதைப் பற்றின ஒரு நெருக்கமான காட்சியை, அதாவது இப்பொழுது நாங்கள் இதன் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது அறிந்து கொள்ளுவார்களாக. என்றோ ஒருநாள் பரிசுத்தவான்கள் முகாமிட்டிருக்கின்ற பூமியின் விஸ்தாரத்தில், அங்கே அந்த முகாமில் நாங்கள் இருப்போம். தேவனும் அவருடைய பிள்ளைகளும் என்றென்றைக்குமாய் களிகூர்ந்து கொண்டிருப்பார்கள். இதை அளியும் கர்த்தாவே. 175 நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டு, நம்முடைய கண்கள் மூடப்பட்டிருக்க, இந்த கூடாரத்தில் இந்த காலையில் நாம் இருக்கும்போது, கிறிஸ்துவின் நாமத்தில், “சகோதரன் பிரான்ஹாம், இந்த நாளன்று, இப்பொழுதே, இந்த சபையில், நான் இப்பொழுது என் கரங்களை கிறிஸ்துவுக்கு உயர்த்தி, இந்த நாள் முதற்கொண்டு, கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின் மேல் சவாரி செய்வேன். நான் அங்கே நின்று கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டு ஒருபோதும் என்னுடைய சொந்த இரட்சிப்பின் மதிப்பிற்கு முயற்சிக்கும் காரியங்களை செய்ய முயற்சிக்க மாட்டேன். நான் வெறுமனே கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்வேன். அவர் அந்த ஆழமான தெய்வீக அன்பையும், எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தையும் என்னுடைய இருதயத்தில் அவர் போடட்டும். பரிசுத்த ஆவியை எனக்குக் கொடுக்கும்படியாக, நான் அதற்காக காத்திருப்பேன்…ஒரு சமயம் நான் எழும்பி, என்னால் போய் அதைச் செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை என்பதை நான் கண்டறிந்தேன் என்று கூற யாருக்காவது தைரியம் இருக்குமா” என்று நான் வியக்கிறேன். நிச்சயமாக நீங்கள் ஒருபோதும் செய்ய மாட்டீர்கள். ஆனால் அவர் அதைச் செய்யும் வரைக்கும், நீங்கள் மட்டும் அங்கேயே அமைதலாய் போதுமான நேரத்திற்கு காத்திருக்கக் கூடுமானால், அப்பொழுது அது அங்கே தங்கியிருக்கும், பின்னர் அது நங்கூரமிடப்பட்டிருக்கிறது. 176 ஆனால் நீங்கள் அதைச் செய்ய முயற்சித்தால், நீங்கள் தவறிப் போக போகிறீர்கள். நீங்கள் தவறத்தான் வேண்டும். அந்த காரணத்தினால்தான் உங்களுடைய மேடும் பள்ளமுமானதும், உள்ளும் புறமுமானதும் உங்களுக்கு இருக்கிறது. எல்லாக் காரியங்களையும் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்ய முயற்சிப்பதே அதற்கு காரணமாயிருக்கிறது. நீங்கள், “ஓ, நான் இப்பொழுது சரியாய் இருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்கிறீர்கள். அதுவல்ல அது. அதுவல்ல—அதுவே அல்ல அது. இல்லை. அது உள்ளே வருகிற பரிசுத்த ஆவியாயிருக்கிறது. அவர் அந்த இடத்தை எடுத்துக் கொள்ளுகிறார். அவர் அந்த எல்லா கசப்பின் பழைய வேர்களையும், பழைய கோபத்தையும், எரிச்சலையும், பொறாமையையும், உலகத்தையும், அதன் காரியங்களின் மேலுள்ள அன்பையும் அவர் எடுத்துப் போடுகிறார். அதையெல்லாம் உனக்குள்ளிருந்து எடுத்துப் போடுகிறார். அப்பொழுது நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாய் இருக்கிறீர்கள். 177 நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி “கிறிஸ்துவே, இந்த காலையில் என்னை அந்தவிதமான கிறிஸ்தவனாக்கும்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அம்மாளே, தேவனே உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. “இந்த காலையில் என்னை அந்த விதமான ஒரு கிறிஸ்தவனாக ஆக்கும். நான் இயேசுவைப் போலிருக்க விரும்புகிறேன். கசப்பின் எல்லா வேர்களும் என்னுடைய இருதயத்திலிருந்து எடுத்துப்போடப்பட நான் விரும்புகிறேன்.” 178 இப்பொழுது, உங்களில் பலர் உங்களுடைய கரத்தை உயர்த்தியிருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, நீங்கள் விரும்பினால் உங்களுடைய முழு இருதயத்தோடும், இப்பொழுது வெறும் யூகமல்ல, ஆனால் உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிற தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து அந்த பழைய கசப்பின் தன்மையை உங்களிடத்திலிருந்து எடுத்துப் போடுவார் என்று விசுவாசியுங்கள். நீங்கள் என்னவாய் இருக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறீர்களோ, அதை உங்களுக்கு செய்யும்படி, நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அங்கேயே அவர் அதைச் செய்வார்…அவர் அதைச் செய்யும்படி நீங்கள் அனுமதிப்பீர்களேயானால், அந்த அறுவை சிகிச்சையை உங்களுடைய மருத்துவமனையில் அவரே செய்வார். யாவும் கைகூடிடும், நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவாய்… 179 அப்படியே தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருங்கள். கர்த்தாவே…பிள்ளையை நினைவுகூறும், அது உம்முடைய ஆத்துமா, ஒருவேளை நீங்கள் இன்னொரு ஆராதனையில் இல்லாமலே இருக்கலாம். இது ஒருக்கால் கடைசி ஒன்றாய் இருக்கலாம். இப்பொழுதே தேவன் அதை செய்யட்டும். 180 “சகோதரன் பிரான்ஹாம், நான் பீடத்தண்டைக்கு வரவேண்டுமா?” என்று கூறுகிறீர்களா, நீங்கள் நிச்சயமாகவே வருவதற்கு விரும்பினால், நீங்கள் வர விரும்பவில்லையென்றால், நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். 181 நீங்கள் வெறுமனே அதை விசுவாசியுங்கள். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்”, அதுதான் அது. 182 நீங்கள் பீடத்தண்டை வந்து ஜெபிக்க வேண்டுமென்று விரும்பினால், அது திறந்திருக்கிறது. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருக்க விரும்பினால், ஜெபியுங்கள். அது உங்களுடைய ஆத்துமாவாய் இருக்கிறது. அதனுடைய ஒன்றாய் நீங்கள் இருக்கிறீர்கள். 183 சகோதரனே காலம் சமீபமாயிருக்கிறது. சபையானது இப்பொழுது ஒழுங்காக்கப்பட்டிருக்கிறது. பழைய ஓடையோ சேறாக இருக்கிறது. அந்த முழு இடமுமே சேறாகிவிடும் அளவிற்கு பழைய ஈய ஆழமான குண்டுகளை எறிந்து இருக்கிறோம். நாங்கள் வலைவீசி மீன் பிடித்தோம். சேற்றில் அதிகமாக பன்றிகள் இருக்கின்றன. அது சேறாக இருக்கிறது. 184 நான், ஒரு ஊழியக்காரன் என்ற முறையில் நான் இதை சற்று உணருகிறேன். அதாவது தேவன் அதைச் செய்யப் போகிறாரென்றால், அதைச் செய்வதற்கு தேவன் தேவையாயிருக்கிறார். என்னால் முடியாது. எனவே அது உங்களைப் பொறுத்ததாய் இருக்கிறது. அங்கே வார்த்தை இருக்கிறது. அங்கே சத்தியம் இருக்கிறது. அது நேராக இங்கே உங்களுக்கு முன்பாக வெளிப்படுகின்றதை நீங்கள் காண்கிறீர்கள். முடிவு சமீபமாயிருக்கிறது. இயேசுவானவர் எந்த நேரத்திலும் வரலாம். இன்று இரவு சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் ஐக்கிய நாடுகளும் கூட அங்கே ஒருக்கால் இல்லாமல் போகலாம். அவர்களால் ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் அணுகுண்டுகளை அனுப்பமுடியும். இப்பொழுதிலிருந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் ஜீவிக்கின்ற சிருஷ்டி கூட பூமியின் மேல் இராமல் போகலாம். நீங்கள் விரும்பினால்…இப்பொழுது அதை…உங்களைப் பொறுத்தது. நாம் ஜெபிக்கையிலே அதைக் குறித்து இப்பொழுது சிந்தியுங்கள். 185 ஆசீர்வதிக்கப்பட்ட பரலோகப் பிதாவே, இந்த வார்த்தையை முடிக்கையிலே, நான் பக்கங்களை பின்னாக திருப்புகையில், இப்பொழுது செய்தியானது முத்திரிக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வருகையோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலையில் இக்கட்டிடத்தில் இருக்கும் அனேகர், தங்களுடைய கரங்களை உயர்த்தி, அதன் மூலமாக “நான் ஒரு கிறிஸ்தவனாக ஆக விரும்புகிறேன். நான் ஒரு உண்மையான, உண்மையாகவே மறுபடியும் பிறந்த தேவனுடைய ஊழியக்காரனாக இருக்க விரும்புகிறேன்” என்றனர். 186 கர்த்தாவே, ஒருக்கால் அநேக வருஷங்களாக நீர் அவர்களுடைய இருதயங்களோடு இடைப்பட்டிருக்கலாம். நீர்—நீரே அதை அவர்களுக்கு கூறியிருக்கிறீர். உம்முடைய கிருபை இன்னும் அவர்களண்டை நீட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் முற்றிலுமாய் இன்னமும் போய்விடப்படவில்லை. சிலர் ஒரு இடத்திற்குப் போய்விட்டனர். இதற்கு மேல் அவர்களுக்கு வாஞ்சையில்லை. ஒரு வருடத்திற்கு முன்னர், அவர்கள் வழக்கமாக தங்களுடைய கரங்களை உயர்த்தி, “நல்லது, நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறேன்” என்றார்கள். இப்பொழுதோ அது அதிக தூரம் போய்விட்டது; அதைக் குறித்து இப்பொழுது அவர்கள் அதை உணருவதேயில்லை. 187 எல்லாம் ஏறக்குறைய முடிந்தாயிற்றே! அது தேசத்தின் பொதுவான ஓட்டம் போன்றிருக்கிறது. அவர்கள் தேசத்தை கடக்கையில் மகத்தான சுவிசேஷகர்கள் பேசுவதை கேட்பது போன்றிருக்கிறது. அவர்கள் முன்னணி வேவுப்படைஞர்களை வெளியே அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாக் காரியங்களையும் செய்திருக்கிறார்கள். அவர்கள் குழுக்களை ஸ்தாபித்திருக்கிறார்கள். தங்கள் கரங்களை உயர்த்த குழுக்களை விரும்புகிறவர்களுடைய வீடுகளை அவர்கள் பார்வையிடுகிறார்கள். அங்கே ஆயிரமாயிரமானவர்கள் துவக்கினதில் இரண்டு அல்லது மூன்று பேர்கள் தான் பற்றிக் கொண்டிருப்பார்கள். நல்லது, கர்த்தாவே, அது முடிந்து விட்டது. அது முடிந்து விட்டது, தேவனே, நாங்களெல்லாருமே போய்விட்டோம். 188 ஓ, பிதாவே, “கிறிஸ்துவண்டை வந்த எல்லாரையும் நீர் காத்துக் கொள்வீர்” என்று நீர் கூறினீர் என்பதை நான் அறிவேன். நான் என் முழு இருதயத்தோடு அதை விசுவாசிக்கிறேன். இருதயங்களையும், சிந்தைகளையும் உம் மேலே வைத்துள்ளவர்களை நீர் காத்துக் கொள்வீர் என்று கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். சபைக்காகவும் அந்த சபையிலிருக்கிற, ஜீவிக்கிற தேவனுடைய பரிசுத்தவான்களுக்காகவும், இந்த மகத்தான ஆவிக்குரிய சரீரத்திற்காகவும் கர்த்தாவே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 189 ஆனால், ஓ, தேவனே, அதற்கு புறம்பாக இருக்கிறவர்களுக்காகவும், சுவற்றின்மேல் உள்ள கையெழுத்தை அவர்கள் காண்கிறார்கள் என்பதை அறிவதாலும், சம்பவித்துக் கொண்டிருக்கிற மகத்தான காரியங்களையும், அடையாள கம்பங்களை காண்கிறதினாலும், என்னுடைய இருதயம் எப்படியாய் நடுங்குகிறது. அமெரிக்கா இன்னமும் பழைய அசுத்தமான கேலிகளாலும், தொலைக்காட்சி, வானொலியில் வரும் தணிக்கை செய்யப்படாத நிகழ்ச்சிகளினாலும், காதல் கதையினாலும், பரியாசக்காரர்களாலும், சிரிப்பவர்களாலும், பெருவாரியான நேர கேளிக்கைகளாலும், ஹாலிவுட் சுசேஷங்களாலும் நிறைந்திருக்கிறது. 190 ஓ, தேவனே அது—அது உண்மையாகவே நள்ளிரவு நேர துவக்கமாயிருக்கிறது. அவள் போக ஆயத்தமாயிருக்கிறாள். கர்த்தாவே நான் என்ன செய்ய முடியும்? நான் கவலைப்பட்டேன்; நான் அழுதேன்; நான் கெஞ்சினேன்; நான்—நான்…இப்பொழுது கர்த்தாவே அது உம்மேல் தான் இருக்கிறது. நான்—நான்…என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அவ்வளவுதான். நான் அதை பிரசங்கித்திருக்கிறேன். கர்த்தாவே, நான் சரியாக அப்படியே வார்த்தையின் மேல் நிற்பேன். நான் இப்பொழுது நேராக முகாமுக்குள்ளாக சவாரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நேரமோ நீண்டதாக இருக்காது. 191 இப்பொழுது தேவனே, இன்றைக்கு உத்தமமான இருதயத்தை உடையவர்களுக்கு தேவனே, அவர்களுக்கு இப்பொழுது ஏதாவது காரியத்தைச் செய்யும், இந்த நாள் முதற்கொண்டு அவர்கள் உம்முடைய பிள்ளைகளாய் இருப்பார்களாக. 192 கர்த்தாவே, எங்கள் மத்தியில் இருக்கிற வியாதியஸ்தரை சுகப்படுத்தும், கர்த்தாவே, அவர்களை சொஸ்தமாக்கும். அந்த குளிர்ந்துபோன பின்வாங்கிப்போனவர்களை திரும்பக் கொண்டு வாரும். அவர்கள் துரோகம் செய்கின்ற ஸ்தலத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறதை…அவர்கள் அறியும்படியாய் செய்யும். சீக்கிரத்தில் அவர்கள் போய் விடுவார்கள். அப்பொழுது அது மிகவும் காலங்கடந்ததாகிவிடும். உம்முடைய ஆவி மகத்தானதாக எங்களோடு இடைபடும்படி இப்பொழுதே அருள் செய்யும். கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 193 வாலிபமான ஜனங்களுக்கு நான் இதை கூறுவேன். என்னால் முடிந்தால்…இந்தக் காலையில் நேற்றைய தினம் பிறந்த நாளுக்குப் பின்னர், இந்த ஜீவியத்தில் நாற்பத்தியெட்டு வருடங்களில். அதில் இருபதிற்கும், அதிகமான வருடங்கள், சுமார் இருபத்தி நான்கு வருடங்களை நான் கர்த்தராகிய இயேசுவுக்காக செலவழித்திருக்கிறேன். சுமார் இருபத்தி மூன்று வயதுள்ள ஒரு பையனாக நான்—நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்க துவங்கினேன். 194 எனக்கு எந்த வருத்தங்களாவது இருக்குமாயின், எந்த வருத்தமாவது; என்னால் இந்தக் காலையில் நான் ஒரு பொத்தானைத் தொட்டு, நம்பமுடியாத வயதான சுமார் பதினாறு அல்லது பதினேழு வயதிற்கு திரும்பிப் போனால் நான் ஒரே ஒரு காரியத்தைத்தான் செய்ய விரும்புவேன். அதாவது கிறிஸ்துவுக்கு சேவை செய்வதே, அதனுடைய அர்த்தமே அதுதான். அதாவது கிறிஸ்துவுக்கு சேவை செய்வதேயாகும். என்னுடைய இருதயத்தை அறிந்த தேவன் அது உண்மை என்று அறிவார். கிறிஸ்துவுக்கு மட்டும் சேவை செய்தல். 195 என் இருதயத்திலுள்ள கிறிஸ்துவின் ஆசீர்வதிக்கப்பட்ட நங்கூரத்தோடு எப்பொழுதுமே ஒப்பிடப்பட்ட எந்தக் காரியத்தையும் நான் ஒருபோதும் கண்டதில்லை அல்லது எந்தக் காரியத்தையும் நினைத்ததுமில்லை. நான் ஒன்றையும் அறியேன். நான் சமுத்திரங்களில் யாத்திரை செய்திருக்கிறேன். ஆகாய வெளிகளினூடாக நான் பறந்திருக்கிறேன். இந்த உலகத்தில் இருக்கிற எல்லாக் காட்சிகளையும் நான் கண்டிருக்கிறேன். நான் உலகத்தின் ஏழு அதிசயங்களையும் கண்டிருக்கிறேன். சொல்லப்போனால் நான் உலகத்தின் ஏழு முதன்மையான காட்சிகளையும் கண்டிருக்கிறேன். உலகத்தின் எல்லா மலைப்பக்கங்களையும் மிக அருகிலிருந்து நான் கண்டிருக்கிறேன். நான்…நான் ஒரு வேட்டைக்காரன்; எல்லாவிதமான தேசங்களிலும் நான் வேட்டையாடி இருக்கிறேன். நான் எல்லாக் காரியங்களையும் செய்திருக்கிறேன்; மீன் பிடித்திருக்கிறேன். நான் குதிரைகள் மீது சவாரி செய்திருக்கிறேன். நான் கால்நடைப் பண்ணைகளை கண்காணித்து இருக்கிறேன். எனக்கு செய்யத் தெரிந்த எல்லாக் காரியங்களையும் நான் செய்திருக்கிறேன். நான் இதைக் கூறுவேன். அதாவது அங்கே இருக்கின்ற எல்லாக் காரியங்களையும் ஒன்றாக கூட்டித்திரட்டி வைத்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பின் ஒரு சிறு துளியையும் உண்டாக்க முடியாது. 196 என்னால் என்ன செய்ய முடியும்? என்ன கூடும்…ஓ, ஆம், இங்கே இந்த சிறுபிள்ளைகள் இருக்கின்றார்கள். என்னுடைய தலைமுடியை மழமழப்பாக்குவார்கள். வாகனத்தின் முன்னாக காற்றை தடுக்க உபயோகிக்கும் கண்ணாடியின் பின்னே என்னோடு தேதி குறிப்பிட்டு வந்திருக்கின்றார்கள். நான் நினைத்தேன்,…ஆனால் அது சரியாய், சரியாய் திருப்திபடுத்தவில்லை. எல்லா நேரத்திலும் அங்கே ஏதோ காரியத்தில் நீ குறைவுள்ளவனாய் இருந்து கொண்டிருக்கிறாய். 197 அழகான பழுப்பு நிறமுள்ள கண்களையுடைய பெண்ணை நான் கண்டிருக்கிறேன். அது…வாலிப ஜனங்களாயிருக்கையில் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். அது சரியாய் இருந்தது என்று நான் நினைத்தேன். “எனக்கு மட்டும் இந்த வாலிப பெண்ணோடு ஒரு தேதி மட்டும் கிடைத்தால் அது சரியாய் இருக்கும்…அது—அது என்னுடைய எல்லா ஏக்கத்தையும் சரியாய் வெற்றியுறச் செய்யும். அது அதை சரியாய் தீர்த்துவிடும்”. நான் அவளோடு ஒரு நாளைக் குறித்து, அவளோடு வெளியே பதினைந்து நிமிடங்கள் இருந்து, வேறு யாருக்காவது தேடிக்கொண்டிருப்பேன். அது என்னை சரியாய் திருப்திப்படுத்தவில்லை. ஓ, ஒன்றுமேயில்லை. 198 ஆனால், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வேளை! அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! ஒரு கூட்டத்தின் பின்னால் கீழேயுள்ள ஒரு சிறிய பழைய நிலக்கரி கொட்டகையில் ஒரு பழைய புல்கோணியின் மேல் முழங்காற்படியிட்டு, “கர்த்தராகிய இயேசுவே, எனக்காக நீர் ஏதாவது காரியத்தைச் செய்ய முடியுமா?” என்றேன். அதாவது எல்லா புத்திக்கும் மேலான ஒரு சமாதானம். இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பாக, அப்பொழுது இங்கே இந்த என்னுடைய இருதயத்திற்குள் நங்கூரமிட்டது. முழு உலகத்திலிருக்கிற அனைத்துமே அதன் மதிப்பாயிருக்கிறது. அதனோடு ஒப்பிட்டுப் பார்க்க நான் ஒருபோதும் ஒன்றையும் கண்டதில்லை. அநேக அபாயங்கள், தொல்லைகள், கண்ணிகளின் மூலமாக, நான் ஏற்கனவே வந்திருக்கிறேன்; இதுவரை என்னை பத்திரமாக கொண்டு வந்தது கிருபைதான், என்னைத் தொடர்ந்து கொண்டு போகக்கூடியதும் கிருபைதான். 199 வியாதி மற்றும் விபத்தின் நேரங்களில் நான் அவரை நம்பியிருந்தேன். ஆகாய விமானங்கள் புயலில் பின்னிக்கொண்டு சென்றபோது, நான் அவர் மேல் நம்பிக்கையாயிருந்திருக்கிறேன். உங்களுக்கு அது என்ன என்று தெரியாது. நான், “கர்த்தராகிய இயேசுவே என்னோடு நீர் முடித்துக் கொண்டீரோ? இல்லையென்றால் இந்த ஆகாய விமானத்தை சரிப்படுத்தும்” என்றேன். அது சரியான நிலையில் நல்ல விதமாகவே அது செல்வதை கண்டிருக்கிறேன். 200 இந்த தேசத்திலுள்ள மிக நேரத்தியான வைத்தியர்கள் இருக்கின்ற தனி மருத்துவமனையில் நான் நின்றிருக்கிறேன்…அவர்கள் என்னை நோக்கிப்பார்த்து, “இன்னும் ஒரு சில நிமிடங்கள் தான் ஜீவிக்கப் போகிறான். அவர் போய்க்கொண்டிருக்கிறான்” என்பார்கள். அப்பொழுது எனக்காக கொண்டு வரக்கூடிய மேலான வைத்தியர்கள் இருந்தனர். 201 நான், “கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னோடு துணையாக இருக்கிறீரா?” என்றேன். சடுதியாக நான் திரும்ப என்னுடைய சாதாரண நிலைமைக்கு வந்துவிட்டேன். நிச்சயமாக. 202 ஓ, ஆச்சரியமான கிருபை, எவ்வளவு இனிமையாய் அது தொனிக்கிறதே! அது என்ன என்று விளக்கும்படியாக எனக்கு நாவுகள் இருக்க நான் எப்படியாய் வாஞ்சிக்கிறேன். மானிட சிந்தைக்கு அது மிகவும் மகத்தானதாய் இருக்கிறது. என்னுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள். நண்பனே, நீ ஒரு பதிலியை எடுத்துக் கொள்ளாதே. ஒரு பதிலியை எடுத்துக் கொள்ளாதே, வெறுமனே போய், “இப்பொழுது நான் இதைச் செய்தேன். என்ன என்று நான்—நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் ஒரு அருமையான நல்ல நபர்,” என்று சொல்லாதே. அதன் மேல் நம்பிக்கையாயிராதே. அதைச் செய்யாதே. ஏதோ காரியம் சரியாய் உங்களை தொடும்மட்டும், எல்லாப் பாவங்களையும் தூர எடுத்துப்போடும்மட்டும் அங்கேயே முத்தமிட்டு எரிக்கும் வரைக்குமாய் அங்கேயே சரியாக தரித்திரு. சோதனைகள் வரும்போது, நான் அதை செய்யப் போகிறேனோ என்று நீ ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏதோ காரியம் அதைச் சரியாக அங்கே தாங்கிக் கொள்கிறது. 203 இப்பொழுது ஒரு நடுத்தர வயதுள்ள மனிதனாய், நான் கீழே இறங்கி வந்து இதை சிந்திக்க வேண்டியவனாய் இருக்கிறேன். அதாவது இந்நாட்கள் ஒன்றில் நான் போயாக வேண்டும். இயேசுவானவர் வர தாமதிக்குமேயானால், நான் போயாக வேண்டும். நான் பாதையின் முடிவிற்கு வரும்பொழுது அது என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது, என்னுடைய பிரசங்கத்தின் மேல் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இல்லை ஐயா, இல்லை, நான் செய்திருக்கின்ற காரியங்களின் மேல் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஓ, தேவனே, இல்லை, ஓ, அது என்னிடத்திலிருந்து தூரமாய் இருப்பதாக. நான் ஒரு பிரசங்கியாக இருந்தது முதற்கொண்டு நான் காரியங்களை செய்திருக்கிறேன். அசட்டை செய்து, இதை அதை செய்திருக்கிறேன். எதின்மேலும் நான் நம்பிக்கையாயிருக்க விரும்பவில்லை. இல்லை ஐயா, “கர்த்தாவே, பத்து இலட்சத்திற்கு மேலான ஆத்துமாக்களை உமக்கு ஆதாயப்படுத்தியிருக்கிறேன்” என்று நான் கூற விரும்பவில்லை. அது அதனோடு ஏதும் செய்வதற்கில்லை; ஒரு காரியமும் இல்லை. நான் நம்பிக்கொண்டிருக்கிற ஒரே ஒரு காரியம் அவருடைய கிருபை, அவருடைய வாக்குத்தத்தம், அவருடைய வார்த்தையே, 204 கர்த்தாவே, நீர் கூறியிருக்கிறீர்…நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்பிற்கு பயப்படேன், நீர், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்றீர். நான் அந்த தலையணையை அழுத்திக் கொண்டிருக்கும்பொழுது, அந்த குளிர்ந்த மரண வேர்வை என்னுடைய புருவத்திலிருந்து வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. அங்கே அவர் இருப்பார். நான் இங்கே நின்று கொண்டு இருப்பது போன்று அவ்வளவு நிச்சயமாய் அவர் அங்கே இருப்பார். 205 என்னுடைய கடைசி பிரசங்கத்தை நான் பிரசங்கித்து, வேதாகமத்தை மூடி, கடைசி முறையாக வெளியே நடந்து, வேலையானது முடிவுறுகிறபோதோ அவர் அங்கே இருப்பார். ஆம் ஐயா, அவர் வருகிறார் என்று நான் உறுதியாய் விசுவாசிக்கிறது போல அவர் திரும்பி வரும்பொழுது நானும் கூட அங்கிருப்பேன். ஆம் ஐயா. எனக்குத் தகுதி இருக்கிறது என்ற காரனத்தினால் அல்ல. அவர் எனக்காக வைத்திருக்கிற காரணத்தினாலே அவருடைய நித்தியமான வார்த்தையின் அடிப்படையின் மேல் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். அதன் மூலமாக ஏதோ காரியம் சம்பவித்துக் கொண்டிருந்தது என்பதை நான் அறிவேன். ஏதோ காரியம் சம்பவித்தது. என்னால் எவ்வளவு சத்தமிட முடியும் என்பதல்ல, எவ்வளவு நன்றாய் என்னால் சொல்ல முடியும் என்பதல்ல. உலகத்திலேயே நான் மகத்தான பிரசங்கியாராய் இருந்திருந்தாலும், நான் மரித்தோரை உயிரோடு எழுப்பி இருந்திருந்தாலும், என்னவாயிருந்தாலும், அதனோடு அதற்கு ஏதும் சம்மந்தமில்லை. அதற்கு காரணம் ஏதோ காரியம் சம்பவித்தது. இங்கே உள்ளே ஏதோ காரியம் நடந்திருக்கிறது. அது எல்லா பழைய பொறாமையையும், கசப்பையும், பொல்லாத மற்றும் எல்லாக் காரியங்களையும் என்னுடைய இருதயத்திலிருந்து எடுத்துப் போட்டது. இப்பொழுது நான் அவரை இரவு பகலாக நேசிக்கிறேன். ஏதோ காரியம் சம்பவித்தது. என்றோ ஒருநாள் நான் அவரைக் காண விரும்புகிறேன், உங்களையும் கூட நான் காண வாஞ்சிக்கிறேன். 206 இப்பொழுது தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் சிறிய சபையே, இந்த நாளில் தவறிப் போகாதே. நீ தவறிப் போவாயானால் சீக்கிரமாய் மனந்திரும்பு. உடனே திரும்ப குதி. புரிகின்றதா? நீங்கள் உங்களுடைய கால் விரல்களை தரையில் உதைப்பீர்களேயானால் விழுந்து போகிறதில்லை. நீங்கள் விழுந்தால், எழுந்திருங்கள். என்னே! எழுந்திருங்கள். நிச்சயமாக. 207 நீங்கள் ஒரு தவறைச் செய்திருந்தால், இப்பொழுது வந்து கொண்டிருக்கின்ற இந்த எழுப்புதலிலே…நீங்கள் திரும்பவும் உறைந்துபோய், கவலையற்றவர்களாய் இருக்கிறீர்கள். எழும்புங்கள், உங்கள் வேதாகமத்திற்கு திரும்புங்கள். எங்கேயாவது ஆப்பிள் தோப்பிலே நடந்து செல்லுங்கள். சிக்கிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள, “தேவனே இப்பொழுது இதோ நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன். இந்தக் காரியத்திற்காக நான் வருந்துகிறேன்” என்று கூறுங்கள். 208 அதற்கு நீங்கள் ஒரு சவுக்கடியை வாங்கப் போகிறீர்கள். அதை அப்படியே நினைவில் வையுங்கள். ஆம், நிச்சயமாக, நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுப்பீர்கள். ஆம், ஐயா ஆனால் என்ன செய்தாலும், உங்களுடைய சவுக்கடியை இங்கேயே பெற்றுக் கொள்ளுங்கள். உடனே எழும்பி, சரிப்படுத்திக் கொண்டு, “பிதாவே, இதோ நான் இருக்கிறேன். நீர் பொருத்தமாய் காண்கிறபடியே எனக்கு சவுக்கடி தண்டனை அளியும். கர்த்தாவே இங்கேயே நான் இருக்கிறேன்” என்று கூறுங்கள். அது சரி. பின்னர் சரியாக திரும்பி, உங்கள் இருதயத்தில் ஒரு “அல்லேலூயா” வோடு நடந்து செல்லுங்கள். தேவன் அந்த சவுக்கடியை உன்மேல் விழும்படி அனுமதிக்கிறார், “ஆம், கர்த்தாவே, அதின் ஒவ்வொரு துணிக்கைக்கும் நான் தகுதியானவன்” என்று கூறுங்கள், தொடர்ந்து அப்படியே போய்க் கொண்டே இருங்கள். தேவன் உன்னை சரியாக நேராக கொண்டு செல்வார். இந்நாட்கள் ஒன்றில் அதெல்லாம் தீர்ந்து போகும். 209 சகோதரன் நெவிலும் மற்றவர்களும் வழக்கமாக பாடுகின்ற அந்த நல்ல பழைய பாடலை நான் நினைக்கிறேன். “எனக்கு சீக்கிரத்தில் எல்லா தொல்லைகளும், சோதனைகளும் தீர்ந்துவிடும்.” ஆம், அது உண்மை. 210 எத்தனை பேர் அவரை நேசிக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை நாங்கள் காணலாமா? சரி. “ஆச்சரியமான கிருபை” என்ற பாடலுக்கு எங்களுக்கு ஒரு சுருதியை கொடுங்கள். எல்லாரும் ஒரு நிமிடம் அப்படியே அமைதியாய் இருங்கள். இப்பொழுது மெதுவாக. ஆச்சரியமான கிருபை! எவ்வளவு இனிமையான சத்தம் ஒரு இழிஞனைப் போன்ற என்னை அது இரட்சித்ததே! நான் ஒரு காலத்தில் இழக்கப்பட்டிருந்தேன், ஆனால் இப்பொழுதோ நான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளேன், குருடனாயிருந்தேன், ஆனால் இப்பொழுதோ நான் காண்கிறேன். கிருபையே என் இருதயம் பயப்பட போதித்தது, கிருபையாலே என் பயங்கள் விடுபட்டு போயின; கிருபை தோன்றி விலையேறப் பெற்றதை செய்தது, நான் முதலில் விசுவாசங்கொண்டதே அந்த நேரம்தானே! இப்பொழுது நாம் யாவரும் ஒன்று சேர்ந்து, நாம் பத்தாயிரம் வருடங்கள் அங்கு இருந்து கொண்டு சூரியனைப் போன்று பிரகாசமாய் பிரகாசிப்போம்; நாம் முதலில் துவங்கினதைக் காட்டிலும் தேவனுடைய துதியைப் பாட நமக்கு நாட்கள் குறைவானதாய் இருக்காது. 211 நான் வழக்கமாக வயதான டாக் டேவிஸ்(Doc Davis) மற்றும் அவர்களில் அநேகர் பேசுவதையும் கேட்பேன். அனேக பண்டைய பரிசுத்தவான்கள் பேசுவதையும் நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் வந்து கொண்டிருந்தபொழுதும், அவர்கள் எல்லாரும் கடந்து போன பிறகும், ஊழியமானது வளர்ச்சியடைந்து கொண்டேயிருந்தது. அவர்கள் உணர்ந்ததைக் குறித்து அவர்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அதை இப்பொழுது தான் உணர துவங்கினேன். ஓ, எவ்வளவு, என்ன ஒரு அற்புதமான காரியம்! 212 இன்றைக்கு நான் என்னத்தைப் பற்றிக் கொள்வேன்? நான் எங்கே போவேன்? நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்? ஆமென். நான் என்ன செய்வேன்? எங்கே? அது கிறிஸ்துவாக இல்லாதிருக்குமானால், எனக்கு இன்றைக்கு என்ன சம்பவிக்கும்? என்னுடைய நம்பிக்கைகள் எங்கே நங்கூரமிடப்படும்? நான் ஒரு பிசாசு பிடித்தவனாய் இருப்பேன். என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் காணும்போது, என்றென்றைக்குமாய், அதைக் குறித்து யாவையும் அறிய, ஓ, என்னே, நான் என்ன செய்வேன்? 213 ஆனால், ஓ நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. இது வெறுமனே ஒரு நாளின் விடியலாய் இருக்கிறது. நாம் வெறுமனே ஒரு சொப்பனத்திற்குள்ளாக இருக்கிறோம். நாம் விழித்தெழ ஆயத்தமாகிக் கொண்டே இருக்கிறோம். ஓ, ஒரு தீக்கனவில் இருந்ததுபோல, அதிலிருந்து வெளிவந்து, ஒரு வசந்த காலத்திற்குள் செல்லுதல், நித்தியமான இளமை, நித்தியமான ஆரோக்கியம், நித்திய சந்தோஷம், நித்திய சமாதானம். அது அற்புதமாயில்லையா? அவர் அவ்வளவு தத்ரூபமாய் இருக்கிறாரே! 214 இப்பொழுது இங்கே வியாதியாயும், ஜெபித்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறவர்கள் எத்தனை பேர் என நான் காண விரும்புகிறேன். உங்களுடைய கரங்களை நாங்கள் காண்போமாக. சரி. 215 இந்த கடந்த வாரத்தில் என்ன சம்பவித்திருக்கிறது என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். உண்மையிலேயே எங்களுக்கு கூட்டத்தில் மேடையிலேயே மிகுந்த ஆச்சரியமான காரியங்கள் சில சம்பவிப்பதற்கிருந்தன. நான் ஒருவிதமாய் ஏதோ காரியத்திற்குள் வந்து கொண்டிருக்கிறேன். அது இருந்ததைக் காட்டிலும் மகத்தானதாய் இருப்பது போன்று அது காணப்படுகிறது 216 நான் மேடைக்கு வந்திருக்கிறேன். தேவன் ஒரு—ஒரு தீர்க்கதரிசன வரத்தை கொடுத்திருக்கிறார். அது…கேள்விக்கு அப்பாற்பட்டதாயிக்கிறது. நான் இங்கேயே அதை உங்களுக்கு நிரூபிக்க முடியும். புரிகின்றதா? அது கேள்விக்கு அப்பாற்பட்டது. ஆனால் அது செய்யப்பட வேண்டிய விதத்தில் அந்த வேலை சரியாக செய்கிறதில்லை என்பதை நான் காண்கிறேன். ஏனென்றால் அது ஒரு வரமாக இருக்கிறது. இன்னொரு காரியம், அது ஒரு தனிப்பட்ட நபர், நீங்கள் பாருங்கள் அது ஒரு வரத்தின் மூலமாக, ஒரு தனிப்பட்ட நபரைப் பொறுத்ததாயிருக்கிறது. 217 ஆனால் அன்றொரு நாள் நான் ஏதோ காரியத்தைச் செய்து ஓக்லாண்டில் (Oakland) அங்கே…பெரிய அரங்கத்தில் ஜனங்களை கூட்டும்படி முயற்சித்தேன், நான், “அப்படியே அவருடைய சமூகத்தில்” என்று கூறி, சரியாக வார்த்தையோடு தரித்திருந்தேன். ஜனங்கள் கூடி வந்தனர்…என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஆப்பிரிக்காவிலோ மற்றும் அதைப்போன்று சுற்றிலும் நடந்த வெளிப்புற பெரிய கூட்டங்களிலோ, ஆனால் நான் அந்த அளவுள்ள எந்த ஒரு கூட்டத்திலும் கண்ட சுகமளித்தலைக் காட்டிலும் அதிகமாய் இருந்தது என்று நான் விசுவாசிக்கிறேன். ஜனங்கள் கூட்டத்தில் இருந்த தேவனின் பிரசன்னத்தை அடையாளங் கண்டுகொண்டு, அப்படியே அங்கேயே உட்கார்ந்து தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக பிரவேசித்தனர். ஜனங்கள் எழும்பி நின்று சுகமடைந்தார்கள். ஒரக்கண் பார்வை நேராக்கப்பட்டது. மேலும் ஓ, அதனுடைய… 218 நான் நினைக்கிறேன், அது ஒரு நேரத்திற்கு வந்து கொண்டிருக்கிறது, அங்கே…பவுல், “தீர்க்கதரிசனம் எங்கே இருக்கிறதோ அது ஒழிந்து போகும்; அந்நிய பாஷைகள் எங்கே இருக்கின்றதே, அவைகள் ஓய்ந்து போம்” என்றான். பரிசுத்தவான் கள் இவ்விதமாக ஒன்று கூடும் பொழுது ஒரு அன்பின் ஆவி அப்படியே ஜனங்களை மேலாக வாரிக்கொள்ளும் ஒரு நேரம் வரை அது வந்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். அங்கே உள்ளே இருக்கிற ஒவ்வொரு நபரும் தவறான யாவும் வெளியே எடுக்கப்படும். அது அத்தகைய ஒரு பரிசுத்த ஆவியின் பிரசன்னமாய் இருக்கும். 219 நாம் அவர்கள் மேல் கரங்களை வைத்து அவர்களுக்காக இப்பொழுது ஜெபிக்கும்போது, அது ஒருக்கால் ஒரு அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியக்காரனனின் தொடர்பாக இருக்கலாம். கரங்களை மேலே வைத்தால், அது அப்படியே தேவனுக்கு ஒரு துதியைப் போன்றுள்ளது என்ற நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய சபையானது வெளியே அழைக்கப்படும்போது அவ்விதமாக அங்கே பரிசுத்தவான்கள் ஒன்று சேர்ந்து அமருவர். பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து பெந்தெகோஸ்தே நாளில் இருந்தது போன்றே சரியாக அசைவாடி உறவாடுவார். புரிகின்றதா? ஜனங்களை சுகப்படுத்தி, ஜனங்களை எழுப்பி, மகத்தான காரியங்களைச் செய்வார். அது சம்பவிப்பதை நான் காணத் துவங்குகிறேன். காரணம் ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 220 ஜனங்கள் வரத்தோடு முன் சென்றார்கள். அது உண்மை. சொல்வதற்கு எனக்கு சந்தேகம் ஏதும் இல்லை. நான் யாருடைய குறையையும் காண்பவன் அல்ல. அவர்கள் என்ன விசுவாசிக்கிறார்களோ, அது அவர்களைப் பொறுத்தது. பாருங்கள். நான் வரமளிக்கப்பட்ட ஊழியங்களோடுள்ள மனிதர்களை கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் முன்னேறிச் சென்றனர். சற்றேறக்குறைய ஒன்றை, ஒன்றை…உண்டாக்கினார்கள். நான் என்ன சொல்லுவேன்? இப்பொழுது மரியாதையுடனும், அன்புடனும், அது என்னுடைய இருதயத்தில் இருக்கிறது என்பதை தேவன் அறிவார். புரிகின்றதா? அவர்கள் அதிலிருந்து பணம் சேகரிப்பது போன்ற காரியத்தை அதிகமாக உண்டாக்கியிருக்கின்றனர். நீங்கள் பாருங்கள். அப்படியே ஜனங்களை ஒன்று சேர்த்து சில மகத்தான பெரிய ஏதோ காரியத்தை மேலே புகுத்த விரும்புகிறார்கள். ஒருக்கால் அவர்கள் பணத்தை முதலீடு செய்யலாம், நல்லது. ஒருக்கால் அது சரியாய் இருக்கலாம். ஆனால் அது எனக்குத் தென்படுவதோ… 221 அவர்கள், “நல்லது, முடிவானது வந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய பணத்தினால் ஜனங்களுக்கு என்ன தேவையாயிருக்கிறது?” என்கிறார்கள். அதினால் உங்கள் தேவை என்ன? உங்களைத்தான்? புரிகின்றதா? 222 ஆகையால், அதைக் குறித்து காரியம், ஜனங்களுக்கு சுவிசேஷத்தை கொண்டு சென்று பிரசங்கிப்பதாக இருக்கிறது. நீங்கள் பாருங்கள், நான் நினைக்கிறேன், நாம் சரியாய் இருப்போமேயானால்… 223 வரங்கள், நீங்கள் பாருங்கள், அடையாளங்கள், இப்பொழுது ஒரு நபராய் இங்கே வந்து, இந்த காலையில் இந்த பிரசங்கபீடத்தில் இங்கே நின்று மகத்தான அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ய முடியும். அது அந்த நபர் இரட்சிக்கப்பட்டுவிட்டார் என்று கூட அர்த்தமாகாது. பிசாசுகள் அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்கின்றன. நிச்சயமாக அவைகள் செய்கின்றன. நிச்சயமாகவே, அவைகள் செய்கின்றன. கடைசி நாளில் அவர்கள் அதைக் காட்டிலும் அதிகமாக செய்வார்கள் என்று வேதம் கூறியுள்ளது. நல்லது, இயேசு, “அனேகர் என்னிடத்தில் வந்து, ‘கர்த்தாவே நான் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளை துரத்தவில்லையா? நான் இதைச் செய்யவில்லையா? நான் அதை மற்றும் இந்த எல்லாக் காரியங்களையும் செய்யவில்லையா?’” என்பார்கள். அதற்கு அவர், “நான் அதை அறியேன். அக்கிரம செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள்” என்பார். புரிகின்றதா? நேரமானது வந்து கொண்டிருக்கிறது…என நான் நம்புகிறேன். 224 “வரங்களின் வெளிப்படுதல் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆதாயமாகவும் கூட கொடுக்கப்பட்டது.” அது—அது உண்மை. வரங்கள் அற்புதமானவைகள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவைகள் நமக்கு தேவை, அவைகளுக்கு மரியாதை கொடுக்கிறோம். 225 ஆனால் நேரமானது வந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது அது அதைக் காட்டிலும் ஒரு உயர்ந்த தரத்தில் இருக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். ஏன்? “இந்த காரியங்கள் எல்லாம் செய்து முடித்த பின்னர், அன்பு என்பது எதுவோ அது என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கும்.” புரிகின்றதா? அது தேவனுடைய அன்பாய் இருக்கிறது. நாம் வெறுமனே—வெறுமனே நின்று, இந்தவிதமாக பிரசங்கித்துக் கொண்டு அல்லது பேசிக்கொண்டும், இருப்போம், அன்பானது இந்த கூட்டத்தின் மேல் வந்து அமரும். வ்யூ! என்னே! 226 நீங்கள் பாருங்கள். இது பிரசங்கித்துக் கொண்டிருக்கிற நாளாயிருக்கிறது. நாம் உள்ளே நுழைந்து பாவிகளை எடுத்து, அவர்களை வெளியே அழைக்கிறதற்கு இதுதான் நாளாயிருக்கிறது. நான் என்ன சொல்லுகிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? பாவிகளுக்கு, அவர்களை வெளிக்கொண்டு வருவதற்காகவே, அதற்காகத்தான் வார்த்தையின் பிரசங்கமே உள்ளது. இப்பொழுது நாம் உள்ளே இருந்து கவனிக்க வேண்டும். அங்கே உள்ளேயோ, நாம்…கரங்களை மேலே வைக்குதல் முதலான காரியங்களால் அற்புதங்களும், அடையாளங்களும் செய்யப்படுகின்றன. ஏனென்றால் அது பிரசங்கித்துக் கொண்டிருப்பதாய் இருக்கிறது. 227 ஆனால் இப்பொழுது நேரமானது வந்து கொண்டிருக்கிறது, அப்பொழுது அவன் கிட்டத்தட்ட அப்படியே…சபையானது ஏறக்குறைய தீர நங்கூரமிடப்பட்டிருக்கிறது. புரிகின்றதா? 228 தேவன் ஒரு விநோதமான பிறப்புடைய சரீரத்தை உடையவராய் இருக்க மாட்டார். அவர் ஒரு கரத்தில் ஆறுவிரல்களை உடையவராய் இருக்கமாட்டார். அங்கே ஒரு கரத்தில் சரியாக ஐந்து விரல்கள்தான் இருக்கும். கிறிஸ்துவினுடைய சரீரம் விநோதமான பிறப்புடையதாய் இருக்காது. கிறிஸ்துவின் சரீரத்திற்குள், கடைசி நபர் வந்து சேர்ந்தவுடன், அப்பொழுது அது முடிவடைகிறது [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கபீடத்தை ஒருமுறை தட்டுகிறார்.—ஆசி.] அது முடிவு பெறுகிறது. எந்த ஒன்று என்று எனக்கு தெரியாது. இந்தக் காலையில் இது அந்த கடைசி ஒன்றாய் ஒருக்கால் இருக்கலாம். ஒருக்கால் இன்றைக்கு அந்த கடைசி ஒன்று ஆப்பிரிக்காவிலிருந்து உள்ளே கொண்டு வரப்படலாம். ஆனால் கடைசி ஒன்றானது பொருத்தப்படுகின்றபோது, நான் என்ன சொல்கிறேன் என்றால்…நீங்கள் தொடர்ந்து சென்று சுவிசேஷத்தை பிரசங்கிக்கலாம். ஆனால் அங்கே ஏதும் அதற்கு பதிலளித்தலே இருக்காது. பாருங்கள், அங்கே ஏதும் பதிலளிப்பே இருக்காது. 229 பில்லி கிரஹாமோடும், மற்றவர்களோடும் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் அங்கே ஒரு இடத்திற்கு சென்றார்கள். அங்கே முப்பதாயிரம் இல்லை இருபதாயிரம் இல்லை முப்பதாயிரம் பேர்கள் மனமாற்றமடைந்தனர். ஒரு வருடத்திற்குள் அங்கே அவர்களால் இருபது அல்லது முப்பது ஜனங்களைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அதைக் குறித்து சிந்தியுங்கள். அதைக் குறித்து சிந்தியுங்கள். புரிகின்றதா? 230 இப்பொழுது, அது என்னை ஒரு கால்வினிஸ்டாக ஆக்குகிறது. சரியாக. புரிகின்றதா? தேவன் என்ன செய்திருக்கிறார், தேவனே செய்திருக்கிறார். 231 இப்பொழுது, “நான் பிரசங்கிமார்களைக் கீழே போகச்செய்து, சிலருக்கு பிரசங்கித்து, நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைக் குறித்து அவர்களிடம் கூற, ஒருவேளை யாராவது எனக்காக வருத்தப்பட்டு, இரட்சிக்கப்படலாம்” என்று கூறுவதற்காக இயேசுவானவர் ஒருபோதும் பூமிக்கு வரவில்லை. தேவன் தம்முடைய அலுவலகத்தை அந்தவிதமாக நடத்துவதில்லை. 232 அங்கே தேவன், ஆதியிலேயே, சரியாக யார் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தார். இரட்சிக்கப்படுவார்கள் என்று தேவன் அறிந்திருந்தவர்களை இரட்சிக்கவே இயேசு வந்தார். அவர்கள் தேவனுடையவர்களாய் இருக்க வேண்டுமேயென்றி, இழக்கப்பட்டு போவார்கள் என்ற பிரியங்கொண்டவராய் அவர் இருக்கவில்லை. யார் இழக்கப்பட்டுப்போவார்கள், யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர் அறிந்திருந்தார். ஆகையினால் அவரால் முன்குறிக்க முடிந்தது. முன் குறிப்பது அல்ல, அவர்—அவர் முன்னறி…முன்னறிவினால் ஒவ்வொரு காரியமும் அவருடைய மகிமைக்கென கிரியை செய்யும்படியாக அவரால் அதை ஒழுங்குபடுத்த முடிந்தது. ஏனென்றால் அது… 233 பிசாசு சர்வ வியாபியல்ல. சர்வ வல்லமையுள்ளவனுமல்ல, அவன் துவக்கத்திலிருந்து முடிவை அறிந்திருக்கவில்லை. தேவன் மட்டுமே அதை அறிந்திருக்கிறார். அதுவே அந்த ஒரு காரியம். தேவனோ இங்கே சரியாக உயரே இருக்கிறார். அவர் அறிந்திருக்கிறார். பிசாசு என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அறியான். அவனுக்குத் தெரிந்த ஒரே காரியம், அவன் வெறுமனே ஒரு பிசாசு என்பதும், அவனால் செய்ய முடிந்ததை அவன் அப்படியே செய்கிறான். ஒவ்வொரு காரியத்திற்குள்ளும் அவனால் நுழைய முடியும். அவன் அதை செய்கிறான். 234 ஆனால் தேவன் முடிவை அறிந்திருக்கிறார். ஆமென். எனவே தேவன் முடிவை அறிந்தவராய் ஒவ்வொரு காரியத்தையும் சரியாக அவருடைய மகிமைக்கென்றே செய்ய முடியும். ஆமென். ஓ, நான் அவரை நேசிக்கிறேன். என்னே ஓ! புரிகின்றதா? அவர் தேவனாயிருக்கிறார். எனவே நினைவிருக்கட்டும், கடைசி நபர்… 235 எப்பொழுது உங்களுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டது, நேற்றைய தினமா? கடந்த வருடமா? கடந்த வருடத்திற்கு முந்தின வருடமா? இல்லை ஐயா. “உலகமானது சிருஷ்டிக்கப்பட்டபோது உங்களுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டது.” வேதம் என்ன கூறியுள்ளது. வேதம் வெளிப்படுத்தலில், “அந்தி கிறிஸ்து ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் உலகத் தோற்றமுதல் பேரெழுதப்பட்டிராமல் பூமியின் மேல் வாசம்பண்ணின யாவரையும் வஞ்சித்துப் போட்டான்” என்று கூறியுள்ளது. அப்பொழுதே உங்களுடைய பெயர் எழுதப்பட்டாயிற்று. இப்பொழுது ஒரே காரியம்… நீங்கள், “அப்படியானால் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருப்பதினால் என்ன?” என்று கூறுகிறீர்கள். 236 நல்லது, வேதாகமம் அதை தெளிவாய் விளக்குகிறது. புரிகின்றதா? அவர், “பரலோக இராஜ்யம் கடலிலோ அல்லது ஏரியிலோ ஒரு வலையை எடுத்து வீசின ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் கடலுக்குள் ஒரு வலையைப் போட்டு, அவன் அதை வெளியே இழுக்கிறான்” என்றார். அதுவே சுவிசேஷத்தை பிரசங்கித்தலாய் இருக்கிறது. புரிகின்றதா? ஒரு முழுமையான சமுத்திரம் உண்டு. ஐக்கிய நாடுகள் ஏரியாய் இருக்கிறது. ஊழியக்காரர்கள்… 237 இப்பொழுது நான் இங்கே கீழே போகிறேன், ஜெபர்ஸன்வில் ஏரியின் இந்த மூலையில் நிற்கிறேன். “சகோதரன் நெவில் நீர் வலையை வீசிக்கொண்டிருக்கிறீரா?” என்கிறேன். “ஆம்” “ஏதாவது பலன் கிடைக்கிறதா?” “அப்படியொன்றும் அதிகமாயில்லை” 238 “நல்லது, நாம்…நான் கொஞ்ச நேரம் உம்மோடு வலை போடுகிறேன்?” நான் என்னுடைய வலையை எறிகிறேன். அவருடையதை அவர் எறிகிறார். இங்கே நாங்கள் இழுக்கிறோம், பிரசங்கிக்கிறோம், உள்ளே இழுக்கிறோம். 239 கூட்டமாக ஜனங்கள் மேலே வந்து, “ஆம், நான் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்கிறார்கள். சரி. சுற்றுமுற்றும் பார்த்து, “எது மீனாக இருக்கிறது? எந்த ஒன்று.” “எனக்கு தெரியாது.” புரிகின்றதா? “நல்லது, இப்பொழுது, நீங்கள் இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்?” 240 “நல்லது, நான் கலிபோர்னியாவுக்கு போகிறேன். கர்த்தர் என்னை கலிபோர்னியாவுக்கு அனுப்பினார். நான் அங்கே சிறிது காலம் வலையை போடப்போகிறேன்.” 241 நான் அங்கே போய் என்னுடைய வலையை இந்தவிதமாக வெளியே வீசி உள்ளே தள்ளுவேன். ஆயிரத்து ஐநூறு பேர் ஒரு நேரத்தில் வருகிறார்கள். “அவர்கள் எல்லாரும் இரட்சிக்கப்பட்டவர்களா?” எனக்கு தெரியாது. அங்கே அவர்கள் இருக்கிறார்கள். நான் வலையை எடுத்துக் கொள்கிறேன். அதுதான் சுவிசேஷ வலை. 242 அவர்களில் சிலர் வேதமோ எல்லாவிதமான காரியங்களும் அந்த தண்ணீரில் இருந்தது என்று கூறியுள்ளது. அவைகளெல்லாம் அதே தண்ணீரை சுவாசித்தன. அதே தண்ணீரில் ஜீவித்தன. [சபையோர், “ஆம்” என்கின்றனர்.—ஆசி.] புரிகின்றதா? அங்கே உணவு ஆமை வகைகளும், சேற்று ஆமைகளும், பாம்புகளும், தவளைகளும், பல்லிகளும், அழுகிய பொருட்களை தின்று வாழும் உயிரினங்களும் மற்றும் உண்மையான மீனும் இருந்தது. 243 இப்பொழுது, மீன்களாய் இருந்தவைகள், சுவிசேஷ வலையானது அவைகளின் மேல் சென்றபொழுது, அவைகள் கரையின் மேல் இருந்தபோதே மீன்களாய் இருந்தன. உணவு ஆமை வகைகளாக சுவிசேஷ வலையில் இருந்தவைகள். கரையின் மேல் உணவு ஆமை வகைகளாகவே இருந்தன. அவைகள் சரியாக திரும்ப சேற்றிற்கு கொண்டு செல்லும் வரை அது நீண்ட காலம் இருக்காது. “கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும், நாய் தான் கக்கினதை தின்னவும் திரும்பினது போன்று” அவைகள் தூர செல்கின்றன. புரிகின்றதா? 244 ஆனால் ஆதியிலே, துவக்கத்திலேயே அவைகள் உணவு ஆமைகளாக இருந்தன. அவைகள் உணவு ஆமை என்று சொல்வது என்னுடைய வேலையல்ல. எனக்குத் தெரியாது. நான் வெறுமனே வலையை வீசிக்கொண்டிருக்கிறேன், பாருங்கள். வெறுமனே வலையை இழுக்கிறேன். ஆனால் கடைசி மீனானது தண்ணீரை விட்டு வெளியே வருகின்றபோது, சகோதரனே அதுதான் அது. ஓ, கர்த்தர் தாமே வந்து, வேலையானது முடிந்துவிட்டது என்று கூற, சற்று நேரத்தில் வழக்கமான நிலைமை மாற்றப்படும். 245 அது சரியே. அது சரியே. ஆம் ஐயா. அவர் கடைசி ஒன்றானது வெளியே வந்தவுடன், “வேலை செய்யப்பட்டாயிற்று, அது முடிக்கப்பட்டாயிற்று, அது முழுமையாய் முடிந்து விட்டது” என்று கூறுவார். 246 அங்கே ஒரு கூட்ட பழைய பன்றிகள் சுற்றிலும் சேற்றிலும் புரண்டு கொண்டு, எல்லாக் காரியத்தையும் செய்துகொண்டிருந்தன. தேவன் அங்கிருந்து மீனை வெளியே, அப்படியே அவரால் முடிந்த அளவு வேகமாக இழுத்துக் கொண்டிருக்கிறார். பிரசங்கிமார்கள் ஒவ்வொரு பக்கத்திலிருந்து, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு வலைகளை வீசிக் கொண்டிருக்கின்றனர். வீசின வலையை நம்மால் முடிந்த அளவு கடினமான இழுத்துக் கொண்டிருக்கிறோம். அவள் ஏறக்குறைய ஆயத்தமாய் இருக்கிறாள். இந்நாட்களில் ஒன்றில் அவர் அந்த பழைய குளத்தை ஊதுவார். அவள் முழுவதுமாய் முடிவுற்றிருப்பாள். ஆனால் மீனோ, நல்ல, தெளிவான, அக்கரையில் உள்ள தண்ணீருக்கு போகும், அங்கே அவைகள் என்றென்றைக்குமாய் நித்திய ஜீவனை உடையதாயிருக்கும். ஆமென். ஓ, அந்த கடைசி ஒன்று வந்ததுமே! என்னே! 247 “நீங்கள் ஒரு மீனாய் இருக்க விரும்புகிறீர்களா?” அதை தேவனிடம் கூறுவது எவ்வளவு, என்ன ஒரு சிலாக்கியமாய் இருக்கிறது. ஆமென். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஐந்து முறைகள் தட்டுகிறார்.—ஆசி.] “என்னுடைய மேஜையின் மேல் நீங்கள் ஒரு மீனாய் இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் வந்து என்னுடைய மேஜையிலே ஆகாரமாய் இருக்க விரும்புகிறீர்களா?” ஓ, என்னே! “நிச்சயமாக, நிச்சயமாக, கர்த்தாவே,” புரிகின்றதா? ஆனால் அவர்களுடைய சுபாவமே மீனாக இருக்கிறது. புரிகின்றதா? 248 நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருக்கும்பொழுதே, உங்களுடைய சுபாவமே ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறது. “இப்பொழுது உன்னால்—உன்னால்—உன்னால் முடியாது, உன்னால் புகைக்க முடியாது. உன்னால் குடிக்க முடியாது. உன்னால் அதைச் செய்ய முடியாது” என்று நீ கூற வேண்டியதில்லை. நீங்கள் அதைக் கூற வேண்டியதில்லை. எப்படி இருந்தாலும் அவர்களால் அதைச் செய்ய முடியாது. புரிகின்றதா? அவர்களுடைய சுபாவமே வித்தியாசமாய் இருக்கிறது. கிறிஸ்துவின் ஆவி அந்த நபருக்குள் இருக்கிறது. கிறிஸ்து அந்த காரியங்களைச் செய்கிறதில்லை. புரிகின்றதா? 249 “நீங்கள் கர்த்தரை நேசிக்க வேண்டும். நீங்கள் சபைக்கு போய்த் தானாக வேண்டும்” என்று நீங்கள் கூறுகிறீர்கள். அந்த ஜனங்களிடத்தில் நீங்கள் அதை கூற வேண்டியதில்லை. எப்படியிருந்தாலும் அவர்கள் போகிறார்கள். அவர்கள் மழைகளினூடாக நடப்பார்கள். அவர்கள் போவார்கள். அவர்கள் சபைக்கு போக, மரணத்தினூடாக போய்க் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, அவர்கள் அதை நேசிக்கிறார்கள். அவர்கள் அங்கே சென்றாக வேண்டும். அங்கேயிருக்கிறதெல்லாம் அவ்வளவு தான். அது அவர்களுடைய ஜீவனாய் இருக்கிறது. அவர்களுக்கு ஜீவனில்லையென்றால், அவர்கள்—அவர்கள் அழிந்து கொண்டிருக்கின்றதைப் போன்று அவர்கள் உணருவார்கள். நிச்சயமாக ஆம், ஐயா. எப்பொழுதுமே ஏதோ காரியம் உங்களுடைய இருதயத்திற்குள்ளாக எரிந்து கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் சரியாக அங்கே போயாகத்தான் வேண்டும். இப்பொழுது அங்கே வாதிடுவதற்கு போவதல்ல, அங்கே குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு போவதல்ல. ஆனால் ஆராதிப்பதற்கு அங்கே செல்வதே. என்னே! நீங்கள் பதுக்கிளர்ச்சியூடப்பட்டு வீட்டிற்கு செல்கிறீர்கள். அது ஒரு அற்புதமான ஜீவியமல்லவா? எத்தனைபேர் அதைக் கண்கூடாக அறிந்திருக்கிறீர்கள்? நாங்கள் உங்களுடைய கரத்தை காணட்டும். ஓ! 250 அது சரி, கிரீட்டி (Gertie) நாம் அதை பாடுவோம். “சமாதானம்! சமாதானம்!” சமாதானம்! அற்புதம் சமாதானம், மேலே பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; நான் ஆழங்கான முடியாத பேரலைகளின் அன்பில் ஜெபிக்க என் ஆவி மீது என்றென்றைக்குமாய் அசைவாடும். 251 இப்பொழுது நீங்கள் ஏதோ காரியத்தை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாராயிருந்தாலும் அவர்களுடன் கரம் குலுக்கி, “சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, உங்களை பரலோகத்தில் சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். [இசைப் பேழையை இசைப்பவர் அற்புத சமாதானம் என்ற ஒரு அடியை இசைக்கையில் சகோதரன் பிரான்ஹாமும் சபையோரும் கரங்களை குலுக்குகின்றனர்—ஆசி.] சமாதானம்! சமாதானம்! அற்புதமான சமாதானம், மேலே பிதாவினிடத்தில் இருந்து இறங்கி வருகிறது; ஆழங்காண முடியாத பேரலைகளின் அன்புக்குள் என்றென்றைக்குமாய் என் ஆவியின் மேல் அசைவாடும் (ஓ, என்னே!) என் மீட்பர் மரித்த குருசண்டை, அங்கேயிருந்து என் பாவத்தை சுத்திகரிக்க நான் அழுதேன்; அங்கேதான் என்னுடைய இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமையுண்டாவதாக! அவருடைய நாமத்திற்கு மகிமையுண்டாவதாக! அவருடைய இணையற்ற நாமத்திற்கு மகிமையுண்டாவதாக! அங்கேதான் என்னுடைய இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமையுண்டாவதாக! 252 இப்பொழுது அடுத்த வரியை நாம் பாடும்பொழுது, வியாதியஸ்தர்கள் ஜெபத்திற்காக சரியாக இந்தப் பக்கத்தில் வரிசையாய் நிற்பார்களா என நான் வியக்கின்றேன். எனக்கு ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இப்பொழுது முன் வந்து எங்களுக்கு உதவி செய்யும்படி வியாதியஸ்தருக்காக ஜெபிப்பார்களானால், வலதுகைப் பக்கத்தில் வரிசையாய் நில்லுங்கள். இந்த வழியாய் வாருங்கள். அது சரி, ஜெபித்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள் வலது பக்கமாக வாருங்கள். நான் பாவத்திலிருந்து மிகவும் ஆச்சரியவிதமாய் இரட்சிக்கப்பட்டேன், இயேசு மிக இனிமையாய் என்னுள்ளே தரித்திருக்கிறார், அங்கே அவர் குருசண்டை என்னைக் கொண்டு சென்றார்; அவருடைய விலையேறப்பெற்ற நாமத்திற்கே அவருடைய விலையேறப்பெற்ற நாமத்திற்கே மகிமையுண்டாவதாக! அவருடைய விலையேறப்பெற்ற நாமத்திற்கே மகிமையுண்டாவதாக! அங்கேதான் என்னுடைய இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக! 253 சகோதரி கிரீட்டி, நீங்கள் விரும்பினால், எங்களுக்காக மகத்தான வைத்தியர் என்ற பாட்டிற்கு ஸ்வரத்தைக் கொடுப்பீர்களா? 254 நான் உங்களை ஏதோ ஒன்று கேட்க விரும்புகிறேன் (நான் அவைகளை ஞாபகத்தில் கொண்டு வருவேன், ஆம் ஐயா.) சரியாகக் கூறினால் இந்தக் காலையில் நீங்கள் சுகமாக்கப்படப் போகின்றீர்களா? அது உங்கள் இருதயத்தின் மிகுந்த ஆழத்தில் இருக்கிறதா? என் நண்பனே, நீ அந்த விதமாய் வந்து கொண்டிருந்தால் உன்னுடைய சுகம், உம்முடைய இரட்சிப்பு எவ்வளவு நிச்சயமாய் இருக்கிறதோ, அவ்வளவு நிச்சயமாய் இருக்குமென்று நான் அப்படியே உறுதி கூறுவேன். 255 இப்பொழுது உங்களுடைய சுகமளித்தல் என்பது உங்களுடைய இரட்சிப்பை போன்று அவ்வளவு நிரந்தரமானதல்ல. உங்களுடைய சுகமடைதல் உங்களுக்கு தவறிப்போகலாம். நீங்கள்…நீங்கள் சுகமாக்கப்பட்டால் நீங்கள் மீண்டும் சுகவீனமாகலாம். இன்றைக்கு நீங்கள் சளிக்காய்ச்சலிலிருந்து சுகமாக்கப்படக்கூடும், பரிபூரணமாய் சாதாரணமாகவே நல்லபடியாய், “சுகமாய் இருக்கிறீர்கள்” என்று வைத்தியரால் அறிவிக்கப்படலாம், அடுத்த வாரமே சளிக்காய்ச்சலினால் மரிக்கக்கூடும். அது உண்மை. 256 நீங்கள் இந்த வாரம் க்ஷ்யரோகத்திலிருந்து முழுமையாக சுத்தமாய் இருக்கலாம். இப்பொழுதிலிருந்தே இரண்டு மாதங்களில் க்ஷ்யரோகத்தால் மரிக்கலாம். அவர்கள் உன்னுடைய சரீரத்தில் ஒரு கிருமியும் இல்லை என்று அவர்களால் கண்டுபிடிக்க முடிந்த ஒரு பரிசோதனையை நிகழ்த்தலாம். பின்னர் இரண்டு வாரத்தில் க்ஷ்யரோகத்தால் மரிக்கலாம். அது உண்மை. புரிகின்றதா? எப்படியிருந்தாலும் நீ மரித்தாக வேண்டும். 257 ஆனால் உபகாரங்கள்! தாவீது, “அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” என்று அழுதான். உபகாரங்கள்! யாத்திரையில் என்ன உபகாரம் இருக்கிறது? “அவர் என் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து,” அதாவது நீங்கள் வெளியே போகிறீர்கள். நீங்கள் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்திருக்க கூடாது என்று உங்களுக்கு தெரியும் என்ற ஏதோ காரியமே அக்கிரமமாக இருக்கிறது. அவர் அதை மன்னிக்கிறார். நீங்கள் அவரை கேட்கிறீர்கள். அவர் உங்களுக்கு மன்னிக்கிறார். “அவர் என் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, என் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்” இப்பொழுது நான் இதை உங்களுக்கு என்றென்றைக்குமாய் தீர்த்து வைக்க விரும்புகிறேன். 258 அப்பொழுது, யாரோ, “சகோதரன் பிரான்ஹாம், தெய்வீக சுகத்தில் உமக்கு விசுவாசம் இருக்கிறதா?” என்கிறார்கள். 259 இப்பொழுது நான் இதை விவேகத்தோடும், நிதான புத்தியோடும் கூறட்டும். எந்த ஒரு நபராவது, எந்த ஒரு வைத்தியராவது, எந்த ஒரு விஞ்ஞானமாவது, எங்கிருந்தாவது அவர்களை இந்த எழுப்புதலுக்காக நான் அழைக்க, இந்த பிரசங்க பீடத்திற்கு வந்து, தெய்வீக சுகத்திற்கு புறம்பாக, எங்கேயாவது, யாராவது, எப்பொழுதாவது சுகமாக்கப்பட்டார்கள் என்று ஒரு இடத்தை எனக்கு காட்ட நான் விரும்புகிறேன். நீங்கள் உங்கள் வைத்திரிடம் சென்று அல்லது நீங்கள் விரும்புகின்ற யாரிடத்திலாவது சென்று, தெய்வீக சுகத்திற்கு புறம்பாக யாராவது சுகமாக்கப்பட்டார்கள் என்று எனக்கு காண்பிக்க நான்—நான் விரும்புகிறேன். 260 சுகப்படுத்தக்கூடிய மருந்தை நீங்கள் என்னிடம் கொண்டு வர நான் விரும்புகிறேன். தான் ஒரு சுகமளிப்பவன் என்று சொல்லுகிற வைத்தியனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வரும்படி நான் விரும்புகிறேன். அவர் ஒரு குதிங்காலராய் (heeler) இருக்கலாம். சரிதான், “குதிங்கால்” ஒரு வைத்தியரின் குதிங்கால் (heel). ஆனால் தேவன் ஒருவரால் மட்டுந்தான் சுகமளிக்க முடியும் அல்லது எப்போதுமே சுகமளித்தவர் அல்லது என்றென்றைக்கும் சுகமளிப்பவர். 261 சுகமளிக்கக் கூடிய ஏதாவது மருந்து நம்மிடத்தில் இருக்குமாயின், சரியாக இந்த மேடையின் மேல் அந்த மருந்தைக் கொண்டு நம்மால் ஒரு மனிதனை உருவாக்க முடியும். அது சரி. நம்மால் ஒரு மனிதனை உருவாக்க முடியும். சரியாக இந்த மேடையின் மேல் அவனை சிருஷ்டிக்க முடியும். 262 அதை சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லா சுகமடைதலும் தெய்வீக சுகமளித்தலாய் இருக்கிறது. அதைச் செய்கின்ற முறைகளை தேவன் வைத்திருக்கிறார். 263 இப்பொழுது நீங்கள், “நல்லது, சகோதரன் பிரான்ஹாம், எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு தசை வளர்ச்சியை அல்லது குடல் வால்வு வளர்ச்சியை வைத்தியர் மட்டும் அதை வெட்டி வெளியே எடுக்காதிருந்தால் நான் மரித்துப் போயிருப்பேன்” என்கிறீர்கள். 264 அது ஒருக்கால் இருக்கலாம். அதுவே ஒரு உண்மையாக இருக்கக்கூடும். ஆனால் வைத்தியர் உங்களை ஒருபோதும் சுகப்படுத்தவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? வைத்தியர் அந்த தடையை நீக்கிப் போட்டார். அவர் வெறுமனே அந்த குடல் வால்வு வளர்ச்சியை வெட்டி எடுத்தார். அந்தக் காரியம்தான் அங்கே உங்களை துன்புறுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அவர் அதை ஒருபோதும் சுகப்படுத்தவில்லை. 265 நீங்கள் உங்களுடைய புயத்தை உடைத்துக் கொண்டீர்கள். நீங்கள், “நல்லது, நான் உடைத்துக் கொண்டேன்…நான் பந்தயம் கட்டியிருக்கிறேன். நீங்கள் உங்கள் புயத்தை உடைத்துக் கொண்டால், நீங்கள் ஒரு வைத்தியரிடத்திற்கு போவீர்கள்” என்கிறீர்கள். நான் நிச்சயமாய் செய்வேன். ஆனால் அவரால் அதை சுகப்படுத்த முடியாது. 266 நான் போய், “வைத்தியரே, என்னுடைய கரத்தை உடனே சுகப்படுத்தும், நான் இன்று பிற்பகல் என்னுடைய மோட்டார் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும்” என்று கூறினால் என்னவாயிருக்கும்? புரிகின்றதா? ஏன் அவர்—அவர் அறிந்து கொள்வார். எனக்கு மனநிலை சுகம் தேவையாயிருக்கிறது. 267 அவர், “என்னால் உம்முடைய புயத்தை பொருத்த முடியும்” என்று கூறுவார். ஆனால் சுகப்படுத்தியது யார்? 268 நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், பென்சிலினைக் குறித்து என்ன? அவர்கள் உங்களுடைய சரீரத்திலுள்ள கிருமிகளுக்காகவும், ஒழுக்கக்கேட்டினால் ஏற்படுகிற மற்றும் உங்களுக்கு என்ன இருந்தாலும் சளிக்காய்ச்சல் போன்ற நோய்களுக்காகவும் அதை உங்களுக்கு கொடுக்கும்போது, என்கிறீர்களே. பென்சிலின்…பென்சிலின் உங்களை சுகப்படுத்துகிறதில்லையா?” இல்லை ஐயா. 269 பென்சிலின், பென்சிலின் ஒரு உயிர் எதிரி, ஒரு உயிர் எதிரி கொல்லுவதாயிருக்கிறது. உயிர் எதிரி கொல்லுகிறது. மற்றெல்லா மருந்துகளுமே கொல்லுகின்றன. மருந்து சுகப்படுத்துகிறதில்லை. அது கொல்லுகிறது. மருந்து ஒரு கொலையாளி, ஒரு சுகமளிப்பவரல்ல. சுகப்படுத்துகிற ஒரு மருந்தை எனக்குக் காட்டுங்கள். கொல்லாமலிருக்கிற ஒரு மருந்தை எனக்குக் காட்டுங்கள். உங்களுக்கு எந்த மருந்தும் கிடைக்காது. மருந்து கொல்லுகிறது, கிருமியைக் கொல்லுகிறது. 270 உங்களுடைய வீட்டில் எலிகள் இருந்ததினால், நீங்கள் எலி விஷத்தைப் போட்டது போன்றே. எலிகள் உங்களுடைய வீடுகளினூடாக துளைகளை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது. நல்லது. இப்பொழுதோ எலிவிஷம் எலிகளை கொல்லுகிறது. ஆனால் அது உங்களுடைய வீட்டை சரிப்படுத்துவதில்லை. புரிகின்றதா? பென்சிலின், பென்சிலின் கிருமிகளைக் கொல்லுகிறது. ஆனால் கிருமிகள் தின்றிருக்கின்ற அந்த இடத்தை தேவன்தான் சுகப்படுத்த வேண்டு. நான் என்ன சொல்லுகிறேன் என்று பார்த்தீர்களா? 271 எப்படியிருந்தாலும், தேவனுடைய வார்த்தை, நாம் அதற்குள்ளாக போகப் போகிறோம். தேவனுடைய வார்த்தையானது தனக்குத்தானே குறுக்கிட்டுக் கொள்ள முடியாது. அது முற்றிலும் சத்தியமாயிருக்கிறது…எழுப்புதலின்போது எந்த நேரத்திலும் அந்த நபர் வந்து, உங்களுடைய விரலை வார்த்தையின்மேல் வைத்து, தேவனுடைய வார்த்தையில் ஒரு முரண்படுத்துதலை, எங்கே அது ஒன்றையொன்று எதிர்த்தது என்பதையும், அது வார்த்தையினால் சரிப்படுத்த முடியாது என்பதையும் எனக்குக் காட்ட நான் விரும்புகிறேன். அது அங்கே இல்லை. நிச்சயமாக, அங்கே வார்த்தையில் முரண்பாடென்பதே கிடையாது. முற்றிலுமாக. 272 நீங்கள் ஒரு பொருளை எடுத்துக்கொள்ளுங்கள். என்னால் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி ஏதாவது காரியத்தை உங்களுக்கு கூற முடியும். உங்களுக்கு இன்னொரு கடிதம், மற்றும் இன்னொரு கடிதம் எழுத முடியும். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? இந்த இரண்டும், இரண்டு வித்தியாசமான பொருளின் மேல் பேசிக் கொண்டிருந்ததாகும். புரிகின்றதா? நிச்சயமாக. 273 ஆனால் தேவன் ஒருவர் மட்டுமே எப்பொழுதும் சுகப்படுத்தினவராயும், எப்பொழுதும் சுகப்படுத்துகிறவராயும் அல்லது எப்பொழுதுமே சுகப்படுத்தக்கூடியவராகவும் இருக்கிறார். உங்களுடைய கரத்தை நீங்கள் உடைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நான் கூறுவேன்… “நல்லது, எனக்கு ஒரு கட்டி இருக்கிறது. அதைக் குறித்து என்ன?” சரி. 274 இப்பொழுது அந்த கட்டி எங்கே மாட்டிக் கொண்டிருக்கிறதோ, அந்த சிறிய இடத்தை, தேவன் அந்த கேட்டை வெளியே துரத்தினால் அந்த கட்டியிலிருந்து ஜீவன் வெளியே போகின்றது. அது மரிக்கும். 275 வைத்தியர் அதை வெட்டி எடுத்துவிட்டால், அப்பொழுது வைத்தியர் அதை எங்கே வெட்டினாரோ அந்த இடத்தை தேவனே சுகப்படுத்த வேண்டும். நீங்கள் சுகமடையவில்லையென்றால், நீங்கள் இரத்தமிழ்ந்து மரிப்பீர்கள். அது சரிதானே? அவர் உங்களிடத்திலிருந்து குடல்வால்வு வளர்ச்சியை வெளியே எடுத்துவிட, தேவன் அதை சுகப்படுத்தவில்லையென்றால் அப்பொழுது அதைக் குறித்து என்ன? நீங்கள் அங்கேயே மரித்துப் போவீர்கள். 276 நிங்கள் இந்த வீதியிலுள்ள முக்கியமான குழாய்கள் ஒன்றில் தடையைப் போடுங்கள். நீங்கள் இங்கே போய் முக்கியமான குழாய்கள் ஒன்றில் தடையைப் போடுங்கள். இந்தத் தெருவில் உள்ள இந்த சாக்கடைக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை கண்டறியுங்கள். 277 நீங்கள் இங்கே போய் முக்கிய குழாயில் தடையைப் போடுங்கள் அங்கே கீழே இருக்கின்ற முக்கியமான தண்ணீர் குழாய் வால்வை மூடி விடுங்கள். தண்ணீர் வால்வுகளில் ஒன்று அதை என்ன செய்கிறது என்று கவனியுங்கள். இங்கேயுள்ள அந்தக் குழாய் அமைப்பு ஒழுங்குமுறை அப்படியே அதை வெடிக்கச் செய்து வெளியே தள்ளும். 278 இந்த உலகத்தில், மனித சரீரத்தைப் போன்ற ஒரு இடமும் இல்லை, ஒரு காரியமும் இல்லை. ஒரு ஒழுங்கு முறையும் இல்லை. ஆனால் நீங்கள் ஒரு இரத்தக் குழாயை எடுத்து இரண்டு துண்டாக வெட்டி, அதை இங்கே பிணைத்து முடித்து வையுங்கள். அந்த இரத்தத்தை வேறிவழியாய் கொண்டு செல்ல தேவன் ஒரு வழியை உண்டு பண்ணி அதை மீண்டும் அந்த இரத்தக்குழாய்களுக்குள் கொண்டு செல்வார். அதை அப்படிச் செய்யவில்லை என்றால் ஒரு நிமிட நேரத்தில் அது அப்படியே திரும்பி உன்னுடைய இருதயத்தை தாக்கி, [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை சுடக்கிடுகிறார்.] முதல் முறையாக இந்தவிதமாக, நீ உன்னை சொரிந்து கொள்ளும் முன்னே, நீ மரித்துப் போவாய். 279 சுகமளிப்பவர் யார்? ஓ என்னே! தேவனே சுகமளிப்பவர். பாருங்கள், வேறு எந்த விதமான இயங்கு சக்தி முறைகளும் அதைப் போன்று கிரியை செய்ய முடியாது. அது இயற்கைக்கு மேம்பட்டதாய் இருக்க வேண்டும். 280 நான் என்னுடைய இரண்டு கால்களிலும் இரத்தக்குழாய் இரண்டாக சுடப்பட்டவனாய் இருந்தேன். புரிகின்றதா? தேவன்…அங்கே நான் ஒரு பாவியான சிறு பையனாய், அந்த வயலில் மரித்துக் கொண்டிருந்தேன். நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினதை அவர் அறிந்திருந்தார். அவர் அந்த இரத்தத்தை பக்க வழியாய் கடந்து போகச் செய்தார். யாராவது கூறினால் ஒழிய அல்லது நான் குனிந்து அந்த காயத்தழும்பை பார்க்க நேர்ந்தாலொழிய அதைக் குறித்து கூட எனக்கு ஒன்றுமே தெரியாது. புரிகின்றதா? தேவன் இரத்தக்குழாய்களுக்குள் இருந்தாரே! 281 இதன் மேலுள்ள அந்த முக்கியமான குழாயை உடையுங்கள். இந்தக் குழாய் ஒழுங்கு முறையில் இங்கே வெளியே உள்ள குழாயில் இங்கே செயல்முறையில் என்ன சம்பவிக்கிறதென்று கவனியுங்கள். நிச்சயமாக, அது வெடித்து விடும். தண்ணீரானது அந்த விதமாக கீழே அழுத்தி தள்ளப்படுவதால், அது அப்படியே பின்னிட்டுத் தள்ளும். 282 ஆனால் தேவன் ஒரு பக்க வழியை உண்டாக்கி, சுற்றிப் போகச் செய்கிறார். அதைச் செய்கிறது யார்? எந்த அறிவு நுட்பம் அதைச் செய்கிறது? அதைச் செய்யும் ஒரு தண்ணீர் ஒழுங்கு முறையை எனக்குக் காட்டுங்கள். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை சேர்ந்து மூன்று முறை தட்டுகிறார்.—ஆசி.] அல்லேலூயா! அது தேவனுடைய அறிவு நுட்பமாயிருக்கிறது. அதைச் செய்கிறது மகத்தான சிருஷ்டி கர்த்தராய் இருக்கிறது. ஆம், நிச்சயமாக. 283 ஒரு மரத்தை மற்றொன்றிலிருந்து வித்தியாசப்படும்படி செய்கிறது எது? ஒரு பறவையின் நிறம் மற்றொன்றிலிருந்து வித்தியாசப்படும்படி செய்கிறது எது? அவனுடைய பேச்சை வித்தியாசப்படச் செய்கிறது எது? நாம் இருக்கிற பிரகாரமாக நம்மை ஆக்குகிறது எது? ஒரு அறிவு நுட்பம், அது தேவனாய் இருக்கிறது. 284 இப்பொழுது நீங்கள் பயந்து விடாதீர்கள். அவர் உண்டு பண்ணின…இது அவருடைய வாக்குத்தத்தமாய் இருக்கிறது. அது சகோதரன் பிரான்ஹாம் அல்ல. அது அவருடைய வாக்குத்தத்தமாய் இருக்கிறது. “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே.” “யாராவது சுகவீனமாய் இருந்தால், சபையின் மூப்பர்களை வரவழைத்து அவர்களுக்கு எண்ணெய் பூசி அவர்களுக்காக ஜெபியுங்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன. வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்களானால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்”. பின்னர் அந்த ஒழுங்கு முறையானது செய்யப்பட்டிருக்கும்பொழுது, அதை அப்படியே மாறாமல் ஏற்றுக் கொள்கையிலே, நீங்கள் இங்கேயே மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். நேராக நடந்து சென்று, “அது ஒரு முடிவு பெற்ற வேலையாக இருக்கிறது. அதெல்லாம் முடிந்து விட்டது” என்று கூறுங்கள். புரிகின்றதா? 285 ஆனால் நாம் ஒரு மகத்தான பிரபலமான அற்புதம் சம்பவிக்க கவனித்துக் கொண்டிருக்கிறோம். அதை அங்கே சம்பவிக்கச் செய்ய போதுமான அளவு விசுவாசம் இருக்கும்போது அது சம்பவிக்கிறது. ஆனால் அதை சம்பவிக்கச் செய்ய அங்கே போதுமான அளவு விசுவாசம் இல்லையென்றால், எப்படி இருந்தாலும் சீக்கிரத்தில் அது சம்பவிக்கும். 286 அவர் மலையைக் குறித்து பேசினபோது, அங்கே மொழி பெயர்ப்பில் இயேசு என்ன கூறினார் என்பதை பாருங்கள். அவர், “சீக்கிரத்தில் சம்பவிக்கும். நீங்கள் இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து போ என்று கேட்டுக் கொண்டு, உங்கள் இருதயத்தில் விசுவாசித்தால் அது அதனைச் செய்யும்” என்றார். “விரைவில் அது நிறைவேறும்” என்றார். புரிகின்றதா? அது நிறைவேறும். இப்பொழுது நீங்கள் சுகவீனமாய் இருக்கிறீர்கள். உங்களில் அநேகர் பயங்கரமான நிலையில் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். 287 இப்பொழுது அவைகள் ஒரு மனிதனைப் பற்றிக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். மனிதனோ மிகவும் வியாதியாயிருக்கிறான். புற்று நோய் ஒரு பயங்கரமான காரியமாய் இருக்கிறது. ஆனால் தேவனால் புற்று நோயை சுகப்படுத்த முடியும். என்னே! என்னால் இங்கே உள்ளே உன்னைக் காட்ட முடியும். இங்கே எப்பொழுதாவது இருந்திருந்தவர்களில் எத்தனைப் பேர்…புற்றூ நோயினால் சுகமாக்கப்பட்டிருக்கிறவர்கள்? யாராவது இங்கே இருக்கின்றீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இங்கே பாருங்கள், அது சபை முழுவதுமாக இருக்கிறது. புரிகின்றதா? நிச்சயமாக எல்லா இடத்திலுமே நாம் அவர்களை கொண்டு வந்திருக்கிறோம், ஏனென்றால் தேவன் சுகம் அளிப்பவராக இருக்கின்றார். 288 இப்பொழுது அங்கே வெளியே இருக்கின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுதலை கூறுகிறேன். உங்களுடைய தலைகளை நீங்கள் வணங்கி, நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சகோதரன் நெவில் இங்கே வாரும், இப்பொழுது ஜனங்களாகிய நீங்கள்…மூப்பர்களை இங்கே வரும்படியாய் நான் விரும்புகிறேன், நாம் ஜனங்களுக்காக ஜெபிக்கலாம். நீங்கள் வரும்பொழுது இதை இப்பொழுது செய்யுங்கள். நீங்கள் இங்கே வரும்பொழுது உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். என்னுடைய வார்த்தையை அப்படியே…என்னுடைய வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால் தேவனுடைய வார்த்தையை அதற்கென எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியே உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை சேர்த்து ஒருமுறை தட்டுகிறார்.—ஆசி.] அது காரியத்தை தீர்த்து வைக்கிறது. அதுதான் அது. அது எல்லாம் முற்றுப் பெற்றுவிட்டது. தேவன் அவ்வண்ணமாய் கூறியிருக்கிறார். அவருடைய வார்த்தை அவ்வண்ணமாய் கூறியுள்ளது. அது தவறிப்போக முடியாது. 289 “நான் எப்படி உணருகிறேன் என்று எனக்கு கவலையில்லை. எப்படியிருந்தாலும் அதுதான் சத்தியமாய் இருக்கிறது” என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகிறேன். என்ன சம்பவிக்கிறது என்று கவனியுங்கள். 290 ஆனால், பாருங்கள், நாங்கள் பின்னாக நின்று, கூறுவோமேயானால், இந்த விதமாக ஜெப வரிசையில் வாருங்கள். அப்படி ஒருபோதும் சம்பவியாது. அவ்வளவுதான்.